search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா ஜாஸ்
    X
    ஹோண்டா ஜாஸ்

    2020 ஹோண்டா ஜாஸ் இந்தியாவில் வெளியானது

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 ஜாஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஹேட்ச்பேக் மாடல் - வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 துவக்க விலை ரூ. 7,49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. இதற்கான முன்பதிவு கட்டணம் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     ஹோண்டா ஜாஸ்

    ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    2020 ஹோண்டா ஜாஸ் காரில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப பயனர்கள் ஒன்-டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×