என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பிரீமியம் விலையில் ஹோண்டா ஹார்னெட் 2.0 இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்28 Aug 2020 7:27 AM GMT (Updated: 28 Aug 2020 7:27 AM GMT)
ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா நிறுவனம் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல் விலை ரூ. 1,26,345, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
நேக்கட் ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஹார்னெட் 2.0 எல்இடி லைட்டிங், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் ஃபியூயல் டேன்க், ஸ்டெப்-அப் சேடிள் மற்றும் சிறிய எக்சாஸ்ட் மஃப்ளர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் செவ்வக வடிவத்தில், எல்சிடி டிஸ்ப்ளே, ஹசார்ட் லைட் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் பியல் இக்னியஸ் பிளாக், மேட் சங்லியா ரெட் மெட்டாலிக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மொத்தம் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்புறம் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இரு சக்கரங்களிலும் பெட்டல்-டைப் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹார்னெட் 2.0 மாடலில் 184சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்ககப்பட்டுள்ளது. இது 16.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் ஹீரோ எக்ஸ்டிரீம் 200ஆர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Next Story
×