search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி செலரியோ
    X
    மாருதி சுசுகி செலரியோ

    புதிய தலைமுறை மாருதி செலரியோ வெளியீட்டு விவரம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2020 மாருதி சுசுகி செலரியோ மாடல் முற்றிலும் புது வடிவமைப்பில், மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
     
    முன்னதாக செலரியோ மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்ஃபார்மிலேயே வேகன்ஆர் மாடலும் உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

     மாருதி சுசுகி செலரியோ

    புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இது பார்க்க வேகன்ஆர் ஹேட்ச்பேக் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    தற்சமயம் விற்பனையானகும் செலரியோ மாடல் 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது மாருதியின் என்ட்ரி லெவல் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ. 4.46 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×