search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வாகனங்கள்
    X
    வாகனங்கள்

    இந்தியாவில் வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

    இந்தியாவில் வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு சான்று போன்றவை அடங்கும்.

    அனைத்து விதமான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     வாகன சோதனை

    மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு ஆவணங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஆவணங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் அரசு அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    ஊரடங்கு காரணமாக ஏற்கனவே வாகன ஆவணங்களின் வேலிடிட்டி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×