search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ ஆர்1250
    X
    பிஎம்டபிள்யூ ஆர்1250

    9 ஆயிரம் மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்யும் பிஎம்டபிள்யூ

    பிஎம்டபிள்யூ நிறுவனம் 9 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் அமெரிக்காவில் 9392 மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரீகால் அக்டோபர் 6  ஆம் தேதி துவங்க இருக்கிறது. பிரேக்கிங் பாகங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதே மோட்டார்சைக்கிள்கள் ரீகால் செய்வதற்கான காரணம் என கூறப்படுகிறது.

    இந்த ரீகாலில் 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்1250ஜிஎஸ், ஆர்1250ஜிஎஸ் அட்வென்ச்சர், ஆர்1250ஆர்டி, எஸ்1000ஆர்ஆர் மற்றும் எஸ்1000எக்ஸ்ஆர் என ஐந்து மாடல்கள் அடங்கும். 

     பிஎம்டபிள்யூ ஆர்1250

    ரீகால் செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களில் முன்புற பிரேக் கேலிப்பர் பார்க் செய்யப்பட்ட நிலையில், பிரேக் ஃபுளூயிட்டை லீக் செய்யலாம் என கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிரேக்குகள் சீராக இயங்காமல் போகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

    பிரச்சனையை சரி செய்ய பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஆய்வு செய்து முன்புற பிரேக் கேலிப்பரை இலவசமாக மாற்றி தர இருக்கிறது. இதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ரீகால் செய்வது பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 
    Next Story
    ×