search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா எக்ஸ் பிளேடு
    X
    ஹோண்டா எக்ஸ் பிளேடு

    ஹோண்டா எக்ஸ் பிளேடு பிஎஸ்6 விலையில் திடீர் மாற்றம்

    ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளை கடந்த மாதம் ரூ. 1.05 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் சிங்கில் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 576 வரை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி புதிய பிஎஸ்6 ஹோண்டா எக்ஸ் பிளேடு சிங்கில் டிஸ்க் ரூ. 1,06,687 என்றும் டபுள் டிஸ்க் விலை ரூ. 1,10,968 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், கம்பீரமாக டேன்க் டிசைன், டூயல் அவுட்லெட் மஃப்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் லின்க் டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப் ரெயில், அழகிய வீல் ஸ்டிரைப்கள், அன்டர் கவுல், முன்புறம் ஃபோர்க் கவர் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது.

     ஹோண்டா எக்ஸ் பிளேடு

    இந்த மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக 160சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மற்றும் ஹோண்டா இகோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13.67 பிஹெச்பி பவர், 14.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களிலும் பியல் ஸ்பாட்டன் ரெட், பியல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×