search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6
    X
    பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6

    விரைவில் இந்தியா வரும் ஏழு பெனலி மோட்டார்சைக்கிள்கள்

    பெனலி இந்தியா நிறுவனம் ஏழு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.

    பெனலி இந்தியா நிறுவனம் விரைவில் தனது பெனலி டிஆர்கே 502, டிஆர்கே 502எக்ஸ், லியோன்சினோ 500, பெனலி 302எஸ், பெனலி 302ஆர், பெனலி லியோன்சினோ 250, பெனலி டிஎன்டி 600ஐ என ஏழு மோட்டார்சைக்கிள்களுக்கு பிஎஸ்6 அப்டேட் வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    பிஎஸ்6 அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் வெளியீட்டு தேதி பற்றி பெனலி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள்களின் விலை பிஎஸ்4 வெர்ஷன்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

    பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6

    முன்னதாக பெனலி நிறுவனம் தனது இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. இதன் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்சமயம் பிஎஸ்6 அப்டேட் பெற்ற பெனலி நிறுவனத்தின் ஒரே மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 இருக்கிறது.

    புதிய பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 1.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடலின் விநியோகமும் துவங்கப்பட்டு விட்டது.

    பிஎஸ்6 மாடலில் 374சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×