search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர்
    X
    2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர்

    இந்தியாவில் 2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் அறிமுகம்

    டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய 2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் விலை ரூ. 11.33 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிள் கோபால்ட் புளூ மற்றும் ஜெட் பிளாக் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜெட் பிளாக் மற்றும் டூயல்-டோன் ஃபியூஷன் வைட் மற்றும் பிளாக், கோல்டன் பின்ஸ்டிரைப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பாபர் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர்

    எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் சப்ஃபிரேம், சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் பிலியன் சீட் உள்ளிட்டவை வித்தியாசமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1200சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 76 பிஹெச்பி பவர், 106 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் முன்புறம் பிரெம்போ பிரேக்கும், பின்புறம் நிசின் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.

    ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டு டிரையம்ப் ஸ்பீடுமாஸ்டர் ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×