என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கியா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் புதிய காருக்கான முன்பதிவை துவங்கி உள்ளதாக தெரிகிறது.
புதிய சொனெட் மாடல் முன்பதிவை கியா மோட்டார்ஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை. எனினும், சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் டெல்லியில் இயங்கி வரும் கியா மோட்டார்ஸ் விற்பனையாளர்கள் புதியசொனெட் மாடலுக்கான முன்பதிவை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கியா சொனெட் முன்பதிவு கட்டணம் ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி ரூ. 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சொனெட் மாடல் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனையகங்களுக்கும் வரும் என கூறப்படுகிறது. இதன் விலை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
இந்தியாவில் கியா சொனெட் மாடல் விலை ரூ. 7 லட்சத்தில் துவங்கி ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஜாஸ் பிஎஸ்6 மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் புதிய ஜாஸ் பிஎஸ்6 காருக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலின் முன்பதிவு ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.
புதிய ஹோண்டா கார் முன்பதிவை விற்பனையகங்களில் மேற்கொள்வோருக்கு ரூ. 21 ஆயிரமும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய ஹோண்டா காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா நிறுவனத்தின் இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலை இந்தியாவில் திடீரென மாற்றப்பட்டு உள்ளது.
யமஹா பிஸ்6 ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மூன்று மாடல்களின் விலையையும் உயர்த்தியது. தற்சமயம் இவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
யமஹா 125சிசி ஸ்கூட்டர்கள் மற்றும் பேசினோ 125 மற்றும் ரே இசட்ஆர் 125 மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது. தற்சமயம் இரு மாடல்களின் விலையும் முறையே ரூ. 1500 மற்றும் ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

அதன்படி பேசினோ டிரம் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 68730 என்றும் டிரம் டீலக்ஸ் விலை ரூ. 69730 என்றும் டிஸ்க் ஸ்டேன்டர்டு வேரியண்ட் ரூ. 71230என்றும் டாப் எண்ட் மாடலான டிஸ்க் டீலக்ஸ் விலை ரூ. 72230 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று ரே இசட்ஆர் 125 டிரம் மாடல் விலை ரூ. 69530 என்றும் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 72530 என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 73530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் என்டார்க் 125 எல்லோ ரேஸ் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை எல்லோ மற்றும் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி டிவிஎஸ் மோட்டார்ஸ் இரு வேரியண்ட்களை விற்பனையாளர்களுக்கு அனுப்ப துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட என்டார்க் ஸ்கூட்டர் விரைவில் விற்பனை மையங்களை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் என்டார்க் மாடலுக்கு அமோக வரேவேற்பு கிடைத்து வருகிறது. புதிய எல்லோ மற்றும் பிளாக் நிற வேரியண்ட்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என தெரிகிறது.
டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1 பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் விற்பனையகங்களில் தேர்வு செய்யப்பட்ட ஷோரூம்களில் டாடா கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த பலன்களை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சலுகை டாடா அல்ட்ரோஸ் மற்றும் நெக்சான் இவி மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.
டாடா ஹேரியர் எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் மற்றும் டார்க் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டாடா நெக்சான் மாடலுக்கு ரூ.5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, டீசல் வேரியண்ட்டிற்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டாடா டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபோர்டு நிறுவனம் தனது எண்டெவர் பிஎஸ்6 காரின் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 மாடல்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் துவக்க விலை ரூ. 29.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபோர்டு எண்டெவர் மாடல் டைட்டானியம் 4x2 ஏடி, டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி மற்றும் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஏற்கனவே இந்த மாடல்களின் விலையை உயர்த்த ஃபோர்டு திட்டமிட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விலை உயர்வு தாமதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎஸ்6 ரக எண்டெவர் மாடல்களின் விலை ரூ. 44 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. டைட்டானியம் 2.0 4x2 ஏடி மாடல் துவக்க விலை ரூ. 29.99 லட்சம், டைட்டானிம் பிளஸ் 2.0 4x2 ஏடி மாடல் ரூ. 32.75 லட்சம், டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி மாடல் விலை ரூ. 34.45 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2020 ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 காரில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எவோக் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 6061 எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பிரம்மாண்ட பேட்டரி பேக் மற்றும் தலைசிறந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கின்றன.
இதல் உள்ள 120 கிலோவாட் மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே ஆகும். இதற்கு மோட்டார்சைக்கிளை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.

எவோக் 6061 மாடலில் வட்ட வடிவத்தில் எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலர் தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் டெயில் பகுதியை பார்க்க டுகாட்டி டையவெல் போன்று காட்சியளிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 24.8kWh லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சிட்டி மோடில் ஓட்டும் போது இந்த மோட்டார்சைக்கிள் 470 கிலோமீட்டர் வரை செல்லும். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது 265 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய எவோக் 6061 விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 24995 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 2015 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகளை கொண்டாடும் கிரெட்டா மாடல் விற்பனையில் இதுவரை ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த கிரெட்டா மாடல் முதல் நான்கு மாதங்களில் 70 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்தது. பின் எட்டே மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. ஒரே ஆண்டில் இந்த மாடல் உற்பத்தி பணிகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு கிரெட்டா ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சந்தையில் இது 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த மாடல் ஒரே மாதத்தில் 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டது.
பின் 2019 ஆண்டடு துவக்கத்தில் கிரெட்டா மாடல் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்தது. இதில் 3.7 லட்சம் யூனிட்கள் இந்தியாவிலும் 1.4 லட்சம் யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்டிரீட் 750 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது ஸ்டிரீட் 750 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையில் ரூ. 65 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 4.69 லட்சத்தில் துவங்குகிறது. இந்த விலை விவிட் பிளாக் நிற மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவிட் பிளாக் மட்டுமின்றி ஆரஞ்சு, பிளாக் டெனிம், விவிட் பிளாக் டீலக்ஸ் மற்றும் பரக்குடா சில்வர் டீலக்ஸ் போன்ற மாடல்களின் விலை ரூ. 12 ஆயிரம் வரை அதிகம் ஆகும். முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 5.34 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்டிரீட் 750 பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 ரக 749சிசி, வி ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 60 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புத்தம் புதிய சொனெட் எஸ்யுவி மாடலின் சர்வதேச வெளியீட்டை இந்தியாவில் நடத்தி இருக்கிறது. புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும்.
முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த மாடலுக்கு இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. புதிய கியா சொனெட் மாடஸ் ஹூண்டாய் வென்யூவை தழுவி உருவாகி இருக்கிறது.

கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இந்தியாவில் கியா சொனெட் மாடல் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விலை ரூ. 8 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
யமஹா நிறுவனத்தின் எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனையகங்களுக்கு வர துவங்கி உள்ளன.
யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் மேம்பட்ட என்ஜின் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இரு மாடல்களும் விற்பனையகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. வீடியோ வெளியாகி இருப்பதை தொடர்ந்து இரு மாடல்களின் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

இரு மோட்டார்சைக்கிள்களிலும் 249சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.5 பிஹெச்பி பவர், 20.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய பிஎஸ்6 மாடல்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எஃப்இசட்25 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் புளூ நிறங்களிலும் எஃப்இசட்எஸ்25 மாடல் பிளாட்டினா கிரீன், வைட் வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இந்த வேரியண்ட் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் பஜாஜ் டாமினர் 250 மாடலுக்கு போட்டியாக அமைகின்றன.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ரெனால்ட் விரைவில் டஸ்டர் மாடலின் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரெனால்ட் டஸ்டர் புதிய வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த என்ஜினை ரெனால்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த காரின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதிய 1.3 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 153 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக சிவிடி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.






