என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஃபெராரி நிறுவனத்தின் எஃப்8 டிரிபியூட்டோ சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் சூப்பர் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 4.02 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபெராரி காரை டெல்லியில் உள்ள ஃபெராரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரான செலக்ட் கார்ஸ் அறிமுகம் செய்தது. 

    புதிய ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் விநியோகம் விரைவில் துவங்க உள்ளது. முன்னதாக ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ மாடல் 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபெராரி சூப்பர் காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ

    இந்த என்ஜின் 710 பிஹெச்பி பவர், 770 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 340 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    காரின் உள்புறம் எஃப்8 டிரிபியூட்டோ மாடலில் 7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஹெச்எம்ஐ (ஹியுமன் மெஷின் இன்டர்ஃபேஸ்) ஸ்டீரிங் வீல் மற்றும் புதிய ரவுண்ட் ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
    டொயோட்டா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய காம்பேக்ட் எஸ்யுவியான அர்பன் குரூயிசர் மாடல் விரைவில் வெளியாகும் என அறிவித்து இருந்தது. 

    இந்திய சந்தையில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கும் டோயோட்டா அர்பன் குரூயிசர் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் டொயோட்டா விற்பனையகங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் புதிய அர்பன் குரூயசர் மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. 


     டொயோட்டா அர்பன் குரூயிசர்

    இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

    காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    ஹோண்டா நிறுவனத்தின் 2021 சிபிஆர்600ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


    ஹோண்டா நிறுவனம் 2021 சிபிஆர்600ஆர்ஆர் மோட்டார்சைக்கிளுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. புதிய டீசரின் படி இதன் ஸ்டைலிங் சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் மெல்லிய எல்இடி ஹெட்லைட் மற்றும் மேம்பட்ட கலர் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய மாடல்களை போன்றே புதிய மோட்டார்சைக்கிளிலும் அன்டர்-சீட் எக்சாஸ்ட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங் மட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் என்ஜின் புதிய எமிஷன் விதிகளுக்கு பொருந்துவதற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

     2021 ஹோண்டா சிபிஆர்600ஆர்ஆர்

    அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் 110 பிஹெச்பி பவர் வழங்கும் என தெரிகிறது. 2021 சிபிஆர்600ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடலில் 599 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல்லி டிஜிட்டல் டிஸ்ப்ளே, அப்சைடு டவுன் டெலிஸ்கோபிர் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்படுகிறது. 

    2021 ஹோண்டா சிபிஆர்600ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் முதற்கட்டமாக ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் பின் இந்த மாடல் இந்தியா வரும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோண்டா தனது சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு மாடலுக்கான முன்பதிவை இந்தியாவில் துவங்கியது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் காரினை புதுவித முறையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

    டாடா நெக்சான் இவி காரை வாங்க விருப்பம் இருந்தும் வாங்க தயக்கம் கொண்டவர்களை கவரும் வகையில் டாடா மோட்டார்ஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் மாதாந்திர சந்தா அடிப்படையில் வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து இருக்கிறது.

    புதிய திட்டத்தை செயல்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரிக்ஸ் இன்ஃபிராஸ்டிரக்ச்சர் சர்வீசஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. தற்சமயம் மாதாந்திர சலுகையில் டாடா நெக்சான் இவி எக்ஸ்இசட் பிளஸ் வேரியண்ட் கிடைக்கிறது. அதன்படி காரை 18 மாதங்களுக்கு பயன்படுத்துவோர் மாதம் ரூ. 47900 செலுத்தலாம்.

     டாடா நெக்சான் இவி

    இதேபோன்று 24 மாதங்களுக்கு காரை பயன்படுத்த நினைப்போர் மாதம் 44900 ரூபாயையும் 36 மாதங்களுக்கு பயன்படுத்த விரும்புவோர் மாதம் ரூ. 41900 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் வரிகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த திட்டத்தில் காரை பயன்படுத்த அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்த பின், வாடிக்கையாளர் வீட்டில் சார்ஜர் பொருத்தப்பட்டு எலெக்ட்ரிக் கார் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிட்டெட் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டொயோட்டா நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 34.98 லட்சம் மற்றும் ரூ. 36.88 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் பிரத்யேக காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மாடலில் டூயல் டோன் ரூஃப், ரக்கட் சார்கோல் பிளாக் ஆர்18 அலாய் வீல்கள், 360 டிகிரி பானரோமிக் வியூ மாணிட்டர், ஆட்டோ ஃபோல்டு ஒஆர்விஎம், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃபிள் பிளேட் வழங்கப்பட்டுள்ளது.

     டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிட்டெட் எடிஷன்

    இத்துடன் ஹெட் அப் டிஸ்ப்ளே, டையர் பிரெஷர் மாணிட்டர், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் வெல்கம் டோர் லேம்ப், ஏர் ஐயோனைசர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஏர் ஐயோனைசர் அம்சம் கொண்ட முதல் டொயோட்டா கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    புதிய டொயோட்டா காரில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இறுக்கிறது. புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகத்தில் ரூ. 15 லட்சம் செலுத்தி மேற்கொள்ள முடியும்.

    புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும். கடந்த மாதம் ஆடி ஆர்எஸ்7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய கார் இந்த ஆண்டு அறிமுகமாகும் இரண்டாவது ஆர்எஸ் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     ஆடி ஆர்எஸ் கியூ8

    ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

    புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    கவாசகி நிறுவனத்தின் 2020 இசட்650 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய விற்பனையகம் வர துவங்கி விட்டது.
     

    2020 கவாசகி இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் 2020  இசட்650 பிஎஸ்6 மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 5.94 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இது முந்தைய பிஎஸ்4 வெர்ஷன் விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும். 2020 கவாசகி இசட்650 மாடலில் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், கூர்மை மற்றும் கம்பீர தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

     2020 கவாசகி இசட்650

    புதிய மோட்டார்சைக்கிளில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 ரக டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாடலில் மேம்பட்ட 649சிசி பேரலெல் ட்வின் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் நின்ஜா 650 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஸ்டான்டர்டு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர 2021 கவாசகி இசட்650 மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி முந்தைய பிஎஸ்4 மாடலில் இருந்தது போன்ற சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் டிஎஸ்ஐ மாடல் வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


    ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் டிஎஸ்ஐ மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஜாக் ஹோலிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

    முன்னதாக ஸ்கோடா கோடியக் டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பின் இந்த ஆண்டு இறுதியில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் இதன் வெளியீடு தாமதமாக கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.

    ஸ்கோடா கோடியக்

    புதிய ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. 190 பிஎஸ் திறன் கொண்ட இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் விற்பனை விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிட்டெட் ஜூலை மாத கார் விற்பனையில் 285 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 1398 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் ஜூலை மாதம் 5383 யூனிட்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

    ஜூலை மாதம் கார்கள் விற்பனையில் வளர்ச்சி நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் வகையில் உற்பத்தியை 60 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறோம் என ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார்.

    ஹோண்டா சிட்டி

    அடுத்த மாதம் கார்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்து உள்ளது. பண்டிகை காலம் என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

    ஹோண்டா நிறுவனம் விரைவில் ஹைப்ரிட் வாகனத்தை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. புதிய ஹைப்ரிட் மாடல் 2021 வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் வெளியீட்டிற்கென ஹோண்டா கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. 
    ஜாவா நிறுவனத்தின் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் இந்தியாவில் துவங்கி உள்ளது.


    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது. ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்கள் இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எனினும் கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் உற்பத்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது.

     ஜாவா மோட்டார்சைக்கிள்

    புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களில் பிஎஸ்6 என்ஜின் கிராஸ் போர்ட் தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இது என்ஜினுக்கு சிறப்பான எமிஷன் கண்ட்ரோல் வழங்குகிறது. மேலும் இது தனித்துவம் மிக்க ட்வின் எக்சாஸ்ட் டிசைனை வழங்குகிறது.

    புதிய என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களின் திராட்டிள் ரெஸ்பான்ஸ் கூர்மையாக மாறி உள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 மாடலில் புதிய பொசிஷன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இது எரிபொருளில் இருந்து வெளியேறும் காற்றின் அளவை கட்டுப்படுத்துகிறது.

    புதிய மாடல்களில் 293சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 26.2 பிஹெச்பி பவர், 27.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பிஎஸ் மாடலை விட சற்றே குறைவான செயல்திறன் ஆகும். இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 8.39 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் ஐந்து வித நிறங்கள் மற்றும் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடல் 1.5 லிட்டர் கே15பி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மாருதி சுசுகி எஸ் கிராஸ்

    புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் வெர்ஷன் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், லெதர் இருக்கைகள், 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் நெக்சா புளூ, கஃபைன் பிரவுன், கிரானைட் கிரே, பியல் ஆக்டிக் வைட் மற்றும் பிரீமியம் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தலைமுறை தார் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய மாடலுக்கான டீசர் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய தார் மாடல் விங் மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதும் தெரிகிறது. 

     மஹிந்திரா தார்

    இத்துடன் புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பும் புகைப்படங்களில் அம்பலமாகி இருக்கிறது. புதிய தார் மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. 

    ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×