என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்6 என்டார்க் 125மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் 125 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. தற்சமயம் என்டார்க் 125 மாடல் விலை ரூ. 1000 உயர்த்தி உள்ளது.
புதிய விலை உயர்வின் படி பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 67885 என்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 71885 என்றும் ரேஸ் எடிஷன் ரூ. 74365 என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1 பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் வெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்தடைந்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் கார் விற்பனையகங்களுக்கு வர துவங்கி விட்டது. இந்தியாவில் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடல் நாளை (ஆகஸ்ட் 5) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் உள்ளதை போன்று எஸ் கிராஸ் மாடலிலும் சுசுகியின் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. முதன்முதலில் இந்த என்ஜின் சியாஸ் மாடலில் வழங்கப்பட்டது. இது 105 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் விரைவில் அர்பன் குரூயிசர் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் அடுத்த மாதம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டாவின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலை தழுவி உருவாகி உள்ளது. அர்பன் குரூயிசர் மாடலை மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக இதே போன்று மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து கிளான்சா மாடலை வெளியிட்டன. இது மாருதி சுசுகியின் பலேனோ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் ஜூலை மாதம் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யுவி மாடல் எது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் மாடலினை அறிமுகம் செய்தது. இந்த மாடல் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமும் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யுவி மாடலாக இருக்கிறது.
ஜூலை மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 7807 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 47 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 5302 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையான காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களில் ஹூண்டாய் வென்யூ இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த கார் சுமார் 6734 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் சரிவு ஆகும்.
டாடா நெக்சான் 4327 யூனிட்களுடன் விற்பனையில் மூன்றாவது இடம் பிடித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நிசான் நிறுவனம் கடந்த மாதம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி கான்செப்ட் மாடலினை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் இன்டீரியர் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் காரின் டேஷ்போர்டு மற்றும் கேபின் ஸ்பேஸ் விசேஷமாக தெரியும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புதிய கார் இன்டீரியர் பிளாக், ரெட் தீம் மற்றும் ஸ்டிட்ச் ஃபேப்ரிக் சீட்களை கொண்டிருக்கிறது. டூயல் டோன் டேஷ்போர்டு ஹனிகொம்ப் டிசைன் மற்றும் பெரிய ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் இதில் நான்கு ஹெக்சாகோனல் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனின் கீழ் ஏசி மற்றும் ஃபேன் கண்ட்ரோல்களுக்கு ரோடரி நாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கன்சோலில் ஆட்டோமேடிக் டிரைவ் செலக்டர் அருகில் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3 ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் காரின் அனைத்து கண்ணாடிகளையும் இயக்க ஒரே பட்டன் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புற இருக்கைகளில் ஃபிக்சட் ஹெட்ரெஸ்ட்களும், பின்புற இருக்கைகளுக்கு லம்பர் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் ஆம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது ஹெக்டார் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம்செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த ஹெக்டார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்திய சந்தையில் வெளியான கார்களில் இணைய வசதி கொண்ட முதல் மாடலாக ஹெக்டார் இருக்கிறது. ஏஐ அசிஸ்டண்ட் வசதி சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹெக்டார் மாடல் விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

விற்பனையில் புதிய மைல்கல் ஒரே ஆண்டிற்குள் எம்ஜி மோட்டார் கடந்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற போட்டி மாடல்களை விட அதிக விற்பனையை பதிவு செய்தது. இதன் காரணமாக இது விரைவில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெ்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 143 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹா நிறுவனத்தின் புதிய ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் விலை திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.
யமஹா நிறுவனம் பிஎஸ்6 ரக ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் மாடலினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்து உள்ளது. இது பிஎஸ்4 மாடல் விலையை விட அதிகம் ஆகும். முன்னதாக மே மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் விலையில் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா தனது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் மாடலின் விலையை ரூ. 2100 வரை உயர்த்தி இருக்கிறது. யமஹா ஆர்15 வி3 மாடல் தண்டர் கிரே, ரேசிங் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

விலை உயர்வின் படி இவை தற்சமயம் ரூ. 1.47 லட்சம், ரூ. 1.49 லட்சம் மற்றும் ரூ. 1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மோட்டார்சைக்கிள் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
புதிய பிஎஸ்6 ஆர்15 வி3 மாடலில் சிங்கிள் சிலிண்டர் 155சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 18.3 பிஹெச்பி பவர், 14.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கார் மாடல்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரெஞ்சு நாட்டின் ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் இந்திய சந்தையின் ஊரக பகுதி விற்பனையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதன் மூலம் நாட்டில் தனது இடத்தை பலப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டு இருக்கிறது.
சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் ஏஎம்டி ட்ரிம்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்தியாவில் புதிய கார்களை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

விரைவில் புதிய டஸ்டர் மாடலை புதிய டர்போ என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யுவியாக இருக்கும் என ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலாபேல் தெரிவித்தார்.
எங்களது வழக்கமான கொள்கைக்கு உண்மையாக இருக்கும் நோக்கில், ரெனால்ட் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தலைசிறந்த மாடல்களை அறிமுகம் செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் மாடலினை ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், புதிய கார் இன்டீரியர் மற்றும் வெளிப்புற வரைபடங்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்திய சந்தையில் சொனெட் மாடல் கியா நிறுவனத்தின் மூன்றாவது கார் ஆகும்.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா சொனெட் மாடல் ஜிடி லைன் மற்றும் டெக் லைன் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சில கியா விற்பனையாளர்கள் சொனெட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என தெரிகிறது. சொனெட் மாடலின் ஜிடி லைன்- ஜிடிகே, ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் பிளஸ் என மூன்று வேரியண்ட்களிலும், டெக் லைன்- ஹெச்டிஇ, ஹெச்டிகே, ஹெச்டிஎக்ஸ் மற்றும் ஹெச்டிஎக்ஸ் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
பிரெஞ்சு நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி மாடல் மூலம் இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த எஸ்யுவி ஏற்கனவே அறிமுகமாக இருந்தது. எனினும், தற்போதைய கொரைனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
சிட்ரான் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிட்ரான் சி5 ஏர்கிராஸ் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

அதன்படி புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை இந்தியாவுக்கான அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்திய தகவல்களின் படி இந்த கார்களுக்கான சோதனை உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதன் மூலம் புதிய கார் விலையை குறைக்க சிட்ரான் திட்டமிட்டு உள்ளது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் நீளம் 4500 எம்எம், அகலம் 1840 எம்எம், உயரம் 1670 எம்எம், வீல்பேஸ் 2730 எம்எம் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 230 எம்எம் ஆகும்.
சிட்ரான் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
கவாசகி நிறுவனத்தின் புதிய இசட்1000 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கவாசகி நிறுவனத்தின் நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலான இசட்1000 மோட்டார்சைக்கிள் எம்வை2021 அப்டேட் வழங்கப்பட்டது. புதிய அப்டேட் மாடல் 2021 சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கவாசகியின் மேம்பட்ட மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது. 2021 இசட்1000 மாடல் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஃபேரிங், ஹெட்லேம்ப் ஷிரவுட், பின்புற ஃபேரிங்கில் சிவப்பு நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இரு சக்கரங்களிலும் சிவப்பு நிற ஸ்டிரைப் செய்யப்பட்டு உள்ளது.

2021 கவாசகி இசட்1000 மாடல் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. இதன் முந்தைய மாடல் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவை தற்சமயம் விற்பனை செய்யப்படுவதில்லை. புதிய நிறம் தவிர இதன் உபகரணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புதிய 20201 இசட்1000 மாடல் லிக்விட் கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர், 1043 சிசி டிஒஹெச்சி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 140 பிஹெச்பி பவர், 111 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தின் வாகனங்கள் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஜூலை மாதத்தில் 41300 யூனிட்களை விற்பனை செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டில் 38200 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 3100 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் ஐஎம்டி வேரியண்ட் மற்றும் ஸ்போர்ட் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய தலைமுறை கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் இதுவரை சுமார் 55 ஆயிரத்திற்கும் அதிக முன்பதவுகளை கடந்துள்ளது. இவற்றில் 20 ஆயிரம் யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை விற்பனையாகி இருக்கும் புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் டீசல் வேரியண்ட் ஆகும்.
ஜூலை மாத விற்பனையில் 98 சதவீதம் உள்நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இத்தகைய வரவேற்புக்கு புத்தம் புதிய கிரெட்டா, வென்யூ, வெர்னா, எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல்கள் முக்கிய காரணம் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார்.






