என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் 2020 ஜூலை மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஜப்பான் நாட்டின் ஹோண்டா இந்திய சந்தையில் சுமார் 321583 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்திற்கு பின் வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வெளிநாடுகளுக்கு ஹோண்டா நிறுவனம் 12.251 யூனிட்களை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 8042 யூனிட்களை ஏற்றுமதி செய்தது.

     ஹோண்டா ஆக்டிவா

    கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் பிஎஸ்6 வாகனங்கள் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 13 மாடல்களை விற்பனை செய்கிறது. சமீபத்தில் ஹோண்டா 2020 சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு மற்றும் ஃபயர்பிளேடு எஸ்பி மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியது.
    ஜிஎம்சி ஹம்மர் இவி மாடல் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஜிஎம்சி ஹம்மர் இவி புதிய டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய டீசர் வீடியோவில் காரின் புதிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. காரின் சில்ஹவுட் விவரங்களில் இது உண்மையான ஹம்மர் பாக்சி கோட்களை கொண்டு இருக்கிறது. 

    ஹம்மர் இவி டீசர்

    புதிய எலெக்ட்ரிக் ஹம்மர் நான்கு கதவுகள் கொண்ட மாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 745 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎம் நிறுவனத்தின் அல்டியம் லாங் ரேன்ஜ் பேட்டரி பேக் கொண்ட முதல் மாடலாக இது இருக்கும் என தெரிகிறது.

    ஹம்மரின் புதிய மாடல் தற்போதைய காலக்கட்டத்தில் அதிக திறன் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய ஹம்மர் இவி மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் விநியோகம் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் விற்பனையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 

    இத்தகைய மைல்கல் விற்பனையை அதிவேகமாக எட்டிய வாகன உற்பத்தியாளராக கியா மோட்டார்ஸ் இருக்கிறது. இந்திய சந்தையில் 11 மாதங்களுக்கு முன் அறிமுகமான கியா மோட்டார்ஸ் தற்சமயம் செல்டோஸ் மற்றும் கார்னிவல் என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

     கியா கார்

    இந்நிலையில், மூன்றாவதாக கியா சொனெட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் கியா மோட்டார்ஸ் தற்சமயம் ஈடுபட்டு உள்ளது. கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. செல்டோஸ் மாடல் கூர்மையான, ஸ்போர்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. 

    இது இந்திய சந்தையில் மிக வேகமாக அதிக வாடிக்கையாளர்களை ஈட்டியது. பின் பல்வேறு காலக்கட்டங்களில் செல்டோஸ் அதிகம் விற்பனையான மாடலாக இடம்பிடித்தது.
    புதிய ஹூண்டாய் ஐ30 மாடலில் விரைவில் புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ30 மாடலில் மேம்பட்ட புளூலின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. புதிய மேம்பட்ட தொழில்நுட்பம் கார் ஓட்டும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ஹண்டாய் ஐ30

    ஆடம்பர வசதியை வழங்குவது மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. புதிய மேம்பட்ட புளூலிலன்க் தொழில்நுட்பம் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இதில் லாஸ்ட் மைல் நேவிகேஷன் மற்றும் லைவ் பார்க்கிங் விவரங்களை வழங்குகிறது. 

    புதிய யுஐ பிளாக் ஸ்கிரீன் பயன்படுத்துகிறது. இத்துடன் நீள நிற ஐகான்கள் நேரம் மற்றும் வெப்பநிலை விவரங்களை காண்பிக்கிறது. பயனர் தேர்வும் செய்யும் பட்சத்தில் இந்த சிஸ்டம் மேப் வசதியினையும் வழங்குகிறது. இதன் மேப் யுஐ மூன்று வித நிறங்கள் மற்றும் டார்க் நைட் மோட் கொண்டிருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


    ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய டீசர் வீடியோவின் படி ஆர்எஸ் கியூ8 மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் கியூ8 எஸ்யுவியின் பெர்பார்மன்ஸ் வெர்ஷன் ஆகும். 

    புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடல் வெளியீட்டின் போது ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலான் இந்தியாவில் மேம்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மட்டுமே ஒரே ஆர்எஸ் மாடலாக இருக்காது என தெரிவித்து இருந்தார்.  2019 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் நர்புர்கிரிங் களத்தின் வேகமாக எஸ்யுவி மாடல் ஆகும். 

    ஆடி ஆர்எஸ் கியூ8 டீசர்

    ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 

    புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 
    கவாசகி நிறுவனத்தின் புதிய 2020 வெர்சிஸ் எக்ஸ்250 மோட்டார்சைக்கிள் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    கவாசகி நிறுவனம் 2020 வெர்சிஸ் எக்ஸ் 250 மோட்டார்சைக்கிளை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2020 மாடல் முந்தைய மாடலின் வடிவமைப்பு மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கிரே நிறம் மற்றும் கிரீன் ஹைலைட்கள் கொண்டிருக்கிறது. 

    2020 வெர்சிஸ் எக்ஸ் 250 மாடலில் சிங்கிள் பாட் ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்கிரீன், நக்கிள் கார்டுகள், செமி ஃபேரிங் டிசைன் மற்றும் ஸ்டெப்-அப் சேடிள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

     வெர்சிஸ் எக்ஸ் 250

    இந்த மோட்டார்சைக்கிளில் 249சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 33.5 பிஹெச்பி பவர், 21.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகியின் புதிய குவாட்டர் லைன் வெர்சிஸ் எக்ஸ் 250 மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வராது. இந்த மாடலுக்கு பதில் வெர்சிஸ் எக்ஸ் 200 மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய வெர்சிஸ் எக்ஸ் 300 பிஎஸ்6 மாடல் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.
    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது டியூக் 250 மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் அதரடியாக மாற்றி உள்ளது.

    இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பிஎஸ்6 கேடிஎம் 250 டியூக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட ரூ. 4 ஆயிரம் அதிகம் ஆகும்.

     கேடிஎம் 250

    தற்போதைய 250 டியூக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பிஎஸ்6 மாடல் ரூ. 2 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது. பின் இதன் விலை உயர்த்தப்பட்டு ரூ. 2.05 லட்சம் என மாற்றப்பட்டது. தற்சமயம் இதன் விலை ரூ. 2.09 லட்சம் என மாற்றப்பட்டு உள்ளது.

    புதிய பிஎஸ்6 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் எல்சிடி யூனிட் ஆகும். இவை தவிர இந்த மோட்டார்சைக்கிளின் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
    மணிக்கு சுமார் 1200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜெட் வேகத்தில் செல்லும் காரை இங்கிலாந்தை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் உருவாக்கி உள்ளனர். 8 ஆண்டுகளாக கண்ட கனவு செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி, வடிவமைப்பு, வேகம் உள்ளிட்டவற்றை எட்டுவதற்காக பாடுபட்ட அனைத்து முயற்சிகளும் கைகூடியுள்ளன. இந்த காரின் குதிரைத்திறன் 1,35,000. ஆம், இதில் மணிக்கு 1,288 கி.மீ வேகத்தில் செல்ல முடியுமாம்.

    அந்த வேகத்தை காட்டும் ஸ்பீடோமீட்டரும் இதில் உள்ளது. இத்தகைய காரை உருவாக்கும் பணியில் 350 நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களும் இந்த கார் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

     பிளட் ஹவுண்ட்

    இந்த காரை லண்டனில் காட்சிக்கு வைத்தபோது 8 ஆயிரம் பேர் இதை ஆச்சர்யத்துடனும், பிரமிப்புடனும் பார்த்து சென்றுள்ளனர். 13.5 மீட்டர் நீளமுடைய இந்த காரில், ஜெட் மற்றும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் இஜே-200 ஜெட் என்ஜின் மற்றும் ஜாகுவார் வி-8 சூப்பர் சார்ஜர் எந்திரங்களும் இதில் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 1,35,000 குதிரை திறனை இந்த காருக்கு அளித்துள்ளன.

    ஃபார்முலா-1 காரில் பயன்படுத்தப்படும் காரின் வேகத்தைக் காட்டிலும் இது 7 மடங்கு அதிகமாகும். காரின் பின்புறத்தில் 2 மீட்டர் நீள பகுதி காரை நிலைநிறுத்த உதவுகிறது. காரின் மேல்பகுதி கார்பன் ஃபைபரால் ஆனது. காரின் காக்பிட் பல அடுக்கு கார்பன் இழைகளால் ஆனது. அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால் இது டிரைவரை காக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் டேஷ் போர்டு உள்ளிட்ட அனைத்துமே மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

    காரின் அதிகபட்ச வேகமான மணிக்கு 1,609 கிமீ. வேகத்தை 55 விநாடிகளில் எட்டி விட முடியும். 7 தனித்தனியான பிரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளன. காரின் செயல்பாடுகளை கண்காணிக்க 500 சென்சார்கள் உள்ளன. 7 தீயணைப்பு வாகனங்கள் இந்த கார் ஓட்டத்தின் போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன. ரத்தத்தை உறைய வைக்கும் வேகத்தில் செல்லும் இந்த காருக்கு வைத்துள்ள பெயர் ‘பிளட் ஹவுண்ட்’.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் மாடல் காருக்கு வொண்டர் வாரண்டி சலுகையினை அறிவித்து உள்ளது.


    தென் கொரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் தனது கோனா எலெக்ட்ரிக் வாகனத்திற்கு வொண்டர் வாரண்டி சலுகையை அறிவித்து உள்ளது. 

    புதிய கோனா மாடலுக்கு மூன்று ஆண்டுகள் / அன்லிமிட்டெட் கிலோமீட்டர், நான்கு ஆண்டுகள் / 60 ஆயிரம் கிலோமீட்டர் மற்றும் ஐந்து ஆண்டுகள் / 50 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டியினை வழங்குகிறது. புதிய வாரண்டி சலுகை பேட்டரி பேக்கிற்கு வழக்கமான வழங்கப்படும் எட்டு ஆண்டுகள் / 1.60 லட்சம் கிலோமீட்டர் வாரண்டியுடன் சேர்த்தே வழங்கப்படுகிறது.

     ஹூண்டாய் கோனா

    ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் வாகனம் 39.2 கிலோவாட் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 134 பிஹெச்பி பவர், 395 என்எம்  டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டு உள்ள 39.2 கிலோவாட் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரங்கள் ஆகும். இதனை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 57 நிமிடங்களே ஆகும்.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டொயோட்டா நிறுவனம் விரைவில் 4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் புதிய அர்பன் குரூயிசர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் 2020 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் ரீபேட்ஜ் செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஆகும். 

    இதன் பெரும்பாலான வடிவமைப்பு மாருதி நிறுவனத்தை தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், கிளான்ஸா போன்று இல்லாமல் புதிய மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.

     டொயோட்டா அர்பன் குரூயிசர்

    காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
    மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை அறிவித்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது. கார் மாடல்கள் மட்டுமின்றி கார் உபகரணங்களுக்கும் சிறப்பு நிதி சலுகைகள் பொருந்தும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வாகன உபகரணங்களுக்கு நிதி சலுகைகளுடன் ஊதியம் பெறுவோர், சொந்த தொழில் செய்வோர், விவசாய துறை மற்றும் வணிக வாகனங்களை வைத்திருப்போர் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தமாக சலுகைகளை வழங்குகிறது.

     மஹிந்திரா சலுகை

    புதிய சலுகையுடன் கடந்த சில மாதங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகளும் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. இதில்,  Own now and pay in 2021, அதிகபட்சம் 8 ஆண்டுகளுக்கு மாத தவணை வசதி, 100 சதவீதம் ஆன் ரோடு தவணை முறை மற்றும் BS6 Pickup at BS4 EMI உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    நிதி சலுகைகளில், யுடிலிட்டி வாகனங்களுக்கு அதிகபட்சம் 10 சதவீதம் எக்ஸ் ஷோரூம் விலையில் வழங்கப்படுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கான தவணை வழக்கமான மாத தவணையை விட 50 சதவீகம் குறைந்த கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் லட்சம் ரூபாய்க்கு ரூ. 899 எனும் மாத தவணை வழங்கப்படுகிறது. பொலிரோ பிக்கப் மற்றும் பொலிரோ மேக்சி டிரக் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு நிதி சலுகை வழங்கப்படுகிறது.
    ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2020 ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் 2020 சிபிஆர்1000ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு மாடலின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கி உள்ளது. புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது உயர் ரக அம்சங்கள் நிறைந்த எஸ்பி வெர்ஷனில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிபிஆர் ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு மாடல் ஹோண்டா ஆர்சி213வி எஸ் போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இதில் ட்வின் எல்இடி ஹெட்லேம்ப்கள், பல்வேறு ஏர் வேன்ட்கள் மற்றும் கூர்மையான டெயில் பகுதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் ஃபேரிங் ஹோண்டாவின் மோட்டோ ஜிபி மெஷினில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு

    புதிய மாடலில் ட்வின்-ஸ்பார் அலுமினியம் ஃபிரேமில் 999சிசி இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 29 பிஹெச்பி அதிக செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் திராட்டிள் பை வையர், மூன்று ரைடிங் மோட்கள், 9 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் ஆர் மாடல் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் பியல் மோரியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. எஸ்பி வேரியண்ட் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த நிறம் தவிர இரண்டு வேரியண்ட்களும் வெவ்வேறு ஹார்டுவேர் அம்சங்களை கொண்டிருக்கின்றன.
    ×