என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஸ்கோடா நிறுவனம் தனது என்யாக் ஐவி எலெக்ட்ரிக் மாடலின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் தனது புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் மாடலின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இது ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். ஸ்கோடா என்யாக் ஐவி செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஸ்கோடா என்யாக் ஐவி மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலில் உள்ள அம்சங்களை பெற இருக்கிறது. இந்த கார் இன்டீரியர் அதிக காற்றோட்டம் நிறைந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

என்யாக் ஐவி மாடலில் 585 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கும் என்றும் 13 இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கொண்ட ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய மாடல் பின்புறம் கால் வைக்க போதுமான இடவசதி முந்தைய கோடியாக் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படும் என தெரிகிறது.
ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.
புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சுசுகி ஜிம்னி புது வேரியண்ட் மாடல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
சுசுகி ஜிம்னி மூன்று கதவுகள் கொண்ட வேரியண்ட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த மாடல் அறிமுகமானது முதல் இதே காரின் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஏற்கனவே சில ஜிம்னி யூனிட்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த மாடலுக்கான சுங்க துறை அனுமதி மற்றும் இதர சான்றுகளை பெறுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த கார்கள் கம்ப்லீட்லி நாக்டு-டவுன் யூனிட்களாக இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. சுசுகி நிறுவனம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து அவற்றை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் எஸ்யுவி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது 2021 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், புதிய நிசான் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய நிசான் மாடல் ஸ்பை படங்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை ஆகும்.
ஸ்பை படங்களில் இருப்பது டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இதில் அலாய் வீல்கள், கன்வென்ஷனல் ஆன்டெனா மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டு உள்ளது. இதே அம்சங்கள் கான்செப்ட் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய நிசான் மேக்னைட் மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு அம்சமாகவும் ஏஎம்டி மற்றும் சிவிடி யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
நிசான் மேக்னைட் உள்புற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ரெனால்ட் கார் கைகர் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படுகிறது.
ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஃபியட் க்ரிஸ்லர் ஆட்டோ நிறுவனம் ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் மாலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் விலை ரூ. 20.14 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் மொத்தமும் 250 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. புதிய நைட் ஈகிள் எடிஷன் பிளாக் தீமில் கிடைக்கிறது. இந்த மாடல் லாங்கிடியூட் பிளஸ் வேரியண்ட்டில் கிடைக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் வெளிப்புறம் பிளாக் நிற ஜீப் பேட்ஜிங் கொண்டிருக்கிறது.

இதன் முன்புறம் ஏழு ஸ்லாட் கிரில், டிஆர்எல்கள், ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் ரூஃப், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடல் வோக்கல் வைட், எக்சோட்டிக்கா ரெட், பிரிலியன்ட் பிளாக் மற்றும் மகனீசியோ கிரே நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறத்தில் பிளாக் டெக்னோ லெதர் சீட்கள், கிளாஸ் பிளாக் அக்சென்ட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஏர்பேக், டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், இபிஎஸ், இஎஸ்சி, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
புதிய காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 2.0 லிட்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் கார் இந்திய சந்தையில் 55 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை கடந்துள்ளது. புதிய எஸ்யுவி மாடல் அறிமுகமாகி சில மாதங்களிலேயே இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கு துவங்கும் முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா வெளியீட்டிற்கு முன்பே 14 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவை பெற்று இருந்தது. முன்பதிவு விவரங்களின் படி 67 சதவீத வாடிக்கையாளர்கள் டீசல் வேரியண்ட்டையும், 33 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டை தேர்வு செய்து இருக்கின்றனர்.

புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் வி.ஜி.டி. டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெசட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை அனைத்தும் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 113 பி.ஹெச்.பி., 144 என்.எம். மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2020 ஹூண்டாய் கிரெட்டா - இ, இ.எக்ஸ்., எஸ், எஸ்.எக்ஸ். மற்றும் எஸ்.எக்ஸ். ஒ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திராவின் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 1,99,900, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிஎஸ்4 மாடல் விலையை விட ரூ. 4500 அதிகம் ஆகும்.
புதிய பிஎஸ்6 மோஜோ 300 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. புதிய மோஜோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விலை பிளாக் பியல் நிற வேரியண்ட்டிற்கானது ஆகும். கார்னெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 2.06 லட்சம் என்றும் ரூபி ரெட் மற்றும் ரெட் அகேட் வெர்ஷன்களின் விலை ரூ. 2.11 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் முன்புறம் டூயல் பாட் ஹெட்லேம்ப், பல்கி ஃபியூயல் டேன்க் மற்றும் ஸ்டபி டெயில் பகுதி வழங்கப்படுகிறது.
புதிய பிஎஸ்6 மாடலில் 295சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 25.35 பிஹெச்பி பவர், 25.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய மோஜோ மாடல் விநியோகம் விரைவில் துவங்கும் என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மசெராட்டி நிறுவனத்தின் இரண்டு புதிய கார் மாடல்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
மசெராட்டி நிறுவனம் இரண்டு செடான் மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இரு மாடல்களும் டிரோஃபியோ மேக் ஓவர் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்து இருக்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு லெவேண்ட் டிரோஃபியோ மாடலை தொடர்ந்து கிப்ளி மற்றும் குவாட்டர்போர்ட் மாடல்கள் வி8 என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஃபெராரி நிறுவனத்தின் 3.8 லிட்டர் வி8 என்ஜினுக்கு மாற்றாக புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4.0 லிட்டர் வி8 என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இரு செடான்களுடன் லெவேண்ட் மாடலும் டீசரில் இடம்பெற்று இருக்கிறது. இதனால் மேம்பட்ட எஸ்யுவி மாடலில் புதிய வி8 என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய 8 சிலிண்டர் என்ஜின் சுமார் 600 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
மசெராட்டி நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் புதிய கார்களின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாவா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோட்சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1050 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் ஜாவா நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நாடு முழுக்க 950 நகரங்களில் 24x7 அடிப்படையில், அதிகபட்சம் 100 கிலோமீட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தில் 100 கிலோமீட்டர்களுக்கு இலவச டோயிங் வசதி, ரோடுரைடு ரிப்பேர், பன்ச்சர் ரிப்பேர், கூடுதல் எரிபொருள், சாவி தொலைந்தால் மீட்பது, மருத்துவ அவசர நிலை உள்ளிட்டவைகளுக்கு உதவி வழங்கப்படும் என ஜாவா தெரிவித்து இருக்கிறது.
புதிய ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்த்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை. ஜாவா வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களுக்கு ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம்.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா நிறுவனம் விரைவில் இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், புதிய சிஎன்ஜி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய சிஎன்ஜி மாடல் என்ட்ரி லெவல் ட்ரிமில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாக்சி ஒட்டுனர்களை குறிவைக்கும் வகையில் வெளியிடப்படுகிறது.

பெட்ரோல் சிஎன்ஜி மாடலில் 2டிஆர்-எஃப்இ டூயல் விவிடி-ஐ 2.7 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 165 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் செயல்திறன் சற்றே குறைக்கப்படும் என தெரிகிறது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி வேரியண்ட் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய டி கிளாஸ் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய டி கிளாஸ் மாடல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய டி கிளாஸ் மாடல் ஆடம்பர வசதிகள் நிறைந்த காம்பேக்ட் வேன் ஆகும்.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ் மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் ஏ கிளாஸ் மற்றும் நிசான் கிக்ஸ் மாடல்களில் பல்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் காம்பேக்ட் வேன் 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தற்சமயம் சிறிய வேன்கள் பிரிவில் பென்ஸ் சிடான் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது நிசான் - ரெனால்ட் - மிட்சுபிஷி கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும்.
யமஹா நிறுவனம் 250 சிசி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவாசகி நிறுவனத்தின் நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் மோட்டார்சைக்கிள் சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஒரே 250சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார்சைக்கிள் ஆகும்.
இதனை மாற்றியமைக்க யமஹா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யமஹா நிறுவனம் சொந்தமாக குவாட்டர் லைன் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது இசட்எக்ஸ் 25ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும்.

யமஹா நிறுவனம் ஏற்கனவே யைஇசட்எஃப் ஆர்25 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. எனினும், இது 250சிசி பேரலெல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், இதன் தோற்றம் யைஇசட்எஃப் ஆர்1எம் மாடலை தழுவி இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய யமஹா மாடலில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 250சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் 49.3 பிஹெச்பி பவர், 22.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஊரடங்கு கால விற்பனையில் படைத்து இருக்கும் சாதனை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மாருதி சுசுகி ஊரடங்கு துவங்கியது முதல் விற்பனை செய்த இரண்டில் ஒரு கார் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து உள்ளது.
ஊரடங்கு மாதங்களில் 45 சதவீத சந்தேகங்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 2019 நிதியாண்டில் 13 சதவீதம் ஆகும். மாருதி சுசுகியின் 26 டச் பாயிண்ட்களில் 21 ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தனித்துவம் மிக்க அனுபவத்தை வழங்கும் வகையில் மாருதி சுசுகி நிறுவனம் பிரத்யேக ஆன்லைன் சேவையை கட்டமைத்து இருக்கிறது. டிஜிட்டல் சிக்னல்கள் அடிப்படையில், மாருதி சுசுகி நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பட்ட தகவல்களை வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் மூலம் ஆண்டு முழுக்க வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க முடியும் என மாருதி சுசுகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் மொபைல் சார்ந்த சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.






