search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி
    X
    இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி

    இணையத்தில் லீக் ஆன இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்

    டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா நிறுவனம் விரைவில் இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    இந்நிலையில், புதிய சிஎன்ஜி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய சிஎன்ஜி மாடல் என்ட்ரி லெவல் ட்ரிமில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாக்சி ஒட்டுனர்களை குறிவைக்கும் வகையில் வெளியிடப்படுகிறது.

    இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படம்

    பெட்ரோல் சிஎன்ஜி மாடலில் 2டிஆர்-எஃப்இ டூயல் விவிடி-ஐ 2.7 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 165 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய சிஎன்ஜி வேரியண்ட்டில் செயல்திறன் சற்றே குறைக்கப்படும் என தெரிகிறது.

    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி வேரியண்ட் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×