என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் அந்நிறுவன விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது. இந்த ஸ்கூட்டர் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தின் படி கிரேசியா 125 பிஎஸ்6 மாடல் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 73912, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வி டைப் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார், ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்கள், ஸ்ப்லிட் கிராப் ரெயில் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கிரேசியா 125 ஸ்கூட்டர் மேட் சைபர் எல்லோ, பியல் சைரென் புளூ, மேட் ஆக்சிஸ் கிரே மற்றும் பியல் ஸ்பார்டன் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ5 ஸ்போர்ட்பேக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஆடி நிறுவனம் தனது கியூ5 ஸ்போர்ட்பேக் மாடலை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய கார் ஜெர்மனியில் உள்ள நர்பர்கிரிங் களத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
எஸ்யுவி-கூப் ரக ஸ்டைலிங் கொண்டிருக்கும் புதிய ஆடி கார் பின்புறம் வளைந்திருக்கிறது. இந்த காரின் ரூஃப், பின்புற கண்ணாடிகள், பின்புற குவாட்டர் பேனல்கள் வளைந்த வடிவம் கொண்டிருக்கின்றன. இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரின் உள்புறம் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலை விட புதிய ஸ்போர்ட்பேக் மாடல் பின்புறத்தில் ஹெட்ரூம் சற்றே குறைவாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஆடி கியூ5 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் ஆடி கியூ5 ஸ்டேன்டர்டு வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டு உள்ளன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய கோஸ்ட் மாடலை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய காரின் வெளிப்புற வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது.

புதிய டீசரின் படி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கோஸ்ட் மாடல் டீசர் மூன்றே கோடுகளை கொண்டிருக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் புதிய வெர்ஷன் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இது அடுத்த தலைமுறை வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் டி ஜிடிஐ மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட்டை ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட்ஸ் மாடலில் எம்ஸ்டேலியன் டி ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய டர்போ பெட்ரோல் என்ஜினுடன், எக்ஸ்யுவி300 ஸ்போர்ட்ஸ் இந்திய சந்தையில் சக்திவாய்ந்த எஸ்யுவி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டை பொருத்தவரை இந்த வேரியண்ட் அடுத்த ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா எஸ்யுவி ஸ்போர்ட்ஸ் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதன் வெளியீடு 2021 ஆண்டு நடைபெற இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரெக்ட் இன்ஜெக்ஷன், டர்போ பெட்ரோல் யூனிட் 129 பிஹெச்பி பவர், 230 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இது தற்சமயம் வழங்கப்பட்டுள்ள டர்போ பெட்ரோல் என்ஜினை விட புதிய என்ஜின் 20 பிஹெச்பி மற்றும் 30 என்எம் டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.
யமஹா நிறுவனத்தின் எஃப்இசட்25, எஃப்இசட்எஸ்25 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
யமஹா நிறுவனம் எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ்25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 1.52 லட்சம் மற்றும் ரூ. 1.57 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎஸ்6 மாடல்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எஃப்இசட்25 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் புளூ நிறங்களிலும் எஃப்இசட்எஸ்25 மாடல் பிளாட்டினா கிரீன், வைட் வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இந்த வேரியண்ட் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

இரு மோட்டார்சைக்கிள்களிலும் 249சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.5 பிஹெச்பி பவர், 20.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹா எஃப்இசட்எஸ்25 மாடல் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கிறது. எஃப்இசட் 25 மாடல் விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இவை பஜாஜ் டாமினர் 250 மாடலுக்கு போட்டியாக அமைகின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடல் பாதுகாப்பிற்கு இந்த அம்சம் பெறும் உலகின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர வாகன தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் விரைவில் 2021 எஸ் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பின்புற இருக்கைகளுக்கு ஏர் பேக் வழங்கப்பட இருக்கும் உலகின் முதல் மாடல் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ் கிளாஸ் மாடல் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பின்புற இருக்கைகளுக்கு ஏர்பேக் வழங்கப்படுவது சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த மாடலில் சைல்டு சீட்கள், ஆப்ஷனல் பெல்ட் பேக் மற்றும் உள்புறம் காற்றடைக்கப்பட்ட சீட் பெல்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்புற இருக்கைகான ஏர்பேக் முன்புற இருக்கையின் பின்புறத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.
புதிய மாடலில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வரும் விபத்து சார்ந்த ஆய்வுக்கு பின் உருவாக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் புதிய என்ஜினுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகி உள்ளது.
மாருதி சுசுகி பலேனோ மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் வெவ்வேறு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
தற்சமயம் சோதனை செய்யப்படும் பலேனோ மாடல் புதுவித என்ஜின் கொண்டிருக்கிறது. இது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே என்ஜின் ஆர்எஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி பலேனோ ஆர்எஸ் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 102 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 அப்கிரேடு செய்யப்படாமல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.
எனினும், தற்சமயம் டர்போ பெட்ரோல் என்ஜின்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் என்ஜினை திரும்ப கொண்டுவர மாருதி சுசுகி திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. புதிய புகை விதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் பெட்ரோல் மாடல்களை மட்டும் விற்பனை செய்ய துவங்கி உள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய யாரிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட வியோஸ் மாடல் பிலிப்பைன்சில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது சர்வதேச சந்தையில் இரண்டாவது பெரும் அப்டேட் ஆகும். இந்தியாவில் இதன் முதல் ஃபேஸ்லிப்ட் மாடலே யாரிஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய யாரிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட கிரில் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பம்ப்பரினுள் டிரேப்சோயிடல் சென்ட்ரல் ஏர் டேம், ஹெட்லேம்ப் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு உள்ளது. இது லெக்ஸ் மாடலில் உள்ள கிரில் போன்று காட்சியளிக்கிறது.

ஃபாக் லேம்ப்கள் சி வடிவ ரெசஸ்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2018 ஆண்டு அறிமுகமான யாரிஸ் மாடல் விற்பனையில் அதிக வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இதன் வர்த்தக மாடல் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சொனெட் முன்பதிவு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி விலை மற்றும் வெளியீடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது.
கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கியா சொனெட் மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுதவிர புதிய சொனெட் மாடல் இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் நைன்பாட் பிராண்டு புதிய சி30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
சியோமியின் நைன்பாட் பிராண்டு சி30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை 514 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கூட்டர் அன்டர்போன் ரக ஃபிரேம் கொண்டிருக்கிறது. இது மிக குறைந்த பேனல்களுடன் சிறிய அளவிலான ஒற்றை சீட் அமைப்பை கொண்டிருக்கிறது. நைன்பாட் பிராண்டு சி30 மாடலின் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்களில் எல்இடி லைட்டிங் செய்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் முழுமையக அறிவிக்கப்படவில்லை. எனினும், இது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
இதில் கழற்றக்கூடிய வகையிலான லித்தியம் அயன் ரக பேட்டரி வழங்கப்படுகிறது. எது 6 கிலோ எடை கொண்டது ஆகும். ஒருவேளை பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால் பெடல் செய்து பயணிக்கும் வசதியும் சியோமி நைன்பாட் சி30 மாடலில் வழங்கப்பட்டு உள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் சி30 வரும் மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் மாடல் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
2020 மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மாடல் விலை இந்தியாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேம்பட்ட எஸ் கிராஸ் மாடல் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி மாருதி சுசுகி 2020 எஸ் கிராஸ் மாடலை ஏழு வேரியண்ட்கள் - சிக்மா, டெல்டா, ஆல்ஃபா ஏடி, சீட்டா ஏடிமற்றும் ஆல்ஃபா ஏடி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியண்ட் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இதுதவிர புதிய 2020 எஸ் கிராஸ் மாடல் - புளூ, பிரவுன், கிரே, வைட் மற்றும் சில்வர் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் எஸ் கிராஸ் பிஎஸ்4 மாடல் விலை ரூ. 8.80 லட்சத்தில் துவங்கி ரூ. 11.43 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய லேண்ட் குரூயிசர் மாடல் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது பாரம்பரிய மாடல்களில் ஒன்றாக விளங்கிய லேண்ட் குரூயிசர் மாடல் விற்பனையை இந்திய சந்தையில் நிறுத்தியது. லேண்ட் குரூயிசர் பிராடோ மற்றும் ஃபிளாக்ஷிப் லேண்ட் குரூயிசர் என இரண்டு வேரியண்ட்களில் இந்த எஸ்யுவி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இரு மாடல்களும் உலகின் தலைசிறந்த ஆஃப் ரோடர் மாடல்களில் ஒன்றாக விளங்கின. தற்சமயம் இரு மாடல்களும் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகமாகும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு மூத்த துணை தலைவர் நவீன் சோனி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்த மாடலை கைவிட மாட்டோம் என்றும், இந்த மாடல் ஏதேனும் வடிவம், விதம் அல்லது அளவில் மீண்டும் அறிமுகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். டொயோட்டா லேண்ட் குரூயிசர் மாடல் உலக சந்தையின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி பிரிவில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
அந்த வகையில் டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட் குரூயிசர் எஸ்யுவி மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






