என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்ஜி ஹெக்டார்
    X
    எம்ஜி ஹெக்டார்

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்த எம்ஜி ஹெக்டார்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.


    எம்ஜி மோட்டார் இந்தியா தனது ஹெக்டார் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம்செய்தது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த ஹெக்டார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. 

    இந்திய சந்தையில் வெளியான கார்களில் இணைய வசதி கொண்ட முதல் மாடலாக ஹெக்டார் இருக்கிறது. ஏஐ அசிஸ்டண்ட் வசதி சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹெக்டார் மாடல் விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

     எம்ஜி ஹெக்டார்

    விற்பனையில் புதிய மைல்கல் ஒரே ஆண்டிற்குள் எம்ஜி மோட்டார் கடந்து இருக்கிறது. இந்திய சந்தையில் ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற போட்டி மாடல்களை விட அதிக விற்பனையை பதிவு செய்தது. இதன் காரணமாக இது விரைவில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெ்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 143 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.  
    Next Story
    ×