search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா சொனெட்
    X
    கியா சொனெட்

    கியா சொனெட் முன்பதிவு துவங்கியதாக தகவல்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொனெட் மாடலினை ஆகஸ்ட் 7 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், புதிய கார் இன்டீரியர் மற்றும் வெளிப்புற வரைபடங்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்திய சந்தையில் சொனெட் மாடல் கியா நிறுவனத்தின் மூன்றாவது கார் ஆகும்.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா சொனெட் மாடல் ஜிடி லைன் மற்றும் டெக் லைன் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் சில கியா விற்பனையாளர்கள் சொனெட் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி உள்ளதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என தெரிகிறது. சொனெட் மாடலின் ஜிடி லைன்- ஜிடிகே, ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் பிளஸ் என மூன்று வேரியண்ட்களிலும், டெக் லைன்- ஹெச்டிஇ, ஹெச்டிகே, ஹெச்டிஎக்ஸ் மற்றும் ஹெச்டிஎக்ஸ் பிளஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

     கியா சொனெட்

    புதிய சொனெட் மாடலின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்கள், பின்புற வைப்பர், ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப், சில்வர் ரூஃப் ரெயில், பிளாக்டு-அவுட் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    காரின் முன்புறம் இலுமினேட்டெட் எல்இடி டிஆர்எல்கள், டைகர் நோஸ் கிரில், பிளாக் இன்சர்ட்கள், ரெட் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள், உள்புறத்தில் முன் மற்றும் பின்புறங்களில் ஹெட் ரெஸ்ட்கள் வழங்கப்படுகிறது. 

    கியா சொனெட் மாடலில் ஹூண்டாய் வென்யூ காரில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சொனெட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×