search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்
    X
    சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்

    இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்

    சிட்ரோன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.


    பிரெஞ்சு நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி மாடல் மூலம் இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்த எஸ்யுவி ஏற்கனவே அறிமுகமாக இருந்தது. எனினும், தற்போதைய கொரைனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    சிட்ரான் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிட்ரான் சி5 ஏர்கிராஸ் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

     சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஸ்பை படம்

    அதன்படி புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை இந்தியாவுக்கான அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்திய தகவல்களின் படி இந்த கார்களுக்கான சோதனை உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதன் மூலம் புதிய கார் விலையை குறைக்க சிட்ரான் திட்டமிட்டு உள்ளது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் நீளம் 4500 எம்எம், அகலம் 1840 எம்எம், உயரம் 1670 எம்எம், வீல்பேஸ் 2730 எம்எம் ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 230 எம்எம் ஆகும்.  

    சிட்ரான் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×