என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா தார்
    X
    மஹிந்திரா தார்

    மஹிந்திரா தார் வெளியீட்டு விவரம்

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தலைமுறை தார் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய மாடலுக்கான டீசர் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய தார் மாடல் விங் மிரர்களை எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதும் தெரிகிறது. 

     மஹிந்திரா தார்

    இத்துடன் புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பும் புகைப்படங்களில் அம்பலமாகி இருக்கிறது. புதிய தார் மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. 

    ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×