என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஏ15 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கின்றன.


    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது.

    புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு கேமரா சென்சார் உள்ளது. ஐபோன் 13 மாடலில் உள்ள சினிமேடிக் வீடியோ அம்சம் சினிமா தர வீடியோக்களை படமாக்க வழி செய்கிறது. ஆப்பிள் நிகழ்வில் இந்த மோட் கொண்டு படமாக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டது. 

     ஐபோன் 13

    2021 ஐபோன் மாடலில் 5ஜி தொழில்நுட்பம் முன்பை விட அதிக பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இதற்கென புது ஐபோனில் பிரத்யேக உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 மினி பேட்டரி முந்தைய ஐபோன் 12 மினி மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. 

    புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட மேக்சேப் அம்சம் உள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி விலை 699 டாலர்கள் என்றும் ஐபோன் 13 விலை 799 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் 7 அதிரடி அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஆப்பிள் நிறுவனம் தனது கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 நாள் முழுக்க பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     ஆப்பிள் வாட்ச் 7

    இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இ.சி.ஜி. வசதி கொண்டுள்ளது. புதிய வாட்ச் 7 இதுவரை வெளியான வாட்ச் மாடல்களில் மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டுள்ளது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக வாட்ச் பேஸ்கள், ஐந்து அலுமினியம் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 விலை 399 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் வாட்ச் மாடலை தொடர்ந்து ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் சேவை அறிவிப்புகள் வெளியானது. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகள் இடம்பெற்றுள்ளன. 
    ஆப்பிள் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஐபேட் அறிமுகம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு துவங்கியது. ஆன்லைனில் நேரலை செய்யப்படும் ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் நிகழ்சிகள் குறித்த முண்ணோட்டம்  வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     ஐபேட்

    புதிய ஐபேட் மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் செண்டர் ஸ்டேஜ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோ கால் மேற்கொள்ளும் போது பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் என துவங்குகிறது. 

     ஐபேட் மினி

    ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் மினி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதன் விலை 499 டாலர்கள் ஆகும். 
    டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது.


    டெக்னோ நிறுவனத்தின் புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 8 என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 2 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன், 16 எம்பி பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி., 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளது.

     டெக்னோ ஸ்பார்க் 8

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 8, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அட்லான்டிக் புளூ, ஐரிஸ் பர்பில் மற்றும் டர்கியூஸ் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் கேமரா தரம் குறித்து வெளியிட்டு இருக்கும் புது தகவல் அதன் பயனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.


    அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ஜின் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஐபோன் கேமரா தரத்தை குறைத்துவிடும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை ஆப்பிள் தனது சப்போர்ட் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    சமீபத்திய ஐபோன் மாடல்களில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் எனப்படும் ஓ.ஐ.எஸ். மற்றும் க்ளோஸ்டு லூப் ஆட்டோபோக்கஸ் சிஸ்டம் (ஏ.எப்.) வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக அதீத அதிர்வலைகளில் ஐபோன் பயன்படுத்தினால், கேமராக்களின் தரம் குறைய ஆரம்பிக்கும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

     ஐபோன்

    இவ்வாறு ஆகும் பட்சத்தில் ஐபோன்களில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் குறையும். ஐபோன்களில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் தலைசிறந்ததாக இருக்க செய்யும் உபகரணங்கள் அதிர்வுகளை தாங்காது. 

    இதனால் ஐபோன் பயன்படுத்துவோர் அதனை அதிக என்ஜின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளில் பொருத்துவதை ஆப்பிள் பரிந்துரைக்கவில்லை. மேலும் சிறிய என்ஜின் கொண்ட வாகனங்கள், எலெக்ட்ரிக் என்ஜின் கொண்ட மொபெட் மற்றும் ஸ்கூட்டர்களில் ஐபோன்களை பொருத்துவதாலும் கூட ஓ.ஐ.எஸ். மற்றும் ஏ.எப். சிஸ்டம்கள் பாதிக்கப்படலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.


    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு 12 ஐந்தாவது மற்றும் இறுதி பீட்டா ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது. 

    இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கூகுள் தரவுகளில் ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே தினத்தில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது. பிக்சல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம் வெளியாகும்.

    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு குறுகிய கால விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ்1 ஆண்ட்ராய்டு டி.வி. சீரிஸ் - 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. விலை குறைப்பு செப்டம்பர் 12 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 32 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 40 இன்ச் மாடல் ஜூலை மாத வாக்கில் ரூ. 19,999 அறிமுக விலையில் விற்பனைக்கு வந்தது.

    புதிய விலை விவரம்

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 32 இன்ச் மாடல் ரூ. 14,999

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 43 இன்ச் மாடல் ரூ. 22,999

    இன்பினிக்ஸ் எக்ஸ்1 40 இன்ச் மாடல் ரூ. 19,999

     இன்பினிக்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் டிவி

    இந்த டிவிக்களில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மெல்லிய டிசைன், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புளூ லைட் ரிடக்‌ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டி.வி. 24 வாட் டால்பி ஆடியோ கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்த மாதம் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் சீரிஸ் மாடல்களுடன் இந்திய சந்தையில் ரீ-எண்ட்ரி கொடுத்தது. இந்த நிலையில், இன் நோட் 1 ப்ரோ இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

     மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆனது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இ7748 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படும் என தெரிகிறது.

    இத்துடன் புல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஸ்மார்ட்போன் வியாபார யுக்தியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பிளாக்‌ஷிப் சாதனங்கள் மட்டுமின்றி நார்டு சீரிசில் பல்வேறு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புது ஸ்மார்ட்போன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

    ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த காலாண்டு அல்லது 2022 இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ரூ. 24,999 துவக்க விலையில் நார்டு சி.இ. 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக இருக்கிறது.
    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் சீன வேரியண்டை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.


    விவோ நிறுவனம் தனது எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் அறிமுகமாக இருக்கின்றன.

    மலேசியாவில் விவோ எக்ஸ்70 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. எக்ஸ்70 சீரிசில் எக்ஸ்70, எக்ஸ்70 ப்ரோ மற்றும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கிறது. இவற்றின் அம்சங்கள் சீன வேரியண்டில் இருப்பதைவிட வேறுபடும் என கூறப்படுகிறது.

     விவோ எக்ஸ்70 ப்ரோ

    சீனாவில் அறிமுகமான எக்ஸ்70 ப்ரோ மாடலில் எக்சைனோஸ் 1080 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மலேசியாவில் இதே ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். சார்ந்த பன்டச் ஓ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் சாட்களை புதுவிதமாக பேக்கப் செய்யும் வழிமுறை விரைவில் வழங்கப்பட இருக்கிறது.


    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை ஆப்பிள் ஐகிளவுட் அல்லது கூகுள் டிரைவில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்து கொள்ள முடியும்.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப் அம்சத்தை வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியின் குறுந்தகவல்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் அம்சம் 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 

     பேஸ்புக் ஸ்கிரீன்ஷாட்

    புது அம்சம் குறித்த அறிவிப்பை பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனை அந்த தேதியில் துவங்குகிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை விநாயகர் சதுர்த்தி தினத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை துவங்கவில்லை. தற்போது கூகுள் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல்களை சோதனை செய்து வருகின்றன. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தீபாவளி சமயத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர் குறைபாடு காரணமாக ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை தாமதமாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் ஹெச்.டி. பிளஸ் 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2, 13 எம்பி ஆம்னிவிஷன் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.
    ×