என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரியல்மி நிறுவனம் புதிய பேண்ட் 2 மற்றும் ஸ்மார்ட் டிவி நியோ 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது பேண்ட் 2 மாடல் இந்தியாவில் செப்டம்பர் 24 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதே நிகழ்வில் ரியல்மி நார்சோ 50 சீரிஸ் மாடல்களும் அறிமுகமாகிறது. ரியல்மி பேண்ட் 6 வெளிப்புற தோற்றம் ஹானர் பேண்ட் 6 / ஹூவாய் பேண்ட் 6 போன்றே காட்சியளிக்கிறது.

    இதில் 1.4 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, அதிக ஸ்போர்ட் மோட்கள், 18 எம்.எம். மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரியல்மி பேண்ட் விலை ரூ. 1499 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய ரியல்மி பேண்ட் விலை ரூ. 2500 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 2 டீசர்

    பிட்னஸ் பேண்ட் 2 மட்டுமின்றி ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் மாடல் இதே தினத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, 20 வாட் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அரிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை ரூ. 69,900 என துவங்குகிறது. புதிய ஐபோன் மாடல்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 17) மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது. 

    சில்லறை விற்பனை மற்றும் வினியோகம் செப்டம்பர் 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் புதிய ஐபோன்களை முன்பதிவு செய்வோருக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன்கள் ஹோம் டெலிவரியும் செய்யப்பட இருக்கின்றன.

    ஆப்பிள் விற்பனையாளர்களான இன்கிராம் மைக்ரோ மற்றும் ரெடிங்டன் தனியார் வங்கியுடன் இணைந்து ஐபோன்களுக்கு வங்கி சார்ந்த சலுகைகளை வழங்குகின்றன. 

     ஐபோன் 13

    அதன்படி ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாத தவணை முறை சலுகைகளுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும்.

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வாங்குவோர் மாத தவணை முறை சலுகையை பெறும் பட்சத்தில் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும்.

    ஐபோன் 13 மாடல் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதில் மாதம் ரூ. 3329 செலுத்த வேண்டும். இத்துடன் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் விற்பனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.


    ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 69,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,79,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டது.

    ஐபோன் எக்ஸ் சீரிசுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் எக்ஸ்.ஆர். இந்தியாவில் அந்நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக இருந்து வந்தது. ஐபோன் எக்ஸ்.ஆர். மாடல் அந்நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

     ஐபோன் எக்ஸ்.ஆர்.

    எனினும், இந்த மாடல் ப்ளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மூன்றாம் தரப்பு ஆன்லைன் வலைதளங்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் எக்ஸ்.ஆர். 64 ஜிபி ரூ. 42,999 விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

    இதேபோன்று ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. எனினும், இந்த மாடல்களின் விற்பனை மற்ற வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி25வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் டி610 பிராசஸர், மாலி ஜி52 ஜி.பி.யு., 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 11, 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி சி25வை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     ரியல்மி சி25வை

    ரியல்மி சி25வை அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் யுனிசாக் டி610 பிராசஸர்
    - மாலி-G52 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 50 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி25வை மாடல் கிளேசியர் புளூ மற்றும் மெட்டல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 ஆகும். ரியல்மி சி25வை விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. 
    சியோமி நிறுவனத்தின் பேட் 5 டேப்லெட் மாடல் டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


    சியோமி நிறுவனம் சியோமி பேட் 5 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 11 இன்ச் 2.5கே, டபிள்யூ.கியூ.எக்ஸ்.ஏ. எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் மற்றும் ஹெச்.டி.ஆர்.10 வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்கள், 6.85 எம்.எம். மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சியோமி பேட் 5

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்களை சியோமி பேட் 5 கொண்டிருக்கிறது. இத்துடன் வைபை, ப்ளூடூத் 5, 8720 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. சியோமி பேட் 5 காஸ்மிக் கிரே, பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349 யூரோக்கள் என துவங்குகிறது.
    சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது சியோமி 11டி மற்றும் சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி 11டி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், சியோமி 11டி ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். உள்ளது. இரு மாடல்களுக்கும் மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

     சியோமி 11டி ப்ரோ

    சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்களில் 108 எம்பி வைடு ஆங்கில், 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. சியோமி 11டி ப்ரோ மாடல் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்கள் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி 8 ஜிபி+128 ஜிபி விலை 499 யூரோக்கள் என்றும் சியோமி 11டி ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை 649 யூரோக்கள் என துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.


    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. புதிய எம் சீரிஸ் ல்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    புதிய கேலக்ஸி எம்52 5ஜி மாடல் முந்தைய எம்51 மாடலை விட 21 சதவீதம் மெல்லியதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 11 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் என தெரிகிறது. இத்துடன் பிளாஸ்டிக் பேக், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

     சாம்சங் டீசர்

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங் பே, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. 

    ரியல்மியின் டிசோ பிராண்டு வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் ப்ரோ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    ரியல்மி நிறுவனத்தின் டிசோ பிராண்டு இந்திய சந்தையில் டிசோ வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் ஸ்கிரீன், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5டி கிளாஸ் மற்றும் பிரீமியம் மெட்டல் பிரேம் உள்ளது.

    இத்துடன் இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங், 15 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. டிசோ வாட்ச் ப்ரோ மாடலில் இதே அம்சங்களுடன் கூடுதலாக பில்ட்-இன் டூயல் ஜி.பி.எஸ்., குளோனஸ் பொசிஷனிங், 90 ஸ்போர்ட் மோட்கள் உள்ளன.

     டிசோ வாட்ச் ப்ரோ

    டிசோ வாட்ச் 2 மாடலில் 260 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 10 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. டிசோ வாட்ச் ப்ரோ மாடல் 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இது 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்தியாவில் டிசோ வாட்ச் 2 மாடல் கிரே, பின்க் மற்றும் வைட் நிறங்களிலும் வாட்ச் ப்ரோ மாடல் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களிலும் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 2,999 மற்றும் ரூ. 4,999 ஆகும். எனினும், குறுகிய காலக்கட்டத்திற்கு டிசோ வாட்ச் 2 ரூ. 1,999 விலையிலும், டிசோ வாட்ச் ப்ரோ ரூ. 4,499 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்கள் இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், புதிய பிக்சல் 6 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120x1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     கூகுள் பிக்சல் 6 டீசர்

    இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 12 எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் விலை இந்தியாவில் மாற்றப்பட்டது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஐபோன் 11, ஐபோன் 12 மாடல்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களின் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் 11 (64 ஜிபி மற்றும் 128 ஜிபி) விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் 256 ஜிபி விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 14 ஆயிரமும், ஐபோன் 12 மினி விலை ரூ. 10 ஆயிரமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஐபோன் 12

    புதிய விலை விவரம்

    ஐபோன் 11 (64 ஜிபி) - ரூ. 49,900
    ஐபோன் 11 (128 ஜிபி) - ரூ. 54,900
    ஐபோன் 12 மினி (64 ஜிபி) - ரூ. 59,900
    ஐபோன் 12 மினி (128 ஜிபி) - ரூ. 64,900
    ஐபோன் 12 மினி (256 ஜிபி) - ரூ. 74,900
    ஐபோன் 12 (64ஜிபி) - ரூ. 65,900
    ஐபோன் 12 (128ஜிபி) - ரூ. 70,900
    ஐபோன் 12 (256ஜிபி) - ரூ. 80,900

    ஆப்பிள் வலைதளத்தில் ஐபோன்களின் விலை எம்.ஆர்.பி. அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.
    ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் அறிவித்த புது சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் மினி மாடல்களில் துவங்கி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, ஐபோன் 13, 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஐபேட்
     
    ஐபேட் மற்றும் ஐபேட் மினி

    புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் மினி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

    ஆப்பிள் வாட்ச் 7

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

    புதிய ஆப்பிள் வாட்ச் 7 நாள் முழுக்க பேட்டரி பேக்கப், பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இ.சி.ஜி. போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய வாட்ச் 7 இதுவரை வெளியான வாட்ச் மாடல்களில் மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக வாட்ச் பேஸ்கள், ஐந்து அலுமினியம் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 விலை 399 டாலர்கள் என துவங்குகிறது.

    ஐபோன் 13

    ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களில் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரில் 16 கோர் நியூரல் என்ஜின் உள்ளது. புதிய பிராசஸருடன் ஐபோன் 13 மாடலில் 12 எம்பி வைடு கேமரா சென்சார் உள்ளது.

    2021 ஐபோன் மாடலில் முன்பை விட அதிக 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள பேட்டரி முந்தைய மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. ஐபோன் 13 மினி பேட்டரி முந்தைய ஐபோன் 12 மினி மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது.

    புதிய ஐபோன் சீரிசில் மேம்பட்ட மேக்சேப் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 மினி 128 ஜிபி விலை ரூ. 69,900 என்றும் ஐபோன் 13 விலை ரூ. 79,900 என துவங்குகிறது.

    ஐபோன் 13 ப்ரோ

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ்

    புதிய ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் இதுவரை இல்லாத அளவு அசத்தலான கேமரா அப்டேட்களை பெற்று இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிபோட்டோ கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவற்றில் உள்ள அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் அம்சம் உள்ளது. இத்துடன் பிரத்யேக மேக்ரோ மோட் வழங்கப்பட்டு உள்ளது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் புகைப்படங்களை அதிகளவு கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபோன் 13 ப்ரோ மாடல் 6.1 இன்ச் அளவிலும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் அளவிலும் கிடைக்கிறது. இவற்றில் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ப்ரோ மோஷன், ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இந்தியாவில் ஐபோன் 13 ப்ரோ 128 ஜிபி விலை ரூ. 1,19,900 என துவங்குகிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி ரூ. 1,29,900 என துவங்குகிறது.
    உலகின் அதிவேக பிராசஸர், அசத்தல் 5ஜி, கேமரா அம்சங்களுடன் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அறிமுகம்.


    ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களை தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் இதுவரை இல்லாத அளவு அசத்தலான கேமரா அப்டேட்களை கொண்டிருக்கிறது.

    ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் டெலிபோட்டோ கேமரா, அல்ட்ரா வைடு மற்றும் வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் உள்ள அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் அம்சம் உள்ளது. இத்துடன் பிரத்யேக மேக்ரோ மோட் வழங்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 13 ப்ரோ மாடலில் புகைப்படங்களை அதிகளவு கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ப்ரோ தர கேமரா சிஸ்டம் இதுவரை இல்லாத அளவு சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க வழி செய்கிறது.

     ஐபோன் 13 ப்ரோ

    சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ப்ரோ மோஷன், ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. புதிய ஐபோன் 13 ப்ரோ மாடல் 6.1 இன்ச் அளவிலும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் அளவிலும் கிடைக்கிறது.

    பல்வேறு அசத்தல் அப்டேட்களை கொண்டிருக்கும் ஐபோன் 13 ப்ரோ முந்தைய மாடலை விட 1.5 மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் முந்தைய ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலை விட 2.5 மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே 999 டாலர்கள் மற்றும் 1099 டாலர்கள் என துவங்குகிறது. புதிய ப்ரோ மாடல்களின் மெமரி 128 ஜிபியில் துவங்கி அதிகபட்சம் 1 டிபி வரை கிடைக்கிறது.  

    ×