search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி 11டி
    X
    சியோமி 11டி

    சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது சியோமி 11டி மற்றும் சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி 11டி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், சியோமி 11டி ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ். உள்ளது. இரு மாடல்களுக்கும் மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

     சியோமி 11டி ப்ரோ

    சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்களில் 108 எம்பி வைடு ஆங்கில், 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. சியோமி 11டி ப்ரோ மாடல் 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி 11டி மற்றும் 11டி ப்ரோ மாடல்கள் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி 8 ஜிபி+128 ஜிபி விலை 499 யூரோக்கள் என்றும் சியோமி 11டி ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை 649 யூரோக்கள் என துவங்குகிறது.
    Next Story
    ×