என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டுள்ளது.


    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் என அழைக்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    இத்துடன் 16 எம்.பி. செல்பி கேமரா, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது.

     ரியல்மி 8எஸ்

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 8எஸ் 5ஜி மாடல் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் யுனிவர்ஸ் புளூ மற்றும் யுனிவர்ஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 17,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 19,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 8எஸ் 5ஜி விற்பனை செப்டம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    ஹூவாய் நிறுவனத்தின் வாட்ச் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.


    ஹூவாய் நிறுவனம் வாட்ச் ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டண்ட் சபையர் டையல், 200 வாட்ச் பேஸ்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, டைட்டானியம் பிரேம், செராமிக் பேக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 5ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நூற்றுக்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள் வழங்கப்படுகின்றன.

     ஹூவாய் வாட்ச் ஜிடி 2 ப்ரோ

    இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ 5 நிமிடங்கள் வயர்லெஸ் குயிக் சார்ஜ் செய்தால் 10 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் இது ஸ்மார்ட் பவர் சேவிங் 2.0 வசதி கொண்டிருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் மற்றும் எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்12 மற்றும் எப்12 ஸ்மார்ட்போன்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி எம்12 மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் விலை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வலைதளங்களில் மாற்றப்பட்டது.

    புதிய விலை விவரம்

    சாம்சங் கேலக்ஸி எம்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499
    சாம்சங் கேலக்ஸி எப்12 4 ஜிபி + 64 ஜிபி ரூ. 11,499

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கேலக்ஸி எப்12 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்12 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 850 பிராசஸர், 48 எம்பி குவாட் கேமரா சிஸ்டம், 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் மட்டுமின்றி ரியல்மி மற்றும் ரெட்மி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலையும் சமீப காலங்களில் பலமுறை மாற்றப்பட்டன. அந்தவகையில் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்பட்டது.
    ரியல்மி நிறுவனம் புதிய 8ஐ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 7ஐ மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். 

    புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி 8ஐ

    புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

    இந்தியாவில் புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சியோமி நிறுவனம் விரைவில் 11 லைட் 5ஜி என்.இ. ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. என்.இ. என்பது நியூ எடிஷனை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய சியோமி 11 லைட் 5ஜி என்.இ. மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் 159 கிராம் எடை கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 20 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் 8 எம்பி + 5 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     சியோமி  ஸ்மார்ட்போன்

    இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளூ, சியான், கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் விற்பனை துவங்கியது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    எனினும், 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல்கள் விற்பனை முதலில் துவங்கியது. இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 27,999 மற்றும் ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விற்பனை இன்று துவங்கியது. இதன் விலை ரூ. 25,999 ஆகும்.

     ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து ஜிடி மாஸ்டர் எடிஷன் வேரியண்ட்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் உலகின் முதல் 200 எம்பி கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சாரை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வழங்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் புதிய 200 எம்பி கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. சியோமியின் எம் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    இந்த ஸ்மார்ட்போன்கள் சியோமி 12 சீரிஸ் என அழைக்கப்பட இருக்கின்றன. சியோமி 12 சீரிசில் ஒரு மாடல் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் என்கோ பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.


    ஒப்போ நிறுவனம் என்கோ பட்ஸ் பெயரில் புது என்ட்ரி லெவல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் 8 எம்.எம். டைனமிக் டிரைவர், ப்ளூடூத் 5.2, லோ-லேடென்சி டிரான்ஸ்மிஷன் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    மியூசிக், பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. கேமிங் ப்ரியர்களுக்கு சூப்பர்-லோ 80 எம்.எஸ். லேடென்சி கேம் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இயக்க பயனர்கள் இயர்பட் மீது மூன்று முறை க்ளிக் செய்ய வேண்டும். 

     ஒப்போ என்கோ பட்ஸ்

    இந்த இயர்பட்ஸ் கால் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. ஒப்போ என்கோ பட்ஸ் மாடலில் ஐ.பி.54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த இயர்பட் கேஸ் 400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    ஒப்போ என்கோ பட்ஸ் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை ரூ. 1,799 சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களின் வெளியீட்டு விவரங்களை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட 7பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம்.

     ஆப்பிள்

    புதிய ஐபோன்களில் அதிவேக 5ஜி சேவை வழங்கும் ஏ15 சிப்செட், 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளே, சிறப்பான வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல்கள் 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் எஸ்7 சிப் வழங்கப்படலாம்.
    போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறியது.


    போக்கோ நிறுவனத்தின் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் கொண்டிருக்கும் எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.

     போக்கோ எக்ஸ்3 ப்ரோ

    சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தனது போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். 



    ஜூன் 15 ஆம் தேதி வாங்கிய புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ செப்டம்பர் 4 ஆம் தேதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக அவர் மேலும் தெரிவித்தார். 

    இத்துடன் வெடித்த நி்லையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார். ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவத்திற்கு போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்22 4ஜி ஸ்மார்ட்போனிற்கான சப்போர்ட் பக்கம் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. சாம்சங் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. 

    சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே இடம்பெற்று இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இதன் இந்திய வெளியீட்டுக்கான அறிவிப்பும் வெளியாகும். 

     வலைதள ஸ்கிரீன்ஷாட்

    முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எம்22 4ஜி மாடலில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், டூயல் சிம் ஸ்லாட், பல்வேறு எல்.டி.இ. பேண்ட்களுக்கான வசதி, டூயல் பேண்ட் வைபை, என்.எப்.சி., ப்ளூடூத் 5 போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டு வரும் புது அம்சங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் மற்றும் ப்ரோபைல் புகைப்படத்தை குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் மறைத்து வைக்க செய்யும் அம்சம் உருவாக்கப்படுகிறது.

    தற்போது இவற்றை யாருக்கும் வேண்டாம் (no one), அனைவருக்கும் (everyone) மற்றும் காண்டாக்ட்களுக்கு மட்டும் (only contacts) என மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களை மட்டும் தேர்வு செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. 

     வாட்ஸ்அப்

    புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் விரைவில் இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் பீட்டாவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×