என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    நுபியாவின் ரெட்மேஜிக் தனது புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    நுபியா நிறுவனத்தின் ரெட்மேஜிக் பிராண்டு சீன சந்தையில் ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.8 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் ஸ்கிரீன், 165 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ

    ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ அம்சங்கள்

    - 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஆமோலெட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர்
    - அட்ரினோ 660 ஜி.பி.யு.
    - 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 12 ஜிபி / 16 ஜிபி / 18 ஜிபி ரேம், 256 ஜிபி / 512 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரெட்மேஜிக் ஓ.எஸ். 4.5
    - டூயல் சிம்
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்பி 120-டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 8 எம்பி செல்பி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    - 5ஜி NSA /SA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மேஜிக் 6எஸ் ப்ரோ பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 3,999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 45,260 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 4,799 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 54,315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய கலர்ஓ.எஸ். 12 விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய ஆண்ட்ராய்டு ஓ.எஸ். சார்ந்த தங்களின் ஓ.எஸ்.-ஐ வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் தனது கலர்ஓ.எஸ். 12 வெளியீட்டை டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. புதிய கலர்ஓ.எஸ். வெளியீட்டை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது.

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    ஒப்போ நிறுவனம் தனது கலர்ஓ.எஸ். 12 வெளியீட்டு தேதியை நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 வெளியீட்டை தொடர்ந்து ஒப்போ பிரத்யேக நிகழ்வில் கலர்ஓ.எஸ். 11 வெர்ஷனை வெளியிட்டது. 
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிடி சீரிசில் புது ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய ஜிடி நியோ 2 பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதன்படி புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3370 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6.62 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.

     ரியல்மி ஜிடி நியோ

    சமீபத்தில் வெளியான ரென்டர்களில் ரியல்மி ஜிடி நியோ 2 மாடலின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட், மேட் பினிஷ் மற்றும் வளைந்த பேனல் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், டூயல்-எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.
    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவன வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.


    மின்னணு அக்சஸரீக்கள் பிராண்டான நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படுகிறது. இதில் 1.28 இன்ச் டிஸ்ப்ளே, சின்க் அலாய் பாடி, 24x7 இதய துடிப்பு சென்சார், 13 ஸ்போர்ட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    நாய்ஸ்பிட் கோர் மாடல் சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்கிறது.

     நாய்ஸ்பிட் கோர்

    இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்பை மோடில் இந்த வாட்ச் 30 நாட்களுக்கான பேக்கப் வழங்கும். நாய்ஸ்பிட் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும் வசதியை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது. 

    நாய்ஸ்பிட் கோர் ஸ்மார்ட்வாட்ச்- சார்கோல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 

    அதன்படி கேலக்ஸி எப்42 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், எப்.ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கீக்பென்ச் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலிலும் இடம்பெற்று இருக்கிறது. அதில் கேலக்ஸி வைடு 5 மற்றும் எப்42 5ஜி மாடல்களின் மாடல் நம்பர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது. 

    அந்த வகையில் கேலக்ஸி வைடு 5 ஸ்மார்ட்போன் பல்வேறு சந்தைகளில் வேறு பெயர்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மாப்ட்போன் புளூ நிறத்தில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் சமீபத்தில் தனது விசேஷ சலுகைகளின் வேலிடிட்டியை குறைத்தது. தற்போது ரூ. 1498 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

    ரூ. 1498 மட்டுமின்றி ரூ. 2399 விலையில் மற்றொரு சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் 90 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல். ரூ. 1,498 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கிலோபைட் ஆக குறைக்கப்படும்.

    கோப்புப்படம்

    முதற்கட்டமாக சென்னையில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகை தற்போது நாட்டின் அனைத்து வட்டாரங்களிலும் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற 123 என்ற எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் "STVDATA1498" என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகை 425 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை தனது ஏ சீரிசில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ13 5ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் எஸ்.எம்.-ஏ136பி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் அல்லது சாம்சங்கின் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ12 எக்சைனோஸ் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.


    விவோ நிறுவனத்தின் எக்ஸ்70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கின்றன. விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இரண்டு எக்ஸ்70 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

    அதன்படி இரு ஸ்மார்ட்போன்களும் வி2132ஏ மற்றும் வி2133ஏ எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கின்றன. வி2132ஏ மாடலில் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், வி2133ஏ மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 3.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது.

     விவோ எக்ஸ்70

    வி2132ஏ மாடலில் எக்சைனோஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்70 சீரிசில் - எக்ஸ்70, எக்ஸ்70 ப்ரோ மற்றும் எக்ஸ்70 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை விவோ எக்ஸ்70 மாடலில் 6.58 இன்ச் ஆமோலெட் டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4320 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. வி2132ஏ மாடல் 6 ஜிபி / 8 ஜிபி / 12 ஜிபி ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் 2021 ஐபோன்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடல் இம்முறை பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய சீரிஸ் 6 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் 16 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    பெரிய டிஸ்ப்ளேவில் புது வாட்ச் பேஸ்கள் சிறப்பாக காட்சியளிக்கும் என்றும் சிறு விவரங்களும் துல்லியமாக தெரியும் என்றும் கூறப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 - 41 எம்.எம். மற்றும் 45 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 2021 ஐபோன் மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலில் 1.9 இன்ச் ஸ்கிரீன், புதிய வாட்ச் பேஸ்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் நைக் மற்றும் ஹெர்மஸ் எடிஷனுக்கு பிரத்யேக வாட்ச் பேஸ்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 மாடல் அதிவேக பிராசஸர், ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.


    நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன வலைதளத்தில் சான்று பெற்றது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் தற்போது கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் சில விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    கீக்பென்ச் விவரங்களின்படி நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஏரற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்பட்டது.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    புதிய நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 288 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,022 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி மாடல் வெளியீட்டை தொடர்ந்து கேலக்ஸி ஏ52 விலை ரூ. 1,000 உயர்த்தப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ52 மாடலின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ52

    சாம்சங் கேலக்ஸி ஏ52 புது விலை விவரம்

    கேலக்ஸி ஏ52 - 6 ஜிபி + 128 ஜிபி ரூ. 27,499 
    கேலக்ஸி ஏ52 - 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 28,999

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ52 மாடலில் 6.5 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.


    ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி பிராண்டு, இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ கியூ.சி.சி.3040 சிப்செட், ப்ளூடூத் 5.2, ஆப்ட்-எக்ஸ். அடாப்டிவ் கோடெக் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் பல்வேறு அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல், ஸ்மார்ட் வியர் டிடெக்‌ஷன் வசதி கொண்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடலில் 7 மணி நேர பிளேபேக், 600 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சார்ஜிங் கேஸ் உள்ளது. இது மொத்தத்தில் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

     ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ

    ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ மாடல் புளூ, வைட் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 ஆகும். புதிய ரெட்மி இயர்பட்ஸ் 3 ப்ரோ அமேசான், எம்.ஐ. வலைதளம், எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    ×