என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்7 5ஜி மற்றும் எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் ஒன்பிளஸ் நார்டு, சியோமி எம்ஐ 10ஐ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 மாடலில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு 5ஜி பிராசஸர், 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 16 எம்பி பன்ச் ஹோல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடலில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 பேஸ் வேரியண்ட் ஆன 6 ஜிபி / 128 ஜிபி மெமரி விலை ரூ. 19,999, 8 ஜிபி / 128 ஜிபி மெமரி விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 8 ஜிபி / 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களுக்கு பதில் அளித்து இருக்கிறது.
இணையத்தில் பயனர் விவரங்கள் அம்பலமாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தனிநபர் துவங்கி ஒவ்வொரு நிறுவனங்களும் டேட்டாவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏர்டெல் பயனர் விவரங்கள் இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஏர்டெல் வாடிக்கையாளர்களில் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இத்தனை லட்சம் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் முகவரி, நகரம், ஆதார் எண் மற்றும் பாலிணம் போன்ற விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து பதில் அளித்த ஏர்டெல் நிறுவனம், பயனர் விவரங்கள் வெளியானதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இணையத்தில் விற்பனைக்கு வந்ததாக கூறும் விவரங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானவை கிடையாது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
வாடிக்கையாளர்களின் விவரங்களை பாதுகாப்பதில் ஏர்டெல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பெருமையாக உணர்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 129 விலையில் புதிய சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 129 விலையில் புதிதாக சினிமா பிளஸ் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் மற்றும் வூட் செலக்ட் போன்ற ஒடிடி தளங்களை இயக்குவதற்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய சேவைக்கான மாத கட்டணம் ரூ. 199 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக மாதம் ரூ. 129 விலையில் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் மொத்தம் 300-க்கும் அதிக டிவி சேனல்கள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

சினிமா பிளஸ் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் யப் டிவியுடன் இணைந்து உள்ளது. இந்த சேவையில் சோனிலிவ் ஸ்பெஷல், வூட் செலக்ட், யப் டிவி பிரீமியம் மற்றும் ஜீ5 பிரீமியம் போன்ற தளங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சேவை யப் டிவி ஸ்கோப் மூலம் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் சினிமா பிளஸ் சேவையில் இணைய தரவுகளை கணினி, மொபைல் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிக்களில் பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒவ்வொரு பயனருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட பரிந்துரைகள் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் 200 எம்பி கேமரா சென்சாரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் 200 எம்பி ISOCELL கேமரா சென்சார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய 200 எம்பி கேமரா சென்சார் முதலில் சாம்சங் அல்லாத நிறுவன ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த கேமரா இசட்டிஇ ஆக்சன் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய 200 எம்பி கேமரா 16K தர வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது புகைப்படங்களின் தரத்தை மேம்பட்ட 16 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் என்றும் வீடியோக்களுக்கு 4 இல் 1 முறையில் பிக்சல் பின்னிங் செய்யும் திறன் கொண்டிருக்கும்.

முன்னதாக சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் 1080 5 நானோமீட்டர் மொபைல் பிராசஸரை 5ஜி வசதி மற்றும் 200 எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை இயக்கும் திறனுடன் அறிமுகம் செய்து இருந்தது. தற்சமயம் வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 200 எம்பி சாம்சங் சென்சார் S5KGND எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய சென்சார் அளவில் 1/1.37- இன்ச் அளவில் 1.28 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கிறது. முன்னதாக இசட்டிஇ தலைவர் நி பெய் வெளியிட்ட தகவல்களில், புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைப்பதில் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை தெரிவித்து உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட மேட் எக்ஸ்2 மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் எக்ஸ்எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிரின் 9000 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் ஹூவாய் முன்னதாக அறிமுகம் செய்த மேட் 40 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருந்தது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கென ஹூவாய் நிறுவனம் சுமார் 100 காப்புரிமைகளை பெற்று இருக்கிறது. இதனால் புதிய மாடலில் கணிசமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.01 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே, 6.45 இன்ச் 2700x1160 பிக்சல் இரண்டாவது ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு, 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய குறுகிய காலக்கட்டத்தில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10ஐ 5ஜி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் மதிப்பு ரூ. 400 கோடிகளை கடந்து இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து உள்ளது. இந்தியாவில் எம்ஐ 10ஐ 5ஜி விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கியது குறிப்பிடத்தக்கது.
விற்பனை மட்டுமின்றி கூகுளில் 2021 ஜனவரி மாதத்தில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பெற்று இருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்து இருக்கிறது. வெளியான சில வாரங்களில் அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான சாதனங்கள் பட்டியலிலும் எம்ஐ 10ஐ 5ஜி இடம்பிடித்தது.
இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்ஐ 10ஐ 5ஜி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா கொண்ட குறைந்த விலை மாடலாக வெளியானது.

சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4820 எம்ஏஹெச் பேட்டரி
- 33வாட் பாஸ்ட் சார்ஜிங்
பாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பாசில் நிறுவனம் இந்தியாவில் வியர் ஒஎஸ் கொண்ட புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பாசில் ஜென் 5இ எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.19 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் இன்டர்சேன்ஜ் செய்யக்கூடிய வாட்ச் பேண்ட்கள், குவிக் சார்ஜிங் வசதி, பல்வேறு ஆக்டிவிட்டி சென்சார்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஜென் 5இ மாடல் - 42எம்எம் மற்றும் 44எம்எம் என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100, 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. மேலும் 22எம்எம் இன்டர்சேன்ஜ் செய்யக்கூடிய ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாட்ச் 3ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
பாசில் ஜென் 5இ மாடல் பிளாக் சிலிகான், பிரவுன் லெதர், பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டூ-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ரோஸ் கோல்டு-டோன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்/மெஷ் மற்றும் பிளஷ் சிலிகான் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,495 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
காதலர் தினத்தை ஒட்டி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் அசத்தல் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் தகவல் ஒன்று அதன் பயனர்கள் தாஜ் விடுதியில் ஏழு நாட்கள் இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை வென்று இருப்பதாக கூறுகிறது.
ஒருவழியாக தாஜ் ஓட்டலில் ஏழு நாட்களுக்கு இலவசமாக தங்குவதற்கான பரிசு கூப்பனை பெற்று இருக்கிறேன் என கூறும் தகவல் மற்றும் இணைய முகவரி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது.

இணைய முகவரியை க்ளிக் செய்ததும், `காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் தாஜ் ஓட்டல் சார்பில் 200 பரிசு கூப்பன்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஏழு நாட்கள் எந்த தாஜ் ஓட்டலிலும் இலவசமாக தங்க முடியும். இதற்கு சரியான பரிசு பெட்டியை திறக்க வேண்டும்.' எனும் கூறும் தகவல் அடங்கிய வலைப்பக்கம் திறக்கிறது.
பின் பரிசு கூப்பனை க்ளிக் செய்த பின், பயனர்கள் பரிசை பெற குறுந்தகவலை ஐந்து க்ரூப் அல்லது 20 அக்கவுண்ட்களுக்கு அனுப்ப கோருகிறது. உண்மையில் இது மால்வேர் அடங்கிய வலைதளமாக இருக்கலாம்.
இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தாஜ் ஓட்டல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், பயனர்கள் வைரல் தகவலை நம்பி வாட்ஸ்அப் செயலியில் வலம் வரும் இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள தகவல் பொய் என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷன் ஆகும்.
புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ல் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 13எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
- PowerVR Rogue GE8100 GPU
- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.9
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.0
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் புளூ, ரெட், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசானில் இது ரூ. 6,799 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஏற்பட்ட சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
உலகில் கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு உச்சநிலையில் இருந்த போது, ஐபோன் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருந்த போது பேஸ் ஐடி அம்சத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்சமயம் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் பேஸ் ஐடி அம்சத்தை ஆப்பிள் வாட்ச் அணிந்திருக்கும் போது இயக்கும் வசதியை வழங்குகிறது.
அதாவது ஆப்பிள் வாட்ச் அணிந்து இருப்பவர்கள் முகக்கவசத்துடன் தங்களின் ஐபோனை பேஸ் ஐடி கொண்டு அன்-லாக் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது முக அங்கீகாரம் செய்யும் அம்சம் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உணர்ந்து செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்புவோர் அதனை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த அம்சம் செயல்படும் போது வெற்றிகரமாக அன்லாக் செய்யப்பட்டதை ஆப்பிள் வாட்ச் ஹேப்டிக் முறையில் பயனர்களுக்கு உணர்த்தும். எனினும், இந்த அம்சம் போனினை அன்லாக் செய்வதற்காகவே வழங்கப்படுகிறது.
இதை கொண்டு ஆப் ஸ்டோர் பர்சேஸ் மேற்கொள்ள முடியாது. இந்த அம்சம் ஐஒஎஸ் 14.5 டெவலப்பர் பீட்டாவில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பேரண்சி அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எம்3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கூல் புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்குகிறது.






