என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட இருக்கிறது. இந்திய சந்தைக்கென தனித்துவம் மிக்க ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக ஹெச்எம்டி குளோபல் நிறுவன துணை தலைவர் சன்மீத் கோச்சர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது..,

    "இந்தியா எங்களுக்கு மிகமுக்கிய சந்தை ஆகும். முதற்கட்டமாக இந்திய சந்தைக்கென பிரத்யேக சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். அடுத்து 5ஜி பிரிவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் குறைந்த விலையில் 5ஜி சாதனங்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறோம்," 

    "இந்தியாவில் உற்பத்தி ஆலையை கட்டமைப்பது பற்றி இதுவரை எந்த திட்டமும் இல்லை. தொடர்ந்து குவால்காம் மற்றும் கூகுள் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்." 

    என அவர் தெரிவித்தார்.
    இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் பயன்பாட்டிற்கு வர இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    இந்திய சந்தையில் விரைவில் 5ஜி சேவை வழங்கப்பட இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவில்லை. மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசு 5ஜி ஸ்பெக்ட்ரமை விற்பனை செய்யப்போவது இல்லை. 

    எனினும், சில டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் உள்ள பேண்ட்களிலேயே 5ஜி சேவையை வழங்க முடியும் என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 28 ஆம் தேதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 

    இந்திய சந்தையில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பம் விரைவில் வெளியாகும் என்ற போதும், பெரும்பாலானோர் இதனை பயன்படுத்த சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. 

     கோப்புப்படம்

    கடந்த மாதம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021 இரண்டாவது அரையாண்டில் இந்தியாவில் 5ஜி புரட்சி துவங்கும் என அறிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களில் 5ஜி வெளியீடு விரைவில் நடைபெறலாம் என்ற போதும், இதன் பயன்பாடு துவங்க சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆண்டில் தான் இந்தியாவில் உள்ள 6 சதவீதம் பேர் 5ஜி பயன்படுத்து துவங்குவர் என்றும் 2040 ஆண்டில் இது 93 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

    5ஜி வெளியீட்டிற்கு பாதுகாப்பு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதுதவிர இந்தியாவில் 5ஜி உள்கட்டமைப்புகளில் ஹூவாய் மற்றும் இசட்டிஇ போன்ற நிறுவனங்களின் பங்களிப்பும் 5ஜி தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
    ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 5499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஐடெல் மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஏ47 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 5 எம்பி ஏஐ டூயல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, பல்வேறு அம்சங்களை வழங்கும் கைரேகை சென்சார், கஸ்டமைஸ்டு ஷாட்கட் அம்சம், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஐடெல் ஏ47

    ஐடெல் ஏ47 சிறப்பம்சங்கள்

    - 5.5 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 5 எம்பி ஏஐ டூயல் கேமரா
    - 5 எம்பி செல்பி கேமரா
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
    - ஆண்ட்ராய்டு 9 கோ எடிஷன் 
    - 3020 எம்ஏஹெச் பேட்டரி

    புதிய ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பிள் மற்றும் ஐஸ் லேக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் பிப்ரவரி 4 ஆம் தேதி தனது எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. சமீபத்தில் ரியல்மி எக்ஸ்7 5ஜி ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.

    தற்சமயம் ரிய்லமி எக்ஸ்7 5ஜி ரேம் மற்றும் மெமரி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 பேஸ் வேரியண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     ரியல்மி எக்ஸ்7

    இதுதவிர 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 21,999 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி எக்ஸ்7 மாடல் துவக்க விலை ரூ. 17 ஆயிரத்தில் துவங்கலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் விலை விவரங்கள் ரியல்மி எக்ஸ்7 சீன விலையை விட குறைவு ஆகும்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 60 ஹெர்ட்ஸ் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் மாடல்களின் ரென்டர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடல்களின் விவரங்கள், கான்செப்ட் ரென்டர் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றன. அதன்படி தற்சமயம் ஐபோன் எஸ்இ3 மற்றும் ஐபோன் 12எஸ் ப்ரோ மாடல்களுக்கான ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஐபோன் எஸ்இ 3 மாடல் தோற்றத்தில் 2020 ஐபோன் எஸ்இ மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் புதிய ரென்டரில் ஐபோன் எஸ்இ3 ஹோம் பட்டன் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. ஐபோன் 12எஸ் ப்ரோ ஐபோன் 12 ப்ரோ போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     ஐபோன்

    முந்தைய தகவல்களில் ஐபோன் 12எஸ் ப்ரோ ஐபோன் 13 ப்ரோ என்றும் இது 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. புதிய ரென்டர்களின் படி ஐபோன் 12எஸ் ப்ரோ மாடலில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், இன்-டிஸ்ப்ளே டச் ஐடி கைரேகை சென்சார் மற்றும் பேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    ஐபோன் எஸ்இ3 ரென்டர்களின் படி இதன் பின்புறம் ஒற்றை 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5.4 இன்ச் எல்சிடி பேனல், 4 ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையை பொருத்தவரை ஐபோன் எஸ்இ3 துவக்க விலை 499 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் மோட்டோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படலாம். 

    மோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. மோட்டோ ஜி ப்ரோ பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததை ரெடிட் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

     மோட்டோ ஜி ப்ரோ

    புதிய அப்டேட் கான்வெர்சேஷன் பபிள், ஸ்கிரீன் ரெக்கார்டிங், மேம்பட்ட மீடியா கண்ட்ரோல் மற்றும் பிரைவசி அப்கிரேடு போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஜனவரி 2021 மாதத்துக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.

    முன்னதாக 2020 டிசம்பர் மாதத்தில் மோட்டோ ஜி ப்ரோ உள்பட 22 இதர மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோரோலோ தெரிவித்து இருந்தது. எனினும், வெளியீட்டுக்கான காலக்கெு பற்றி எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.
    இந்தியாவில் சில மொபைல் போன் பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு நீக்கப்பட்டு இருக்கிறது.


    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன கேட்ஜெட்கள் பிரிவில் பெரிய அறிவிப்பாக மொபைல் சார்ஜர் மற்றும் சில மொபைல் போன் பாகங்களுக்கான சுங்க வரி உயர்வு இருக்கிறது.

    மொபைல் போன்களுக்கு தேவைப்படும் சில பாகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு தற்சமயம் சுங்க வரி 2.5 சதவீதமாக மாற்றப்படுகிறது என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

     நிர்மலா சீதாராமன்

    “ஸ்மார்ட்போன்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சார்ஜர் மற்றும் மொபைல் போன் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. தற்சமயம் உலகிற்கு நாம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம்.” 

    “உள்நாட்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் மொபைல் மற்றும் சார்ஜர்களை ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டு மதிப்பு கூட்டல் காரணமாக சில பாகங்களுக்கான வரிவிலக்கை ரத்து செய்து 2.5 சதவீதம் வரி வசூலிக்கப்பட இருக்கிறது.”என அவர் தெரிவித்தார்.

    வரி மாற்றம் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தற்சமயம் இருப்பதை விட மேலும் அதிகமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 485 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. மேலும் இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    டேட்டா மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது. முன்னதாக பிஎஸ்என்எல் காம்போ சலுகை பலன்கள் மாற்றப்பட்டு தினமும் 250 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்பட்டது.

     கோப்புப்படம்

    புதிய சலுகையை ஏர்டெல் ரூ. 598 சலுகையுடன் ஒப்பிடும் போது, பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று வி ரூ. 555 சலுகையும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த வரிசையில் பிஎஸ்என்எல் மட்டுமே குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குகிறது.

    4ஜி நெட்வொர்க் இல்லாததால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இருந்து விலக துவங்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு அனுமதி வழங்க இருக்கிறது.
    ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ரெட்மி நோட் 10 இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி வருகிறது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    தற்சமயம் M2101K7AI எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன் இதேபோன்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் எப்சிசி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் ஸ்மார்ட்போனின் அம்சங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    மேலும் இந்த மாத துவக்கத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ பிஐஎஸ் சான்று பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் M210K6I எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக ரெட்மி நோட் 9 சீரிஸ் இருந்தது. 

     ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார், முன்புறம் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலி பயன்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தொடர்ந்து பார்ப்போம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் செயலியில் புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பயனர்கள் அனுமதி வழங்காவிட்டால், செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கைவிட மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. 

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவீர்களா என்ற கோணத்தில் தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டு பதில் அளித்த இந்திய வாட்ஸ்அப் பயனர்கள் அசத்தலான பதிலை வழங்கி உள்ளனர்.

     கோப்புப்படம்

    ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டுமா என்பதை பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கின்றனர். இதர 28 சதவீதம் பேர் மே மாதம் புது பிரைவசி பாலிசி மாற்றப்பட்டால் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய திட்டமிடுவதாக தெரிவித்தனர்.

    குருகிராமை சேர்ந்த ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறது. அதன்படி ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 41 சதவீதம் பேர் டெலிகிராம் செயலியையும், 35 சதவீதம் பேர் சிக்னல் செயலியையும் பயன்படுத்த போவதாக தெரிவித்து உள்ளனர். 

    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றான தளங்களை பொருத்தவரை பயனர்கள் டெலிகிராம் செயலி மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வில் எட்டு நகரங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டு பதில் அளித்தனர்.
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஆப்பிள் சிஇஒ டிம் குக் கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரங்களை பார்ப்போம்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று சில நாட்களே நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய அதிபருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கைகளுக்கு பாராட்டு மற்றும் எதிர்ப்பு என பலதரப்பட்ட கருத்துக்களை டிம் குக் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அந்த வகையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை டிம் குக் பாராட்டி உள்ளார். ஆப்பிள் சிஇஒ மட்டுமின்றி டிம் குக் பிஸ்னஸ் ரவுண்ட்-டேபிள் எனும் அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் பதவி வகிக்கிறார்.

     ஆப்பிள்

    இந்த அமைப்பு அமெரிக்காவில் கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மை உள்ளிட்டவைகளுக்கு ஆதரவான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக டிம் குக் பைடனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    டிம் குக் எழுதியிருக்கும் கடிதத்தில், 

    “இந்த பிரச்சினை மட்டுமின்றி நம் நாட்டை மேம்பட்ட, ஒருங்கிணைந்த மற்றும் வளமிக்கதாக மாற்ற உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறோம்.” 

    என தெரிவித்து இருக்கிறார்.
    சியோமி நிறுவனம் புதுவித ஏர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாதனங்களுக்கு காற்றுவாக்கில் சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் எம்ஐ ஏர் சார்ஜ் என அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை கேபிள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு இன்றி சார்ஜ் செய்யும். 

    தற்போதைய அறிவிப்பின் படி இந்த தொழில்நுட்பம் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தக ரீதியில் வழங்கப்பட்டால், அறையினுள் பயனர் சாதனத்தை பயன்படுத்தும் போதே அவற்றுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இது சியோமி நிறுவனத்தின் புதுவித சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகும்.

     எம்ஐ ஏர் சார்ஜ்

    முதற்கட்டமாக இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச், இதர அணியக்கூடிய சாதனங்கள், ஸ்பீக்கர்கள், சிறிய வீட்டு சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

    புதிய எம்ஐ ஏர் சார்ஜ் தொழில்நுட்பம் எந்த சாதனத்தையும் 5W திறன் கொண்டு சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் இது இரண்டு மீட்டர்களுக்குள் இருக்கும் சாதனங்களை சார்ஜ் செய்யும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தி பல்வேறு சாதனங்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
    ×