என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புது அப்டேட்களை வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் பரவல் உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை கடந்துள்ளது.

அப்படியாக பாதிப்பை பெருமளவு குறைக்க தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. கடந்த மாதம் கூகுள் நிறுவனம் பல்வேறு தடுப்பூசி பற்றிய தகவல்களை மிக எளிமையாக கொண்டு செல்லும் முயற்சியை துவங்கியது.
தற்போது கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் புதிய ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஐமேக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்பாட்ஸ் 3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர ஆப்பிள் பென்சில் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆப்பிள் பென்சில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புது ஐபேட் மாடல்கள் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஏர்பாட்ஸ் 3 தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் சிலிகான் டிப்கள் வழங்கப்படுகிறது. இதன் கேஸ் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இந்த விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் FHD+HDR10 ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
மோட்டோ ஜி60 மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 32 எம்பி பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

மோட்டோ ஜி60 / மோட்டோ ஜி40 பியூஷன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி (ஜி40 பியூஷன்)
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- டூயல் சிம்
- ஜி60 – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார்
- ஜி40 பியூஷன் – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா (16எம்பி - ஜி40 பியூஷன்)
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
இரு மோட்டோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
போட் நிறுவனத்தின் புதிய எக்ஸ்புளோரர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் தனது முதல் ஸ்மார்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. போட் எக்ஸ்புளோரர் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் கலர் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், 8 வித்தியாச ஸ்போர்ட் மோட்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் எக்ஸ்புளோரர் அம்சங்கள்
- 1.3 இன்ச் 240x240 பிக்சல் கலர் டச் 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2
- அழைப்புகள், குறுந்தகவல், அலாரம் உள்ளிட்டவைகளுக்கு வைப்ரேஷன் அலெர்ட்
- 24/7 இதய துடிப்பு சென்சார்
- 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- பில்ட் இன் ஜிபிஎஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல், Find my phone அம்சம்
- 210 எம்ஏஹெச் பேட்டரி
போட் வாட்ச் எக்ஸ்புளோரர் மாடல் பிட்ச் பிளாக், ஆரஞ்சு பியூஷன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2999 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11.1 வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
விலையை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடல் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தாய்லாந்தில் இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்திற்கு வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிராசஸர் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எனினும், இந்த மாடல் பற்றி எந்த தகவலும் இல்லை. பெரும்பாலும் இது ரியல்மி 8 5ஜி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 800 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியாகும் எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
எல்ஜி நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது. எனினும், ஏற்கனவே விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில், எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
- எல்ஜி விங்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி வி50எஸ்
- எல்ஜி வி50
- எல்ஜி ஜி8
- எல்ஜி கியூ31
- எல்ஜி கியூ51
- எல்ஜி கியூ52
- எல்ஜி கியூ61
- எல்ஜி கியூ70
- எல்ஜி கியூ92
- எல்ஜி கியூ9 ஒன்
- எல்ஜி ஜி8எக்ஸ்
- எல்ஜி ஜி8எஸ்
- எல்ஜி கே52
- எல்ஜி கே42

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
- எல்ஜி விங்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி வி50எஸ்
- எல்ஜி வி50
- எல்ஜி ஜி8
- எல்ஜி கியூ31
- எல்ஜி கியூ52
- எல்ஜி கியூ92
ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி விங்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இரண்டு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்கள் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 அல்லது மோட்டோ ஜி பிளே 2021 மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை மோட்டோரோலா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது. மோட்டோ ஜி சீரிஸ் மாடல்கள் தவிர இரு ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. விரைவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 மற்றும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ ஜி ஸ்டைல் 2021 மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ ஜி பிளே 2021 மாடல் டூயல் கேமரா சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம் அறிமுகமாகும் என தெரிகிறது.

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது.
தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த மாடல் ஏஆர்எம் சார்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் அமெரிக்காவின் எப்சிசி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்சிசி வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி வேரியண்டின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 20எக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் எப்சிசி வலைதளங்களில் முறையே M2103K19PI மற்றும் M2103K19PG மாடல் நம்பர்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் M2103K19PG மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10 5ஜி மாடலுடன் ஒற்றுப்போவதாக கூறப்படுகிறது.
எப்சிசி வலைதள விவரங்களின் படி இரு மாடல்களிலும் பெருமளவு வித்தியாசங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலில் 22 வாட் பாஸ்ட் சார்ஜிங், எம்ஐயுஐ 12 மற்றும் ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி ஸ்ப்ரிங் லோடெட் (Spring Loaded) நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் ஐபேட் ப்ரோ, புதிய ஐபேட் மினி, புதிய ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் தளங்களில் நேரலை செய்யப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள் ஏப்ரல் மாத நிகழ்வு குறித்த தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் தவறுதலாக நிகழ்வு நடைபெற இருப்பதை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமியின் ரெட்மி பிராண்டு கேமிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாக இருக்கிறது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தரத்தில், தலைசிறந்த கேமிங் அனுபவத்தை குறைந்த விலையில் வழங்கும் என ரெட்மி தெரிவித்து உள்ளது.

முதல் கேமிங் ஸ்மார்ட்போனிற்கென ரெட்மி கால் ஆப் டியூட்டி மொபைல் உடன் இணைந்து கேமின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த இருக்கிறது. ரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் எந்த தேதியில் அறிமுகமாகும் என ரெட்மி சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து வெளியான மற்றொரு தகவலில் ரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் இ4 AMOLED ஸ்கிரீன் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.






