என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி பிரத்யேக நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த தகவல் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஏர்டேக்ஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஏப்ரல் 20 நிகழ்வு குறித்து ஆப்பிள் எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், சிரியிடம் அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதி கேட்டதற்கு `ஏப்ரல் 20 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஆப்பிள் வலைதளத்தில் காணலாம்' என பதில் அளித்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிகழ்வு குறித்து விரைவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இது விர்ச்சுவல் முறையில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐபேட் ப்ரோ மாடல்கள், ஆப்பிள் ஏர்டேக்ஸ் போன்றவை அறிமுகம் செய்யப்படலாம்.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது டேப் மாடல்களை விற்பனை செய்ய புது விளம்பர திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் ‘Back to School’ திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் கேலக்ஸி டேப் மாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் கேலக்ஸி டேப் எஸ்6 லைட், கேலக்ஸி டேப் ஏ7, கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ், டேப் எஸ்7, டேப் எஸ்6 லைட் மற்றும் டேப் ஏ7 போன்ற மாடல்களை சாம்சங் வலைதளத்தில் வாங்கினால் அதிகபட்சம் 10 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்க பயனர்கள் முதலில் Samsung Student Advantage-இவ் லாக் இன் செய்ய வேண்டும். மேலும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வேறுபடும்.
ரியல்மி பிராண்டின் புது ரியல்மி 8 5ஜி மாடல் 48 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21ஆம் தேதி தாய்லாந்தில் அறிமுகமாகிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகமாக இருக்கிறது. எனினும், இதன் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 8 4ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் பேக் பினிஷ் மற்றும் `Dare to Leap' பிராண்டிங் காணப்படுகிறது. மேலும் இதில் 48 எம்பி பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
ரியல்மி 8 4ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டன. ரியல்மி 8 5ஜி மாடல் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வி13 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆகும். எனினும், புதிய நோட் 10 சீரிசின் பெரும்பாலான யூனிட்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட யூனிட்களில் ஸ்கிரீன் ப்ளிக்கர் மற்றும் ஸ்கிரீன் பயனற்று போவதாக பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். தொடர் குற்றச்சாட்டு ஏற்பட்டதை ஒப்புக் கொண்ட சியோமி நிறுவனம் விரைவில் இதனை சரி செய்வதாக அறிவித்து இருக்கிறது.

இந்த பிரச்சனை நோட் 10 சீரிஸ் பயன்படுத்துவோரில் 0.001 சதவீதம் பேருக்கு தான் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனை விரைந்து சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பதிலில் சியோமி தெரிவித்து உள்ளது.
ரெட்மி நோட் 10 சீரிசில் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 108 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் துவக்க விலை ரூ. 11,999 ஆகும்.
2021 மார்ச் மாதத்தில் உலகளவில் பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து இருக்கிறது.
உலகளவில் கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் அதிக டவுன்லோட்களை டிக்டாக் பெற்று இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் 5.8 கோடி டவுன்லோட்களை பெற்றுள்ளது. டிக்டாக்கை தொடர்ந்து பேஸ்புக் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கிறது. பேஸ்புக் செயலியை 5.6 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் அதிக டவுன்லோட்களை பெற்ற டாப் 5 செயலிகளில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் 25 சதவீதம் இந்தியாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து 8 சதவீதம் ஆகும்.
டாப் 10 செயலிகள் பட்டியலில் ஸ்னாப்சாட், ஜோஷ், ஜூம், டெலிகிராம் மற்றும் கேப்கட் உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் பேஸ்புக் முதலிடம் பிடித்து உள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்குகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கும் சிறப்பு பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனையில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ. 69,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் அம்சங்கள் மற்றும் வித்தியாசமான சுழலும் டிசைன் கொண்டுள்ளது.

எல்ஜி விங் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 என ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் Notify Me ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது ஏற்கனவே விற்று தீர்ந்து இருக்கும் என்றே தெரிகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து வழங்கிய சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை விளம்பர நோக்கில் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 9 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த சலுகை மேலும் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது.

அதன்படி பிஎஸ்என்எல் பிரீபெயிட் சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஜூலை 8 வரை வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு பிஎஸ்என்எல் சென்னை வட்டாரத்துக்கான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகை பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பலன்களை பொருத்தவரை பிஎஸ்என்எல் ரூ. 398 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், அன்லிமிடெட் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை பிரீமியம் எண்கள், ஐஎன் எண்கள், சர்வதேச எண்களுக்கு பொருந்தாது.
சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேலக்ஸி எம்42 5ஜி மாடலும் ஒன்று.
சமீபத்தில் கேலக்ஸி எம்42 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ, புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 20 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
ஐகூ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
ஐகூ 7 லெஜண்ட் மற்றும் ஐகூ நியோ 5 மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில், பல்வேறு விலை பட்டியலில் வித்தியாசமான ஐகூ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவுக்கான ஐகூ பிராண்டு தலைவர் ககன் அரோரா தெரிவித்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட புது ஐகூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 5 மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் புதிய மாடல் ஐகூ நியோ 5 மாடலாக இருக்குமா அல்லது முற்றிலும் புது ஸ்மார்ட்போனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் ஐகூ நியோ 5 மாடல் ரி-பிராண்டு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஐகூ 5 நியோ மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, OIS, LED பிளாஷ், 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ சென்சார் உள்ளது. இத்துடன் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது.
விவோ வை19 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இதுபற்றிய தகவல்களை விவோ வை19 பயனர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஜனவரியில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இந்த மாடல் இடம்பெறாமல் இருந்தது. புது அப்டேட் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை.
விவோ நிறுவனம் தனது வை19 ஸ்மார்ட்போனினை 2019 வாக்கில் ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆண்ட்ராய்டு 10, தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறுகிறது. புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் 3.2 ஜிபி அளவு கொண்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை விவோ வை19 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்பி ஏஐ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விவோ வை19 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.0, எப்எம் ரேடியோ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது தோற்றத்தில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் போன்றே காட்சியளிக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

இது 6எம்எம் டிரைவர், ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதன் இயர்பட்கள் முறையே 40 எம்ஏஹெச் பேட்டரியும் சார்ஜிங் கேஸ் 400 எம்ஏஹெச் பேட்டரியுடம் கொண்டிருக்கின்றன. இயர்பரட்கள் 6 மணி நேரமும், சார்ஜிங் கேஸ் கொண்டு கூடுதலாக 30 மணி நேரமும் பேக்கப் வழங்குகின்றன.
புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் போலார் சீ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 3,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.






