என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஒஎஸ் 7.5 கொண்டிருக்கும் ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7 சிறப்பம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
- IMG பவர் விஆர் GE8320 GPU
- 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஒஎஸ் 7.5
- 16 எம்பி பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
- ஏஐ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் மேக்னட் பிளாக், மார்பியஸ் புளூ மற்றும் ஸ்ப்ரூஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 6,999, 3 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 ஆகும். இது அமேசான் தளத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் 2021 கிரிகெட் தொடரை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஐபிஎல் 2021 கிரிகெட் தொடர் இன்று (ஏப்ரல் 9) துவங்குகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ கிரிகெட் செயலி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கோர் அப்டேட்கள், போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 401 விலையில் துவங்கி ரூ. 2599 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விலை உயர்ந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இவை அனைத்திற்கும் இலவச வருடாந்திர டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 401 சலுகையில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 598 சலுகையில் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ. 777 சலுகை 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, கூடுதலாக 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ரூ. 2599 சலுகையில் 365 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
50 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வந்த சம்பவம் குறித்து லின்க்டுஇன் விளக்கம் அளித்துள்ளது.
பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் 53.3 கோடி பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன சம்பவம் சமீபத்தில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது லின்க்டுஇன் பயனர் விவரங்களும் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 50 கோடி பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

பயனாளிகள் பெயர், லின்க்டுஇன் ஐடி, மொபைல் போன் நம்பர், பாலினம், சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஹைப்பர்லின்க் உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
`இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ள தகவல்கள் பல்வேறு வலைதளங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் பயனர் விவரங்கள் பார்க்க முடிகிறது. எனினும், இவை எதுவும் லின்க்டுஇன் மூலம் வெளியாகவில்லை.' என லின்க்டுன் தெரிவித்து உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி சீரிஸ் மற்றும் நோக்கியா எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியா ஜி10, ஜி20, நோக்கியா எக்ஸ்10 மற்றும் எக்ஸ்20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. நோக்கியா ஜி சீரிஸ் மிட்-ரேன்ஜ் பிரிவிலும், எக்ஸ் சீரிஸ் பிளாக்ஷிப் பிரிவிலும் அறிமுகமாகி இருக்கிறது.
நோக்கியா ஜி10 மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.

நோக்கியா ஜி20 மாடல் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, 5050 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
நோக்கியா எக்ஸ்10 மாடலிலும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் மற்றும் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, 4470 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
நோக்கியா எக்ஸ்20 மாடல் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் மற்றும் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 32 எம்பி செல்பி கேமரா, 4470 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
ஜாப்ரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போனில் அப்டேட் மூலம் புது வசதி வழங்குகிறது.
ஜாப்ரா நிறுவனம் தனது எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலி மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுக்கு வழங்கப்படுகிறது.
மென்பொருள் அப்டேட்டை பயனர்கள் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலி மூலம் எலைட் 85டி மாடலில் இன்ஸ்டால் செய்து கொளஅளலாம். அப்டேட் நிறைவுற்றதும், அலெக்சா சேவையை செட் செய்ய மீண்டும் ஜாப்ரா சவுண்ட் பிளஸ் செயலியில் செட்டிங்ஸ் அம்சத்தை இயக்க வேண்டும்.

செமி ஓபன் டிசைன் கொண்டிருக்கும் இந்த இயர்போன்களில் 12 எம்எம் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இரு்கின்றன. இதன் வடிவமைப்பு காதுகளில் சவுகரிய அனுபவத்தை வழங்குகின்றன. இதன் வடிவம் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் உள்ள பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினை வழங்குகிறது. இதில் உள்ள HearThrough Mode கொண்டு வெளிப்புற சத்தத்தை இயர்பட்கள் வழியே கேட்க முடியும். இந்த இயர்பட் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5.5 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 25 மணி நேர பேக்கப் கிடைக்கும்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி10 மற்றும் சி20 ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
ஹெச்எம்டி குளோபல் நோக்கியா 10 மற்றும் சி20 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அபேட் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் கைகளில் இருந்து நழுவாமல் இருக்கக்கூடிய க்ரிப் கேசிங் கொண்டிருக்கின்றன. மேலும் 3000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளன.
நோக்கியா சி10 ஸ்மார்ட்போன் லைட் பர்பிள் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 75 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 6,658 ஆகும். நோக்கியா சி20 மாடல் டார்க் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,900 ஆகும்.
ஒன்பிளஸ் 9 ப்ரோ வாடிக்கையாளர்கள், புதிய ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்படுவதாக தெரிவித்தது வருகின்றனர்.
ஒன்பிளஸ் 9 ப்ரோ பயன்படுத்தும் பெரும்பாலானோர் தங்களின் ஸ்மார்ட்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு சூடாவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். குற்றச்சாட்டுகள் அதிகரித்ததை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பதில் அளித்துள்ளது.

அதன்படி வரும் வாரங்களில் புது மென்பொருள் அப்டேட் மூலம் பிரச்சினை சரி செய்யப்பட்டு விடும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம், வீடியோ எடுக்கும் போது போன் அதிக சூடாகிறது என கூறும் எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.
ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ மாடல்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய ஆக்சிஜன் ஒஎஸ் 11.2.2.2 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் லெவல்களை வழங்குகிறது. இத்துடன் பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் செய்யப்பட்டது.
எல்ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் வழங்குவது குறித்த முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
எல்ஜி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை தொடர்ந்து வழங்குவதாக எல்ஜி தற்போது அறிவித்து இருக்கிறது. முந்தைய அறிவிப்பிலேயே எல்ஜி குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் எல்ஜி தென் கொரிய வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
எந்தெந்த மாடல்களுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படும் என எல்ஜி அறிவிக்கவில்லை. எனினும், அப்டேட் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப வேறுபடும். இதே தகவல் எல்ஜி அமெரிக்க வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் சி25, சி20 மற்றும் சி21 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி20, சி21 மற்றும் சி25 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் சி20 மற்றும் சி21 மாடல்கள் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி சி25 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி B&W லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஹெத் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி20 மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ரியல்மி சி21 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது.
ரியல்மி சி20 மாடல் கூல் புளு மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், முதல் பத்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி சி21 மாடல் கிராஸ் புளூ மற்றும் கிராஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி சி25 மாடல் வாட்டரி கிரே மற்றும் வாட்டரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 10,999 ஆகும்.
கூகுள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான டெவலப்பர் நிகழ்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது கூகுள் I/O வருடாந்திர டெவலப்பர் நிகழ்வு மே 18 துவங்கி மே 20 வரை நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
வழக்கமாக கூகுள் தனது டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை வெளியிடும். மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் கூகுள் வழங்கும் மென்பொருள் சேவைகள் பற்றி டெவலப்பர்களுடன் விவாதங்கள், உரையாடல்கள் நடைபெறும்.

இவற்றுடன் இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஹார்டுவேர் சாதனங்களான மேம்பட்ட பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் 5ஏ உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் I/O நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை.
கொரோனாவைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் கூகுள் 2021 I/O நிகழ்வினை விர்ச்சுவல் முறையில் நடத்துகிறது. இதற்கென பிரத்யேக வலைதளம் ஒன்றையும் கூகுள் திறந்துள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெறுகிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
இந்திய சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஐ 11 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், வளைந்த 120 ஹெர்ட்ஸ் QHD+ டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார், பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளது.

இந்தியாவில் புதிய எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 70 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், விலை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சீன சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பாவில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் எத்தனை வேரியண்ட் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் பேம்ன்ட் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது மொபைல் பேமண்ட் சேவையை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு 2019 வாக்கில் வெளியானது. தற்போது சீன சந்தையில் ஒன்பிளஸ் பே சேவை பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பே சேவை மற்ற பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது மொபைல் பேமண்ட் சேவைக்கான டிரேட்மார்க் பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் பே எப்போது அறிமுகமாகும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிரேட்மார்க் கிடைத்துவிட்டதால், விரைவில் ஒன்பிளஸ் பே சேவை ஒன்பிளஸ் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






