என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்தியாவில் நடைபெறும் 5ஜி சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மத்திய டெலிகாம் துறை இந்தியாவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள ஸ்பெக்ட்ரம் பேண்ட்களை பயன்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்களுக்கு 700 MHz, 3.5 GHz மற்றும் 26 GHz பேண்ட்களை ஒதுக்கியுள்ளது.

சோதனையில் பங்கேற்க மத்திய டெலிகாம் துறை சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க அனுமதி கிடையாது. 3.5 GHz, 26 GHz மற்றும் 700 MHz ஸ்பெக்ட்ரம்களில் முறையே 800, 100 மற்றும் 10 யூனிட்கள் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம்களை ஆறு மாத காலத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ரெடி நெட்வொர்க் வைத்திருப்பதால், இரு நிறுவனங்களுக்கும் இது மிகமுக்கியமான ஒன்றாக இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் சி25எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மே 31 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து ரியல்மியின் மற்றொரு ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் மலேசியாவில் அறிமுகமான ரியல்மி சி25எஸ் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இதில் பெரும்பாலும் சி25 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களே உள்ளன. எனினும், இதில் வேறு பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி25எஸ் மாடலில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி சி25எஸ் மாடலில் 6.5 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் பட்சத்தில் இதன் 64 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. மலேசியாவில் இதன் விலை 699 ரிங்கட் இந்திய மதிப்பில் ரூ. 12,300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தது. கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை புது தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற விர்ச்சுவல் நிகழ்வில் தெரிவித்து இருக்கிறார்.

புது விலை குறைந்த ஸ்மார்ட்போனினை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் இந்த திட்டத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என அவர் தெரிவித்தார்.
கூகுள் - ஜியோ கூட்டணியில் உருவாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் துவங்கும் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜியோ 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிஎஸ் 5 கன்சோலை வாங்கிய பல்வேறு வாடிக்கையாளர்கள், ப்ளிப்கார்ட் தளத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். கேமிங் கன்சோல்களை வாங்க ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை கேன்சல் செய்ய ப்ளிப்கார்ட் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ளிப்கார்ட் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு கன்சோல் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டது என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆர்டர்களை விரைவில் விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. மே 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பிஎஸ்5 விற்பனையில் இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது.
`ப்ளிப்கார்ட் சார்பில் அழைப்புகள் வந்தது. அழைப்பை மேற்கொண்டவர், பிஎஸ்5 கன்சோலுக்கான ஆர்டரை கேன்சல் செய்தால் ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக தெரிவித்தார்'. என பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் குற்றஞ்சாட்டினர்.
விநியோகம் செய்ய தாமதம் ஆகும், இதனால் ஆர்டரை கேன்சல் செய்யக் கோரி ப்ளிப்கார்ட் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி இருக்கின்றன.
போக்கோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் F3 GT இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலை சார்ந்து உருவாகி இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமராக்களை சுற்றி எல்இடி லைட்கள் உள்ளன.
"Locked & loaded, finger on the trigger" The next F is closer than you thought.
— POCO India - Register for Vaccine 💪🏿 (@IndiaPOCO) May 28, 2021
Good things come to those who wait, best things to those who never give up! pic.twitter.com/Pu7G6VZgFR
எல்இடி லைட்கள் மட்டுமின்றி போக்கோ F3 GT மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி X7 மேக்ஸ் ஆகும். இது மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மத்திய அரசு விதிமுறைகளை எதிர்த்து கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனத்திற்கு அரசு சார்பில் காட்டமான பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகள் விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் இந்த விதிமுறைகள் பற்றி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ட்விட்டர் மத்திய அரசை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறது.
அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. இதற்கு பதில் அளித்து இருக்கும் மத்திய அரசு, ட்விட்டர் தனது சொந்த விதிகளை இந்தியா பின்பற்றி, நாட்டின் சட்டத்திட்டங்களை மீற முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் பல்வேறு சமூக வலைதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. புது விதிமுறைகளில், `குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும்.'
`அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது விதிமுறைகள் இந்திய குடிமக்களின் பேச்சுரிமையை குறைப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.
கருத்து சுதந்திரம் ட்விட்டர் தளத்தில், ட்விட்டர் மூலமாகவே தடுக்கப்படுகிறது. ட்விட்டரின் வெளிப்படையற்ற விதிகள் மூலம் பயனர் அக்கவுண்ட் மற்றும் ட்வீட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் நிலை டிக் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும்.
இந்த நிலையில், வாட்ஸ்அப் டிக் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது.


இந்தியாவில் சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் தகவல்களில் அதிகாரிகள் சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டும் பதிவுகளை நீக்குவது, சர்ச்சைக்குள்ளாகும் தகவலை முதலில் பதிவிட்டது யார் என்ற விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலாகி இருக்கின்றன.
இதை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் மத்திய அரசு இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிப்பதாக கூறி, புது டிக் முறை அமலுக்கு வந்துள்ளது என வைரல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை. ஏற்கனவே பலமுறை இதேபோன்ற தகவல் வைரலாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் டிவி US1 ஸ்மார்ட் டிவி மாடலை ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதே நாளில் புது ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் நார்டு N200 5ஜி வேரியண்ட் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்வதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் வலைதளத்தில் சிறப்பு குலுக்கல் நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட்போன் வெளியாகும் நாள் வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. குலுக்கலில் அதிகபட்சம் 8500-க்கும் அதிக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

வரும் நாட்களில் புது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி விவரங்களை ஒன்பிளஸ் வெளியிடும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் அமேசான் தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சிப் உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால், ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வெளியீடு சில மாதங்கள் தாமதமாகின. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகாது என தற்போது வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதே சிப்செட் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. பிராசஸர் உற்பத்தி துவங்கிவிட்ட நிலையில், ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்குவது உள்பட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு அமலாக்கி இருக்கிறது. இதற்கு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது..,
கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறை நடைமுறைகளை அமலாக்குகின்றன, என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

"எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம். அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
"நிறுவனம் என்ற முறையில், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இணைய சேவை மற்றும் அது வழங்கும் பலன்களுக்கு மதிப்பளிக்கிறோம். உலகம் முழுக்க ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இதற்கான டீசர்களை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு புது மாடல் வெளியிடப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஒன்பிளஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை.

முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சம்மர் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய நார்டு ஸ்மார்ட்போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி நிறுவனத்தின் பிஎஸ் 5 கேமிங் கன்சோல் ரி-ஸ்டாக் இன்று மதியம் விற்பனைக்கு வந்தது.
இந்தியாவில் சோனி நிறுவனத்தின் புதிய பிஎஸ் 5 கேமிங் கன்சோலுக்கான விற்பனை நடைபெற்றது. 12 மணிக்கு துவங்கிய விற்பனை நொடிகளில் நிறைவுற்றது. அமேசான் தளத்தில் மட்டும் பிஎஸ் 5 யூனிட்கள் சில நிமிடங்கள் விற்பனைக்கு இருந்தது. ப்ளிப்கார்ட் தளத்தில் 12 மணிக்கே விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதேபோன்று கேமிங் சார்ந்த பல்வேறு வலைதளங்களில் பிஎஸ் 5 விற்பனை நடைபெற்றது. எனினும், சில தளங்கள் விற்பனை துவங்கியதும் முடங்கி போயின. இந்த முறையும் முன்பு போலவே சோனி நிறுவனம் மிக குறைந்த யூனிட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் என தெரிகிறது.
இதுதவிர புது கேமிங் கன்சோலை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். முன்னதாக பிஎஸ் 5 விற்பனை இந்தியா அல்லாத நாடுகளில் நடைபெற்றது. அங்கும் பிஎஸ் 5 வாங்க பலத்த வரவேற்பு இருந்ததால், விற்பனை நிமிடங்களில் நிறைவுற்று போனது.






