என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஹானர் நிறுவனத்தின் புதிய பிட்னஸ் டிராக்கர் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் பேண்ட் 6 பிட்னஸ் டிராக்கரை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் பேண்ட் 6 அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த பிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஹானர் பேண்ட் 6 மாடலில் 1.47 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான பிட்னஸ் டிராக்கர்களில் இருப்பதை விட 148 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே ஆகும். இதன் வலதுபுறத்தில் சிவப்பு நிற பட்டன் உள்ளது. இடதுபுறத்தில் ஹானர் பிராண்டிங் கொண்டிருக்கிறது.

வாட்ச் பேஸ் ஸ்டோரில் கிடைக்கும் வாட்ச் பேஸ்களில் பயனர் விரும்புவதை தேர்வு செய்து வைத்துக் கொள்ளும் வசதி ஹானர் பேண்ட் 6 மாடலில் உள்ளது. இத்துடன் ஆல்பம் போட்டோவையும் வாட்ச் பேஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். சராசரி பயன்பாடுகளின் போது இந்த பிட்னஸ் டிராக்கர் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
இந்த பிட்னஸ் டிராக்கரில் SpO2 ஆக்சிஜன் டிராக்கர், 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் மாணிட்டர், பத்துவித உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் சில உடல் நடவடிக்கைகளை தானாக கண்டறியும் வசதி இதில் உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபேட் மாடல்கள் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 2022 ஐபேட் மாடல்கள் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக OLED டிஸ்ப்ளேக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதன்பின் மைக்ரோ LED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் சில ஐபேட் மாடல்களுக்கு OLED ஸ்கிரீன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், எந்த மாடலில் OLED வழங்கப்படும் என இதுவரை எந்த தகவலும் இல்லை. மிட்-ரேன்ஜ் ஐபேட் ஏர் மாடலில் OLED வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் OLED ஸ்கிரீன்களை ஆப்பிள் தனது ஐபோன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழங்கி வருகிறது. இதே முறை தொடரும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால ஐபேட் மாடல்களிலும் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ இசட்3 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசட்3 மாடலுக்கென மைக்ரோசைட் அமேசான் உருவாக்கப்பட்டு உள்ளது.
புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வது மட்டுமின்றி சிறப்பு போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அமேசான் தளத்தில் ஐகூ இசட்3 மைக்ரோசைட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிடப்படுகிறது. புதிய ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஐகூ இசட்3 மாடலில் 6.58 இன்ச் FHD+ 1080x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
சியோமி நிறுவனம் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
Charge up to 100% in just 8 minutes using wired charging and 15 minutes wirelessly! #XiaomiHyperCharge
— Xiaomi (@Xiaomi) May 31, 2021
Too good to be true? Check out the timer yourself! #InnovationForEveryonepic.twitter.com/muBTPkRchl
இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது.
200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கும் வகையில் இந்தியாவுக்கான அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. விதிகளை ஏற்கும் விவகாரம் குறித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

மனுதாரின் மனுவில், `ட்விட்டரில் நான் எதிர்கொண்ட பதிவு குறித்து குறைதீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரின் தொடர்பு விவரங்களை கண்டறிய இயலவில்லை. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்கரை அதிகாரியாக நியமித்து இருக்கிறது. ஆனால் இது சமீபத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை முறையாக ஏற்கும் வகையில் இல்லை,' என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளித்த ட்விட்டர், அரசு விதித்த புது கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை ஏற்கும் வகையில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது.
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் அம்சங்கள்
- 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.3
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.5
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 50 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மாடல் ஆஸ்டிராய்டு பிளாக், மெர்குரி சில்வர் மற்றும் மில்கி வே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூன் 4 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்குகிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்தது.
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனுடன் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களின் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 10.7 கோடி நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி விஷன், ரியல்மியின் பிரத்யேக குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மாட் டிவி 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஹேன்ட்ஸ் - பிரீ வாய்ஸ் கண்ட்ரோல், பில்ட்-இன் மைக்ரோபோன்கள் உள்ளன. இதனால் கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் எளிதில் பேச முடியும்.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அம்சங்கள்
- 43 / 50 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, HDR 10, குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், டால்பி விஷன்
- 1.5GHz குவாட்-கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
- மாலி-G52MC1 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 10.0
- பில்ட் இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
- பில்ட் இன் மைக்ரோபோன்கள்
- வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட்
- 24 வாட் (12W x 2 ஸ்பீக்கர் + ட்வீட்டர்), டால்பி அட்மோஸ்
ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 என்றும் 50 இன்ச் மாடல் ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டிவி ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் ஜூன் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு சீனாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி மாடல் போக்கோ எக்ஸ்3 ஜிடி பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வெர்ஷன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது என்பதால், இதன் 5ஜி வேரியண்ட் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படலாம். அம்சங்களை பொருத்தவரை இதன் 4ஜி வேரியண்டில் 120Hz AMOLED ஸ்கிரீன் வழங்ககப்பட்டு உள்ளது.
போக்கோ நிறுவனம் போக்கோ எப்3 ஜிடி மாடலை 2021 மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இது ரெட்மி கே40 கேமிங் எடிஷன் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 ஜிடி மாடலின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சோனி நிறுவனம் பிஎஸ் சாதனங்களில் பிரபலமாக இருந்த கேம்களை மொபைலுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் பிஎஸ் பிராண்டுகள் மற்றும் ஐபிக்களை மூன்றாம் தரப்பு மொபைல் சாதனங்களுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனை சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவு தலைமை செயல் அதிகாரி ஜிம் ரியான் உறுதிப்படுத்தி இருக்கிறார். சோனியின் ஐகானிக்ஐபி மார்ச் 2022 வாக்கில் மொபைல் தளங்களில் வெளியாக இருக்கிறது.

கன்சோல் அல்லாத மொபைல் மற்றும் இதர சாதனங்களுக்கு முன்னணி கேம் பிரான்சைஸ்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என ரியான் தெரிவித்தார். 2020 ஆண்டு உலகம் முழுக்க மொபைல் கேமிங்கில் 121 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியதை ரியான் சுட்டிக்காட்டினார்.
பிளேஸ்டேஷன் சார்பில் முன்னணி கேம்களை மொபைல் சாதனங்களில் இயங்க வைக்க தனி வியாபார பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பணியாற்ற டெவலப்பர்களை பணியமர்த்தி மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எனும் காலக்கட்டத்தில் மொபைல் கேம்களை வெளியிட சோனி திட்டமிட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி விற்பனை ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் டிவி U1S மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ட்விட்டர் தளத்தில் பேஸ்புக்கில் உள்ளது போன்ற எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் தளத்தில் எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ளது போன்று விரைவில் ட்வீட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்கலாம். தற்போது ட்வீட்களுக்கு லைக் மூலமாகவே விருப்பம் தெரிவிக்கும் முறை அமலில் உள்ளது.
விரைவில் லைக்ஸ், சீர்ஸ், ஹூம், சேட் மற்றும் ஹாஹாஹா போன்ற ரியாக்ஷன்களை வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஐகான்கள் எமோஜிக்கள் போன்றே காட்சியளிக்கிறது. சில ரியாக்ஷன்களுக்கு ஐகான்களை உறுதிப்படுத்தும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Twitter is working on Tweet Reactions view:
— Jane Manchun Wong (@wongmjane) May 28, 2021
“Likes”, “Cheer”, “Hmm”, “Sad”, “Haha”
The icons for the Cheer and Sad reactions are WIP and shown as the generic heart one at the moment https://t.co/ZCBhH8z7JRpic.twitter.com/dGqq1CzIis
புது ரியாக்ஷன்கள் பேஸ்புக்கில் எமோஜிக்கள் உள்ளது போன்றே காட்சியளிக்கிறது. யார் யார் எந்த எமோஜி மூலம் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர் என்ற விவரங்களை ட்விட்டர் வழங்கும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2nd Gen ஏர்பாட்ஸ் ப்ரோ ஹெட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி லெவல் ஏர்பாட்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ 2nd Gen மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏர்பாட்ஸ் மாடல் முதல் முறையாக அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் புது டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முற்றிலும் புது கேஸ், சிறிய ஸ்டெம் கொண்டிருக்கும் ன கூறப்படுகிறது.

2022 ஆண்டு வெளியாக இருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் மேம்பட்ட மோஷன் சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேம்பட்ட ஏர்பாட்ஸ் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவு விற்பனையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை அப்டேட் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.






