என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
இந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் போக்கோ போன் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சீன சந்தையில் ரெட்மி கே40 சீரிஸ் நேற்று (பிப்ரவரி 25) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. ரெட்மி கே40 சீரிஸ்- ரெட்மி கே40, கே40 ப்ரோ மற்றும் கே40 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களை கொண்டது.
தற்சமயம் ரெட்மி கே40 மாடல் நம்பரை தழுவிய மற்றொரு ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங்குடன் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ மாடலாக வெளியிடப்படலாம். முன்னதாக பல மாடல்கள் இவ்வாறு ரி-பிராண்டு செய்யப்பட்டு அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய தகவல்களில் M2012K11 AG எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கிறது. இது ரெட்மி கே40 மாடல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 சர்வதேச வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புதிய ஸ்மார்ட்போன் பற்றி போக்கோ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அப்டேட் மூலம் புது வசதியை வழங்க இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக டார்க் மோட் ஆப்ஷனை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு
வழங்க இருக்கிறது. கடந்த சில மாதங்கள் டார்க் மோட் ஆப்ஷனை பரிசோதனை செய்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து உள்ளது.
டார்க் மோட் ஆப்ஷனை ஆண்ட்ராய்டு பயனாளிகள் எனேபில் செய்வதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் சேமிக்கப்படும். மேலும் இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும். கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் தவிர மேலும் சில புது அம்சங்களை இணைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டில் உள்ள பாஸ்வேர்டு செக்கப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் புதிய மாற்றங்களை செய்து உள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் டார்க் மோட் ஆப்ஷன் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளது.
இந்தியா முழுக்க அதிவேக 5ஜி சேவை வழங்க ஏர்டெல் மற்றும் குவால்காம் கூட்டணி அமைத்து இருக்கின்றன.
இந்தியாவின் ஐதராபாத் நகரில் பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை வர்த்தக நெட்வொர்க்கில் வெற்றிகரமாக சோதனை செய்து அசத்தியது. தற்சமயம் இந்தியாவில் 5ஜி சேவையை முழுவீச்சில் வழங்க குவால்காம் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது.
ஏல்டெல் நெட்வொர்க் விற்பனையாளர் மற்றும் சாதனங்களை வழங்கும் ஒப்பந்ததாரர்களை கொண்டு குவால்காம் 5ஜி RAN பிளாட்பார்ம் மூலம் RAN சார்ந்த 5ஜி சேவையை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் O RAN (ரேடியோ அக்சஸ் நெட்வொர்க்) அலையன்ஸ் குழுவின் உறுப்பினர் ஆகும்.

இந்தியாவில் RAN சார்ந்த திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் O RAN வழிமுறையை அமல்படுத்த ஏர்டெல் திட்டமிடுகிறது. O RAN போன்ற தளம் கொண்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களும் 5ஜி நெட்வொர்க்குகளை செயல்படுத்த வழி செய்ய முடியும்.
இதுதவிர ஏர்டெல் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி தொழில்நுட்பத்தை பல்விதங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளில் செயல்பட இருக்கின்றன. இத்துடன் அதிவேகமாக பிராட்பேண்ட் சேவைகளை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க இரு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் Fab Phones Fest எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை வசதி, எக்சேன்ஜ் சலுகை, உடனடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சிறப்பு விற்பனையில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், விவோ, ரியல்மி மற்றும் பல்வேறு இதர நிறுவன மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. புதிய மாடல்கள் மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி மாடல் ரூ. 47,999 விலையில் கிடைக்கிறது. இதில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி கூப்பன், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி 9 பவர் சீரிஸ் ரூ. 10,499 துவக்க விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ரூ. 21,749 துவக்க விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி மாடல் ரூ. 36,999 விலையிலும், ஐபோன் 12 மினி ரூ. 64,990 துவக்க விலையில் கிடைக்கின்றன. இந்த மாடல்களுக்கு தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் ரூ. 11,990 விலையிலும், ஹானர் 9ஏ மாடல் ரூ. 7,999 விலையிலும் கிடைக்கின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி கூப்பன், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ. 7 ஆயிரம் உடனடி தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐபோன் 11 பரோ ரூ. 82,900 முதல் துவங்குகிறது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ மாடல் ரூ. 35,990 துவக்க விலையில் கிடைக்கிறது. இதேபோன்று எம்ஐ 10டி ப்ரோ 5ஜி, சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, எல்ஜி விங் போன்ற மாடல்களும் சிறப்பு விலையில் கிடைக்கின்றன.
போக்கோ பிராண்டின் சமீபத்திய எம்3 ஸ்மார்ட்போன் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
போக்கோ நிறுவனம் சமீபத்தில் எம்3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. விற்பனை துவங்கியது முதல் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நடைபெற்ற விற்பனையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 2,50,000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ப்ளிப்கார்ட் தளத்தில் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று நடைபெற்றது. தற்போதைய 2.5 லட்சம் யூனிட்கள் இன்றைய ( பிப்ரவரி 23) விற்பனையை சேர்க்காமல் எடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ நிறுவனத்தின் புதிய எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
விவோ நிறுவனம் தனது எஸ்9 ஸ்மார்ட்போன் மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் மாடலாக இருக்கும்.
புதிய விவோ எஸ்9 அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் விவோ எஸ்9 அதன்பின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எஸ்9 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இத்துடன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், டூயல் செல்பி கேமராக்கள் வழங்கப்படலாம். மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்படும் பட்சத்தில், இது 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும். இவைதவிர 6.4 இன்ச் டிஸ்ப்ளே, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 6 ஆம் தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி அதாவது 6ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆப்பிள் தனது வலைதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் வெளியிட்டு இருக்கிறது.
வயர்லெஸ் சிஸ்டம் ஆய்வு பொறியாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிலிகான் வேலி மற்றும் சான் டெய்கோ அலுவலகங்களில் பணியாற்றுவர். எதிர்கால ஆப்பிள் சாதனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு எனும் தலைப்பில் ஆப்பிள் புதிய பணி பற்றி விவரிக்கிறது.

இந்த பிரிவில் பணியாற்றுவோர் 6ஜி வயர்லெஸ் தகவல் பரிமாற்ற முறைகளுக்கான ரேடியோ நெட்வொர்க்குகளை வடிவமைப்பார்கள் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. 6ஜி தொழில்நுட்பம் இன்றைய தேதியில் தொலைதூர கனவு ஆகும். தற்சமயம் 5ஜி தொழில்நுட்பம் மெல்ல பயன்பாட்டுக்கு வரத் துவங்கி இருக்கிறது.
எனினும், 4ஜி எல்டிஇ உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் ஆக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் 6ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோரில் முன்னணியில் இருக்க திட்டமிட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அனைத்து ஐபோன் 12 சீரிஸ் மாடல்களும் 5ஜி வசதி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் நிறுவனம் மேம்பட்ட பிரைவசி பாலிசிக்கான அப்டேட்டை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் வரும் வாரங்களில் மேம்படுத்தப்பட்ட பிரைவசி பாலிசியை மீண்டும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்அப் வெளியிட்ட புது அப்டேட்டிற்கு உலகளாவிய பயனர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிதித்தனர்.
பின் புது அப்டேட் பற்றி வாட்ஸ்அப் நீண்ட விளக்கம் அளித்தது. மேலும் புதிய மாற்றங்களுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மே 15, 2021 எனும் புதிய காலக்கெடுவை பிறப்பித்தது. இத்துடன் வாட்ஸ்அப் தனது பயனரின் தனிப்பட்ட குறுந்தகவல், குழுக்களில் பகிரப்படும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை பார்க்க முடியாது என தெரிவித்தது.

மேலும் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சத்தை கையாண்டு, வியாபாரங்கள் புது சேவைகள் மற்றும் அம்சங்களை இயக்க வழி செய்வதாக வாட்ஸ்அப் தெரிவித்தது. முன்னதாக ஜனவரி மாதத்தில் பயனர்கள் மேம்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்து டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கினர். பின் வாட்ஸ்அப் சர்ச்சைக்குள்ளான பிரைவசி பாலிசி பற்றிய விளக்கத்தை உலகம் முழுக்க விளம்பரங்கள் வாயிலாக பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.
போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்டு லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மஸ்கோட் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.
லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்கோட் பற்றியும் போக்கோ விளக்கம் அளித்து இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு போக்கோ சியோமியின் துணை பிராண்டாக அறிமுகமானது. பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் போக்கோ தனி பிராண்டாக மாறியது.

சியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிளாக்ஷிப் மாடல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. போக்கோ நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யதது.
இதுதவிர போக்கோ பாப் பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் போக்கோ எப்2 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி நிறுவனம் டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனிற்கு எல்ஜி டிஸ்ப்ளேவை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ப்ளிப் டிசைன் கொண்ட ஐபோன் மாடலுக்கான டிஸ்ப்ளேவை எல்ஜி வினியோகம் செய்யலாம் என தெரிகிறது.

எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனலை உருவாக்க தேவையான உதவிகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை எல்ஜி டிஸ்ப்ளே வினியோகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எல்ஜி தவிர சாம்சங் டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே பேனல்களை வினியோகம் செய்து வருகிறது. முந்தைய தகவல்களில் சாம்சங் நிறுவனம் அதிகப்படியான மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு சோதனை பணிகளுக்காக வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா கட்டணத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஜீ5 பிரீமியம் சேவைக்கான வருடாந்திர சந்தா 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. ஜீ5 ஒடிடி தளம் துவங்கி மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சலுகை தற்காலிகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜீ5 வருடாந்திர சந்தா ரூ. 499 மட்டும் தான்.
இந்த சலுகை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. அதன் பின் ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தாவின் விலை ரூ. 999 என முந்தைய விலைக்கே மாறிவிடும். ஜீ5 பிரீமியம் மாதாந்திர, மூன்று மாத சலுகை கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஜீ5 மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் பிரீமியம் வருடாந்திர சந்தா 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகை பிப்வரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஜீ5 பிரீமியம் ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான சந்தா விலை முறையே ரூ. 99 மற்றும் ரூ. 299 ஆகும்.
ஜீ5 பிரீமியம் சந்தா ஜீ5 ஒரிஜினல்ஸ், பிரத்யேக தொடர்கள், திரைப்படங்கள், அனைத்து ஆல்ட் பாலாஜி, ஜிந்தகி நிகழ்ச்சிகள், நேரலை டிவி மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் முன் டிவி தொடர்களை பார்க்கும் வசதியை வழங்குகிறது. பிரீமியம் சந்தாவில் ஒரே சமயத்தில் ஐந்து வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வாய்ஸ் மெசேஜிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. வாய்ஸ் டிஎம் (Voice DM) என அழைக்கப்படும் புது அம்சம் கொண்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவலை குரல்வழி பதிவாக அனுப்ப முடியும்.
முன்னதாக வாய்ஸ் ட்விட் எனும் அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முந்தைய வாய்ஸ் ட்விட் போன்றே வாய்ஸ் டிஎம் அனுப்புவதற்கான கால அளவு 140 நொடிகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் அதிகபட்சம் 140 நொடிகளுக்குள் தங்களின் தகவலை பதிவு செய்து அனுப்ப முடியும்.

புதிய வாய்ஸ் டிஎம் அம்சம் ட்விட்டர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் வழக்கமான டிஎம் செய்வதை போன்றே புதிய அம்சத்தையும் இயக்க முடியும். இதற்கு டிஎம் ஆப்ஷனில் Voice Recording எனும் ஐகானை க்ளிக் செய்து குரலை பதிவு செய்ய வேண்டும். குரல் பதிவு முடிந்ததும், மற்றொரு முறை க்ளிக் செய்ய வேண்டும்.
பின் பயனர் பதிவு செய்த குரலை மீண்டும் கேட்பதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதனால் குரல் பதிவை அனுப்பும் முன், அதனை சரிபார்க்க மீண்டும் அதனை கேட்கலாம். ஐஒஎஸ் பயனர்கள் வாய்ஸ் ரெக்கார்டு செய்யும் ஐகானை அழுத்தி பிடித்து குரலை பதிவு செய்ய துவங்க வேண்டும், பின் மேல்புறமாக ஸ்வைப் செய்து ஐகானில் இருந்து விரலை விடுவிக்க வேண்டும்.
முதற்கட்டமாக வாய்ஸ் டிஎம் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வெப் பிரவுசரில் வாய்ஸ் டிஎம்-களை கேட்க முடியும். புதிய அம்சம் வலைதள உரையாடல்களை மேலும் உயிரூட்டும் என ட்விட்டர் தெரிவித்து உள்ளது.






