என் மலர்tooltip icon

    கணினி

    ஸ்டப்கூல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஸ்டப்கூல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வயர்லெஸ் சார்ஜர் WC310 என அழைக்கப்படுகிறது. 

    அளவில் மிக மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய வயர்லெஸ் சார்ஜர் அனைத்து வித Qi வசதி கொண்ட சாதனங்களை அதிகபட்சம் 10வாட் திறனில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர இந்த வயர்லெஸ் சார்ஜரில் டெம்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியூட் ப்ரோடெக்ஷன் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. 6.4எம்எம் அளவு கொண்டுள்ள வயர்லெஸ் சார்ஜர் ஸ்மார்ட்போன்களை எந்த கோணத்தில் இருந்தாலும் சார்ஜ் செய்யும்.

     ஸ்டப்கூல் வயர்லெஸ் சார்ஜர்

    ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 6 எம்எம் தடிமனாக இருக்கும் கேஸ் கொண்டிருந்தாலும், இந்த சார்ஜர் ஸ்மார்ட்போன்களை எளிதில் சார்ஜ் செய்யும். ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஆகும் விவரம் சார்ஜிங் பேடில் இருக்கும் ரிங் எல்இடி-யில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த சார்ஜரில் மொத்தம் 5 வாட், 7.5 வாட் மற்றும் 10 வாட் என மூன்றுவித அவுட்புட்கள் உள்ளன. ஐபோன் 8 துவங்கி ஐபோன் 12 வரையிலான மாடல்களை 7.5 வாட் திறன் கொண்டு சார்ஜ் செய்யும். இதுதவிர Qi வசதி கொண்ட பெரும்பான்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை 10 வாட் திறனில் சார்ஜ் செய்கிறது.

    இந்தியாவில் புதிய ஸ்டப்கூல் WC310 விலை ரூ. 1999 ஆகும். எனினும், அமேசான் தளத்தில் அறிமுக சலுகையாக இது ரூ. 849 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ஜாப்ரா நிறுவனம் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜாப்ரா பிராண்டின் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த இயர்பட்ஸ் கியூஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. புதிய இயர்பட் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5.5 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 25 மணி நேர பேக்கப் கிடைக்கும். 

     ஜாப்ரா எலைட் 85டி

    செமி ஓபன் டிசைன் கொண்டிருக்கும் இந்த இயர்போன்களில் 12 எம்எம் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இரு்கின்றன. இதன் வடிவமைப்பு காதுகளில் சவுகரிய அனுபவத்தை வழங்குகின்றன. இதன் வடிவம் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இதில் உள்ள பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் சிறப்பான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினை வழங்குகிறது. இதில் உள்ள HearThrough Mode கொண்டு வெளிப்புற சத்தத்தை இயர்பட்கள் வழியே கேட்க முடியும். 

    இந்திய சந்தையில் ஜாப்ரா எல்டை 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டைட்டானியம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை இன்று (டிசம்பர் 1) அமேசான் தளத்தில் துவங்குகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது 2021 ஐபேட் ப்ரோ உயர் ரக மாடல்களில் அதிவேக 5ஜி வசதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.

    இதற்கென ஆப்பிள் சொந்தமாக எம்எம்வேவ் AiP (Antenna in Package) உருவாக்கி வருவதாகவும், இதனை ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 12 யூனிட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     5ஜி

    எனினும், அடுத்த ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பெருமளவு சாதனங்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெட்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ரெட்மி வாட்ச் மாடல் சதுரங்க வடிவம் கொண்ட டயல், வலது புறத்தில் பட்டன், 5 ஏடிஎம் சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், 120 வாட்ச் பேஸ்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

     ரெட்மி வாட்ச்

    மேலும் 7 ஸ்போர்ட் மோட்கள், என்எப்சி வசதி, அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி வாட்ச் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    சீன சந்தையில் ரெட்மி வாட்ச் மாடல் விலை RMB 269 இந்திய மதிப்பில் ரூ. 3,018 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி வாட்ச் எலிகண்ட் பிளாக், இன்க் புளூ மற்றும் ஐவரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் ரெட்மி வாட்ச் மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் தளத்தில் பயனாளர்களிடையே வெரிபிகேஷன் டிக் பெறுவதற்கு அதிக போட்டி இருந்து வந்தது. எனினும், புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2017 ஆம் ஆண்டு வாக்கில் நிறுத்தப்பட்டது. புளூ டிக் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்றே. பிரபலங்களுக்கு புளூ டிக் வெரிபிகேஷன் கொண்டு நலம் விரும்பிகளை அதிகரித்து கொள்ள முடியும். 

    இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை 2021 ஆண்டு துவக்கத்தில் மீண்டும் துவங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளது. இம்முறை வெரிபிகேஷன் சேவையில் அதிக மாற்றங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     கோப்புப்படம்

    புளூ டிக் வெரிபிகேஷன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிடைக்கும். புளூ டிக் பெறுவதற்கான விதிமுறைகளில் ட்விட்டர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதிய விதிமுறைகளின் படி ஏற்கனவே புளூ டிக் வைத்திருப்பவர்களிடம் இருந்தும் புளூ டிக் பறிக்கப்பட இருக்கிறது.

    புதிய வெரிபிகேஷன் வழிமுறைகள் பற்றி பயனர்கள் கருத்து தெரிவிக்கலாம் என ட்விட்டர் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான கருத்துக்களை பயனர்கள் டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.   
    சாம்சங் நிறுவனத்தின் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒடிசி ஜி9 49 இன்ச் மற்றும் ஜி7 32 இன்ச், 27 இன்ச் உலகின் முதல் 1000ஆர் கேமிங் மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாணிட்டர்கள் டியுவி ரெயின்லாந்து ஐ கம்பர்ட் சான்று பெற்று இருக்கிறது. 

    49 இன்ச் ஒடிசி மாணிட்டர் உலகின் முதல் டூயல் குவாட் ஹை டெபனிஷன் மாணிட்டர் ஆகும். இதில் க்ரிஸ்டல் க்ளியர் QLED பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. ஜி9 டிவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் கிளாஸி வைட் வெளிப்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேமிங் மாணிட்டர்

    சாம்சங் ஒடிசி ஜி7 மாடல் மெல்லிய வடிவமைப்பு, மேட் பிளாக் வெளிப்புறம் கொண்டிருக்கிறது. இதன் முன்புற பெசலில் டைனமிக் ஷேப் மற்றும் லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்தியாவில் சாம்சங் ஒடிசி ஜி7 32 இன்ச் மற்றும் 27 இன்ச் மாடல்கள் விலை ரூ.49 ஆயிரம் என்றும் ஜி9 49 இன்ச் மாடல் விலை ரூ. 1,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    இந்தியர்களுக்கான பிரத்யேக மொபைல் கேமாக பப்ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.


    பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் மீண்டும் இந்த கேம் வெளியாகாதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. பலரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது.

    பப்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பப்ஜி மொபைல் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம். பப்ஜி இந்தியா நிறுவனம் நவம்பர் 21 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறும் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     பப்ஜி

    முன்னதாக பப்ஜி இந்தியா வலைதளத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கான ஏபிகே பைல் காணப்படுவதாக பலர் இணையத்தில் தெரிவித்து வந்தனர். எனினும், இந்த கேமிற்கான சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் மீண்டும் வெளியாக பப்ஜி மொபைல் கேமில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ள பயனர்கள் தயாராக இருக்க வேண்டும் என பப்ஜி மொபைல் இந்தியா குழு தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய வெர்ஷனில் பெருமளவு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் புதிய டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேனல்களை சாம்சங் உற்பத்தி செய்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் உற்பத்தி ஆலைகளில் ஒன்றை 2021 ஐபேட் ப்ரோ மாடலுக்கான டிஸ்ப்ளே பேனல்களை உற்பத்தி செய்ய வசதியாக மாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு  OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கலாம் என தெரிகிறது.

     ஐபேட் ப்ரோ

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த டிஸ்ப்ளே பேனல்கள் அதிக காண்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.

    மேலும் இவை அதிகளவு பேட்டரியை சேமிக்கும் திறன் கொண்டவை ஆகும். தற்சமயம் ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளே பேனல்களை வழங்கி வருகிறது. இதே தொழில்நுட்பம் ஐபேட் மற்றும் மேக் மாடல்களில் பயன்படுத்த அதிக செலவாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் ஆப்பிள் தனது ஐபேட் மாடல்களில் OLED பேனல்களை கட்டாயம் வழங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
    எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    எல்ஜி நிறுவனம் நிறுவனம் 17 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த லேப்டாப் மடிக்கக்கூடிய கீபோர்டு மற்றும் டச்பேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், ரோபலிள் லேப்டாப் விவரங்கள் காப்புரிமை விண்ணப்பத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய ரோலபிள் லேப்டாப் 13.3 இன்ச் முதல் 17 இன்ச் வரையிலான அளவுகளில் அன்ரோல் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

     எல்ஜி ரோலபிள் லேப்டாப்

    இந்த லேப்டாப்களின் பக்கவாட்டில் பவர் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரோல் செய்யப்பட்ட நிலையில், லேப்டாப்பில் இருக்கும் வெப்கேமரா மறைந்து கொள்கிறது. மேலும் இந்த லேப்டாப்புடன் வழங்கப்படும் கீபோர்டு மற்றும் டச்பேட் பாதியாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    ரோலபிள் லேப்டாப் பற்றி எல்ஜி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இது வெறும் கான்செப்ட் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    இந்தியாவில் தனது ஸ்டிரீமிங் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில்  நெட்ப்ளிக்ஸ் சேவை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இலவச சலுகை ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த சலுகை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அமலாக இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்கு பின் எப்போது வேண்டுமானாலும் 48 மணி நேரத்திற்கு நெட்ப்ளிக்ஸ் சேவையை இலவசமாக ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும்.

    இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ அவசியம் இல்லை. இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட் சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

    ஐகியர் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    இந்தியாவை சேர்ந்த அக்சஸரீ பிராண்டு ஐகியர் புதிதாக ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய சவுண்ட்பார் என்செம்பிள் என அழைக்கப்படுகிறது.

    இந்த சவுண்ட்பார் பில்ட்-இன் சப் வூபர், 20 வாட் பவர் வழங்குகிறது. இது பேட்டரியால் இயங்குகிறது. மேலும் இது மறு சுழற்சி செய்யப்பட்ட மரத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான ஏபிஎஸ் பிளாஸ்டிக் ஸ்பீக்கர்களை விட சிறப்பான ஆடியோ தரம் வழங்குகிறது.

     ஐகியர் என்செம்பிள்

    அதிகபட்சம் 20 வாட் பவர் அவுட்புட் வழங்கும் ஐகியர் என்செம்பிள் முன்புறத்தில் நான்கு 5 வாட் ஸ்ப்லிட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதில் உள்ள பில்ட்-இன் சப் வூபர் அதிக பேஸ் வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இவற்றுடன் பில்ட் இன் எப்எம் ரேடியோ, யுஎஸ்பி போர்ட், 2400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்பீக்கர் 3 முதல் 5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஐகியர் என்செம்பிள் போர்டபிள் ஸ்பீக்கர் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஹூவாமி நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹூவாமி நிறுவனம் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாட்ச் டைட்டானியம் கொண்டு உருவான வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கிறது. 

    இதுதவிர எஸ்பிஒ2 இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. வாட்ச் அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. 

     செப் இசட் ஸ்மார்ட்வாட்ச்

    ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்

    - 1.39 இன்ச் 454x454 AMOLED டிஸ்ப்ளே
    - 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதி 
    - எஸ்பிஒ2 
    - இதய துடிப்பு சென்சார்
    - டைட்டானியம் அலாய் பாடி
    - 40 கிராம் எடை 
    - 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
    - வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர் 

    ஹூவாமியின் புதிய செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாட்ச் லெதர் பிரவுன் ஸ்டிராப் என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

    ×