என் மலர்
கணினி
ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏஆர் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ரோலபிள் OLED ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் ஏஆர் கிளாஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சாதனங்களும் ஒப்போ இன்னோ தினத்தில் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ரோலபிள் ஸ்மார்ட்போனில் ஒப்போ நிறுவனத்தின் சொந்த ரோல் மோட்டார் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது. இது டிஸ்ப்ளேவினை இருவித அளவுகளில் மிக மென்மையாக மாற்றும் பணியை மேற்கொள்கிறது.

ஒப்போ எக்ஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எனினும், நீட்டிக்கப்பட்ட நிலையில், இது 7.4 இன்ச் அளவுக்கு நீள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வளைந்த எட்ஜ் மற்றும் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் கீழ்புறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ ரோலபிள் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. ஒப்போ ஏஆர் கிளாஸ் 2021 பற்றிய விவரங்களை ஒப்போ வெளியிடவில்லை. எனினும், இது மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ToF சென்சார், SLAM அல்காரிதம், டிப்ராக்டிவ் ஆப்டிக்கல் வேவ் கைடு தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் நேவிகேஷன் வசதி வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 சாதனங்களின் இந்திய விற்பனை துவங்கி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் கோ 2 மற்றும் சர்பேஸ் புக் 3 மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. சர்பேஸ் கோ 2 மாடலில் பெரிய 10.5 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 10 பாயிண்ட் மல்டி-டச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது.
இத்துடன் 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் மாடலில் இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425வை வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்பேஸ் கோ 2 சிறப்பம்சங்கள்
- 10.5 இன்ச் 1920x1280 பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4425Y / 8th Gen இன்டெல் கோர் எம்3 பிராசஸர்
- இன்டெல் UHD கிராபிக்ஸ் 615
- 4 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி eMMC / 128 ஜிபி எஸ்எஸ்டி
- 8 எம்பி ஆட்டோபோகஸ் கேமரா
- 5 எம்பி முன்புற கேமரா
- 1 x USB Type-C, 1 x சர்பேஸ் கனெக்ட், சர்பேஸ் டைப் கவர் போர்ட்
- மைக்ரோSDXC கார்டு ரீடர்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்
- வைபை 6, ப்ளூடூத் 5.0, குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடெம்
- 2வாட் ஸ்டீரியோ மற்றும் டால்பி ஆடியோ பிரமீயம் ஸ்பீக்கர்
- டூயல் மைக்ரோபோன்
- விண்டோஸ் 10 ஹோம் எஸ் மோட் / விண்டோஸ் 10 ப்ரோ
சர்பேஸ் புக் 3 சிறப்பம்சங்கள்
- 13.5 இன்ச் 3000x2000 பிக்சல் / 15 இன்ச் 3240x2160 பிக்சல் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் 10th gen இன்டெல் கோர் i5-1035G7 மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ்
- கோர் ஐ7-1065G7 மற்றும் 4ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1650
- 6 ஜிபி GDDR6 NVIDIA GeForce GTX 1660 Ti / NVIDIA Quadro RTX 3000
- 8 ஜிபி, 16 ஜிபி, அல்லது 32 ஜிபி 3733Mhz LPDDR4x ரேம்
- 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி அல்லது 2 டிபி PCIe எஸ்எஸ்டி
- HW TPM 2.0 சிப்
- 5.0 எம்பி முன்புற கேமரா
- 8.0 எம்பி பிரைமரி கேமரா
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், டூயல் பார் பீல்டு ஸ்டூடியோ மைக்
- 2 x USB-A, 1 x USB-C
- வைபை, ப்ளூடூத் 5
இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2 பேஸ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 63,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3 மாடல் விலை ரூ. 1,56,299 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3,40,399 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வி நிறுவனம் தனது சலுகை கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
வியாபாரத்தில் தொடர் இழப்பை சரி செய்யும் முயற்சியாக விலை உயர்வை அமல்படுத்த வி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்று சலுகை விலையை உயர்த்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், இரு நிறுவனங்களும் ஜியோ சலுகை கட்டணங்களுக்கு போட்டியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும் முன் வி நிறுவனம் விலை உயர்வு பற்றி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு டிசம்பர் மாத வாக்கில் அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. விலை உயர்வு அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கலாம் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறினாலும், இவ்வாறு அமல்படுத்துவது சற்றே சிக்கலான காரியம் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் புதிய ஐபேட் மாடலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஏர்பாட்ஸ் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு சாதனங்களும் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
லிக்விட் க்ரிஸ்டல் சாப்ட் போர்டு (எல்சிபி) தொழில்நுட்பத்திற்காக ஆப்பிள் நிறுவனம் சீன உற்பத்தியாளரான ஜியலின்யி-யை ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களுக்கு இந்நிறுவனம் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.

எல்சிபி தொழில்நுட்பம் மூலம் ஆப்பிள் நிறுவனம் உதிரிபாங்களிடையே அதிவேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியும். மினி எல்இடி ஐபேட் மாடலின் உற்பத்தி பணிகள் 2021 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
மினி எல்இடி டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஏழு சாதனங்களை ஆப்பிள் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, 14.1 இன்ச் மேக்புக் ப்ரோ, 166 இன்ச் மேக்புக் ப்ரோ, 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி போன்ற சாதனங்கள் அடங்கும்.
இத்துடன் 3 ஆம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலையும் ஆப்பிள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலை விட சிறிய ஸ்டெம் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாலில் உள்ளதை போன்ற இயர்டிப் டிசைன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தை வெளியிட துவங்கியது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளம் வெளியானது. இது இந்த ஆண்டின் மிகப்பெரும் அப்டேட் ஆகும். இந்த அப்டேட் மேக் மெஷின்களில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது.
இதன் மேம்பட்ட மெனு பார் முன்பை விட பெரிதாக இருக்கிறது. இத்துடன் உயரமான சைடுபார்கள், புது வடிவமைப்பு கொண்ட டாக் மற்றும் மேம்பட்ட ஆப் ஐகான்கள், மேம்பட்ட கண்ட்ரோல் சென்டர் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் மேக் ஒஎஸ் 11 பிக் சர் வெர்ஷனை மிகப்பெரும் அப்டேட்டாக மாற்றுகிறது.

இத்துடன் பிக் சர் அப்டேட்டில் பிரீலோட் செய்யப்பட்ட மெசேஜ்கள், மேப், சபாரி ஆப் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. மேலும் எம்1 சிப் வழங்கும் மேம்படுத்தல்களை இயக்கும் வசதியை இந்த அப்டேட் வழங்குகிறது.
முன்னதாக 2020 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் மேக் ஒஎஸ் பிக் சர் அறிவிக்கப்பட்டது. தற்சமயம் இந்த அப்டேட் அனைவருக்கும் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட டாக் வழங்கப்படுகிறது. இது டெஸ்க்டாப் வால்பேப்பரை டிரான்ஸ்பேரண்ட் ஆக மாற்றுகிறது.
மேக் ஒஎஸ் 11 பிக் சர் புதிய கண்ட்ரோல் சென்டர் கொண்டுள்ளது. இது அதிக கஸ்டமைசேஷன், மேம்பட்ட நோட்டிபிகேஷன் சென்டர் மற்றும் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் அந்த விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோவை ஏர்டெல் நிறுவனம் முந்தி இருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் 2020 ஆகஸ்ட் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை அதிகமாக சேர்த்து இருக்கிறது. இந்த தகவலை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்தது. வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 12.28 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது.

சந்தாதாரர்கள் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 35.08 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 28.12 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்திய சந்தையின் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 114.18 கோடிகளாக இருக்கிறது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 0.33 சதவீதம் அதிகம் ஆகும்.
கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஒன் செயலி டவுன்லோட்களில் அசத்தி புதிய மைல்கல் எட்டியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஒன் செயலி பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்து புதிய மைல்கல் எட்டி இருக்கிறது. பிளே ஸ்டோரில் பத்து கோடி டவுன்லோட்களை கடந்த புதிய செயலியாக கூகுள் ஒன் இணைந்து இருக்கிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஒன் ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பல்வேறு இதர செயலிகளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.

ஒப்போ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெசேஜஸ் மற்றும் போன் ஆப்ஸ் உள்ளிட்டவைகளை டீபால்ட் செயலியாக வழங்கி வருகின்றன.
கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதை கூகுள் ஒன் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதுதவிர கூகுள் எக்ஸ்பெர்ட்ஸ் மற்றும் பேமிலி ஷேரிங் உள்ளிட்ட சேவைகளுக்கான வசதியும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் கூகுள் ஒன் சேவையில் விபிஎன் (VPN) சேவையும் இணைக்கப்பட்டது.
அதிரடி ஹார்டுவேர், 18 மணி நேர பேக்கப் வழங்கும் புதிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் One More Thing நிகழ்வில் புதிய மேக்புக் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மேக்புக் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் எம்1 சிப்செட் கொண்டுள்ளது. மேலும் இது ஆப்பிள் சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் லேப்டாப் ஆகும்.

இது முந்தைய மேக்புக் ஏர் மாடலை 3.5 மடங்கு சிறப்பான சிபியு மற்றும் 5 மடங்கு வேகமான ஜிபியு திறன் கொண்டுள்ளது. இத்துடன் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, அதிகபட்சமாக 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, டச் ஐடி, வைபை 6, செக்யூட்டி என்கிளேவ் அம்சம், ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக்புக் ஏர் மாடல் துவக்க விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த எம்1 சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது கம்ப்யூட்டிங் சாதனங்களில் வழங்க எம்1 எனும் புதிய சிப்செட்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய அதிநவீன எம்1 5நானோமீட்டர் முறையில் உருவான முதல் கம்ப்யூட்டிங் சிப் ஆகும். இதில் 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது உலகின் அதிவேக கோர் ஆகும். இதில் 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது.

புதிய பிராசஸருடன் இணைந்து செயல்பட ஏதுவாக மேக் ஒஎஸ் பிக் சர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய சிப்செட் வழங்கும் செயல்திறனை சீராக இயக்க வழி செய்கிறது. மேலும் இது பயனர் தரவுகளை மற்ற கம்ப்யூட்டர்களை விட சிறப்பாக பாதுகாக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் செயலிகள் அனைத்தும் எம்1 சிப்செட் இணைந்து செயல்பட ஏதுவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கிராபிக்ஸ் அம்சங்கள் சீராக இயங்கும் வகையில் பிக் சர் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளை மேக் சாதனங்களில் இயக்க முடியும்.
ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் 2077 எடிஷன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் 2077 எடிஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
எனினும், புதிய வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் ஸ்டிராப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ஸ்டிராப்களில் கேம் லோகோ மற்றும் மஞ்சள் நிறம் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் ஸ்மார்ட்வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஸ்டிராப்களில் வித்தியாச கட்கள், ஒன்பிளஸ் மற்றும் சைபர்பண்க் பிராண்டிங் கொண்டிருக்கிறது. மேலும் இது மேட் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
முந்தைய தகவல்களில் ஒன்பிளஸ் வாட்ச் வட்ட விட டையல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதுதவிர இந்த மாடல் பிஐஎஸ் தளத்திலும் சான்று பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனம் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை இந்த காரணத்திற்காக அதிரடியாக நீக்கி இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுக்க 1196 அக்கவுண்ட்கள், 994 தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்ளை இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதுதவிர 7947 பக்கங்கள், 110 குரூப்கள் ஒருங்கிணைந்து விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட காரணத்துக்காக நீக்கி இருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் பேஸ்புக் 14 நெட்வொர்க்குகளை சேர்ந்த அக்கவுண்ட்கள், பக்கங்கள் மற்றும் குரூப்களை அதிரடியாக நீக்கியது. இதில் எட்டு நெட்வொர்க்குகள் ஜார்ஜியா, மியான்மர், உக்ரைன் மற்றும் அசர்பைஜான் நாடுகளை சேர்ந்தவை ஆகும்.

இவை அந்தந்த நாடுகளில் உள்ள பயனர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்புவது, விதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. மற்ற ஆறு நெட்வொர்க்குகள் ஈரான், எகிப்து, அமெரிக்கா, மெக்சிகோ சார்ந்து செயல்பட்டு வந்தன.
சோனி நிறுவனம் பிரீமியம் பட்ஜெட்டில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய OLED டிவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் ஏஹெச்8 என அழைக்கப்படுகிறது. இது 4கே ஹெச்டிர் ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும்.
புதிய சோனி ஸ்மார்ட் டிவி எக்ஸ்1 அல்டிமேட் இமேஜ் பிராசஸர், பிக்சல் காண்டிராஸ்ட் பூஸ்டர் தொழில்நுட்பம், TRILUMINOS பேனல், அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ, அலெக்சா, ஆப்பிள் ஏர்பிளே மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சோனியின் புதிய எக்ஸ்1 அல்டிமேட் பிராசஸர் முந்தைய எக்ஸ்1 எக்ஸ்டிரீம் பிராசஸரை விட இருமடங்கு வேகமாக செயல்படுகிறது. இது 4கே ரெசல்யூஷன் படங்களை அதன் உண்மை தரத்தில் பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த டிவியில் உள்ள அகௌஸ்டிக் சர்பேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஸ்கிரீனையே ஸ்பீக்கராக பயன்படுத்துகிறது. மேலும் இதில் டால்பி அட்மோஸ், எஸ் போர்ஸ் முன்புற சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது டிவி வைக்கப்பட்டு இருக்கும் சூழலை அறிந்து ஆடியோ மற்றும் படங்களை சரியாக ஒளிபரப்புகிறது.
புதிய சோனி டிவி மாடலில் ஆண்ட்ராய்டு டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2, ஹோம்கிட், கூகுள் அசிஸ்டண்ட், நெட்ப்ளிக்ஸ் கலிபரேட்டெட் மோட், டால்பி விஷன் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சோனி ஏ8ஹெச் மாடல் 65 இன்ச் மாடல் விலை ரூ. 3,39,900 ஆகும். எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சோனி ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 2,79,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 55 இன்ச் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.






