என் மலர்tooltip icon

    கணினி

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சியோமி நிறுவனம் புதிய எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 14 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, 10th Gen இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நோட்புக் மெட்டல் சேசிஸ் மெல்லிய யுனிபாடி கொண்டிருக்கிறது. இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர்-ஸ்விட்ச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பிரத்யேக நம்பர் பேட் வழங்கப்படவில்லை.

     எம்ஐ நோட்புக் 14

    சியோமி எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் சிறப்பம்சங்கள்

    - 14 இன்ச் 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
    - 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
    - 8ஜிபி DDR4 2666MHz ரேம்
    - 256ஜிபி SATA எஸ்எஸ்டி
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
    - இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா
    - வைபை, ப்ளூடூத் 5
    - 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4b
    - 3.5எம்எம் ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக் 
    - 46 வாட் பேட்டரி
    - பாஸ்ட் சார்ஜிங்
    - 65 வாட் அடாப்டர்

    எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெறுகிறது.
    ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவினை இலவசமாக வழங்குகிறது.


    ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தேங்ஸ் செயலி மூலம் வழங்கப்படுகிறது.

    இலவச சந்தா யூடியூப் மியூசிக் பிரீமியம், யூடியூப் பிரீமியம், யூடியூப் ரெட் அல்லது கூகுள் பிளே மியூசிக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

     யூடியூப் பிரீமியம்

    தற்போது யூடியூப் பிரீமியம் சேவைக்கான மாத சந்தா கட்டணம் ரூ. 129 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் விளம்பரம் இல்லா சேவை, பேக்கிரவுண்டு பிளேபேக் மற்றும் யூடியூப் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை அடங்கும்.

    இலவச யூடியூப் பிரீமியம் சந்தா ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 22, 2021 வரை வழங்கப்படுகிறது. இந்த அம்சம் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு தற்சமயம் பெரும்பாலானோருக்கு வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் வலைதள விவரங்களின் படி இலவச சந்தா புதிய யூடியூப் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே யூடியூப் பிரீமியம் சந்தா பயன்படுத்துவோர் இந்த பலனை பெற முடியாது. 

    மேலும் இது யூடியூப் மியூசிக் பிரீமியம், யூடியூப் ரெட் மற்றும் கூகுள் பிளே மியூசிக் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படாது என ஏர்டெல் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.


    உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனாவைரஸ் பாதிப்பு, சரியாகி மீண்டும் இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 

    மேலும் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சோதனையை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் மசாசூட்ஸ் தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மக்கள் இருமலை ஆய்வு செய்து கொரோனா பாதிப்பு உள்ளதா என தெரிவிக்கும் செயலியை உருவாக்கி உள்ளனர்.

     கோப்புப்படம்

    பல்வேறு ஆன்லைன் தகவல்களின் படி, ஆராய்ச்சியாளர்கள் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை செயலி கண்டறிந்து தெரிவிக்கிறது. 

    ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா தொற்று ஏற்பட்ட 70 ஆயிரம் பேரின் இருமல் சத்தங்களை ஆய்வு செய்தனர். பின் 2 லட்சம் இருமல் பதிவுகளை ஆய்வு செய்து 2500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இந்த ஆய்வில் செயலி 98.5 சதவீதம் சரியாக முடிவுகளை தெரிவித்து உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி ‘One more thing’ நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ‘One more thing’ விர்ச்சுவல் நிகழ்வு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிலிகான் மேக் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக ஆப்பிள் நிகழ்வுகள் விர்ச்சுவல் முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் பிராசஸர் கொண்ட முதல் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ என கணித்திருந்தார்.

     ஆப்பிள் சிலிகான்

    ஆப்பிள் சிலிகான் பிராசஸர்கள் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இதில் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட பவர் மேனேஜ்மென்ட் வழங்கும் என ஆப்பிள் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. 

    அந்த வகையில் இந்த பிராசஸர் கொண்ட சாதனம் நீண்ட பேட்டரி பேக்கப், அதிக பாதுகாப்பு வழங்கும். மேலும் இதில் தரமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் உயர் ரக ஜிபியு, நியூரன் என்ஜின் மற்றும் மெஷின் லேர்னிங் அக்செல்லரேட்டர்கள், வீடியோ, டிஸ்ப்ளே மற்றும் இமேஜ் பிராசஸிங் என்ஜின்களை கொண்டிருக்கும். 
    பென்ச்மார்க் புள்ளிகளில் ஆப்பிள் புதிய பிராசஸரை குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.


    குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் பிராசஸர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் முந்தைய ஆண்டின் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சமீபத்தில் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் பென்ச்மார்க் செயல்திறன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. 

    அந்த வகையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முந்தைய ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரை விட புதிய பிளாக்ஷிப் பிராசஸர் 25 மடங்கு வேகமாக இருக்கிறது. அன்டுடு பென்ச்மார்க் சோதனையில் இந்த பிராசஸர் 8,47,868 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இது ஆப்பிள் நிறுவன பிராசஸர்களை விட அதிகம் ஆகும்.

     குவால்காம் ஸ்னாப்டிராகன்

    பென்ச்மார்க் விவரங்களின் படி புதிய ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசர் 6,60,000 புள்ளிகளை பெற்று இருந்தது. இதேபோன்று கிரின் மற்றும் எக்சைனோஸ் முறையே 6,96,000 மற்றும் 6,93,000 புள்ளிகளை பெற்று இருந்தன. புள்ளிகள் அடிப்படையில் சில பிராசஸர்கள் அதிக புள்ளிகளை பெற்று இருக்கின்றன.

    எனினும், பிராசஸர்கள் எந்தளவு மென்பொருளுடன் சீராக இணைந்து செயல்படுகிறது என்பதை பொருத்தே அதன் செயல்திறனை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் முந்தைய காலக்கட்டங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் இந்த விஷயத்தில் அதிக சிறப்பாக செயலாற்றி இருக்கின்றன.

    சியோமி, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களும் இந்த பிளாக்ஷிப் பிராசஸரை பயன்படுத்த இருக்கின்றன. அந்த வகையில் பிராசஸரை எந்த நிறுவனம் சிறப்பாக கையாள்கிறது என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் 73 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.


    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது. இந்த தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. 

    இந்நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் புதிதாக 73 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து உள்ளது. முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது. 

     கோப்புப்படம்

    மேலும் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ. 145 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 3.2 சதவீதம் வரை அதிகம் ஆகும்.

    புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஜியோ வருடாந்திர அளவில் 13.96 வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.59 கோடிகளாக இருந்தது.
    வி நிறுவனம் இந்திய சந்தையில் எட்டு புதிய ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய சந்தையில் ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 32 துவங்கி ரூ. 103 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வி ரூ. 32 ஆட் ஆன் சலுகையில் 28 நாட்களுக்கு 200 பிரபல கேம்களை விளம்பரங்கள் இன்றி விளையாட முடியும். ஸ்போர்ட்ஸ் ப்ரியர்களுக்கென ரூ. 42 சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு விளையாட்டு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

     வி

    கான்டெஸ்ட் பேக் என அழைக்கப்படும் ரூ. 43 சலுகையில் போட்டிகளில் கலந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்து கொண்டு ரீசார்ஜ் மற்றும் கோல்டு வவுச்சர்களை வெல்ல முடியும். இதேபோன்ற சலுகை ரூ. 52 விலையில் வழங்கப்படுகிறது. 

    இதில் பாலிவுட் பிரபலங்களுடன் நேரலையில் சாட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வி ஆட் ஆன் சலுகைகளை நீண்ட வேலிடிட்டியுடன் பெற விரும்புவோருக்கு ரூ. 62, ரூ. 72, ரூ. 73 மற்றும் ரூ. 103 விலையில் வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் க்ளிப்ஸ் செயலி அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் தனது க்ளிப்ஸ்  வீடியோ க்ரியேஷன் செயலியை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் 3.0 முன்பை விட அதிகளவு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய இன்டர்பேஸ், லேண்ட்ஸ்கேப் ஒரியன்டேஷன், அதிக ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கென ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை வழங்கி உள்ளது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதில் ரெக்கார்ட் செய்ய கோரும் பட்டன் திரையில் மிதக்கிறது.

     ஆப்பிள் க்ளிப்ஸ்

    மேலும் எட்டு புதிய ஸ்டிக்கர்கள், 25 புதிய சவுண்ட் டிராக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு பயனர்கள் வீடியோக்களை பலவிதங்களில் மாற்ற முடியும். க்ளிப்ஸ் 3.0 புதிய ஆஸ்பெக்ட் ரேஷியோக்கள், மேம்பட்ட பில்ட்டர்கள், லைவ் டைட்டிள்கள் என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    ஐபேட் சாதனங்களில் க்ளிப்ஸ் 3.0 செயலி லேண்ட்ஸ்கேப் மோட் வழங்குகிறது. இத்துடன் ஐஒஎஸ்14 வெர்ஷனில் ஆப்பிள் பென்சில் வழங்கும் ஸ்க்ரிபிள் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேஜிக் கீபோர்டு அல்லது ஸ்மார்ட் கீபோர்டு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இவற்றுடன் ஐபோன் 12 சீரிஸ் கொண்டிருக்கும் அம்சங்களை இயக்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் ஹெச்டிஆர் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேம்பட்ட ஆப்பிள் க்ளிப்ஸ் 3.0 ஆப் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. 
    போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் ஸ்டாம் எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது.


    இந்திய சந்தையில் நுகர்வோர் மின்சான பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் போட். இந்நிறுவனம் இந்திய பிட்னஸ் சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் போட் ஸ்டாம் என அழைக்கப்படுகிறது. 

    போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.3 இன்ச் வளைந்த டிசைனில் தொடுதிரை ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு, எஸ்பிஒ2 மாணிட்டரிங், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

     போட் ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போட் ப்ரோ-கியர் ஆப் மூலம் இந்த வாட்ச்சிற்கு பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதை கொண்டு பயனர்கள் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். 

    ஸ்டாம் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் எஸ்பிஒ2 வசதி, 24x7 இதய துடிப்பு டிராக்கிங், 9 பில்ட் இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 210 எம்ஏஹெச் பேட்டரி 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஆக்டிவ் பிளாக், பிளாக் மற்றும் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும்.
    பேஸ்புக் நிறுவனம் இலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் சமீப காலமாக கிளவுட் கேமிங் துறையில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. மைக்ரோசாப்ட் எக்ஸ் கிளவுட் மற்றும் கூகுள் ஸ்டேடியா போன்றவை கிளவுட் கேம் ஸ்டிரீமிங் தொழில்நுட்பத்தில் களமிறங்கிய நிலையில் தற்சமயம் பேஸ்புக் நிறுவனமும் கிளவுட் கேமிங் சேவையை துவங்கி இருக்கிறது. 

    பேஸ்புக் கேமிங் என அழைக்கப்படும் புதிய சேவை கிளவுட் சார்ந்த கேம்களை டவுன்லோட் செய்யாமல் பேஸ்புக் செயலி மற்றும் பிரவுசரில் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மொபைல் கேமிங் துறையில் மிக பெரிய காரியம் ஆகும். இந்த தளத்தில் வெளியாகும் கேம்கள் சீராக இயங்கும் வகையில் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

     பேஸ்புக் கேமிங்

    கூகுள் ஸ்டேடியா அல்லது மைக்ரோசாப்ட் எக்ஸ்-கிளவுட் போன்று இல்லாமல், பேஸ்புக்கின் கிளவுட் கேம்கள் நேரடியாக செயலி அல்லது பிரவுசரில் டவுன்லோட் ஆகி சம்பந்தப்பட்ட சாதனத்தில் விளையாட கிடைக்கிறது. பேஸ்புக் கிளவுட் கேமிங் புல் மற்றும் இலவச கேம் என இருவழிகளில் கிடைக்கிறது. 

    ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் பை கேம்லாப்ட், மொபைல் லெஜண்ட்ஸ் - அட்வென்ச்சர் பை மூன்டன், பிஜிஏ டூர் கொல்ப் ஷூட்அவுட் பை கான்க்ரீட் சாப்ட்வேர், சாலிடேர்- ஆர்தர்ஸ் டேல் பை க்யூப்ளிக்ஸ் கேம்ஸ், டபிள்யூடபிள்யூஇ சூப்பர்கார்டு பை 2கே உள்ளிட்ட கேம்கள் இந்த வாரம் முதல் கிடைக்கிறது.
    அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என தொடர்ந்து பார்ப்போம்.


    உலகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. உலகின் மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் மொபைல் டேட்டாவுக்கான கட்டணமும் குறைவு. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையின் படி சர்வதேச சந்தையில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 131-வது இடம் பிடித்துள்ளது. தென் கொரியா, இலங்கை, நேபால் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் மொபைல் டேட்டா வேகம் குறைவு ஆகும்.

     கோப்புப்படம்

    ஆய்வு நிறுவனமான ஊக்லா வெளியிட்ட தகவல்களின் படி செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் மொபைல் டேட்டா டவுன்லோட் வேகம் சராசரியாக 12.07Mbps ஆக இருந்துள்ளது. சர்வதேச அளவில் மொபைல் டேட்டா வேகம் சராசரியாக 35.06Mbps ஆக இருக்கிறது.

    அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 102, 116 மற்றும் 117-வது இடங்களை பிடித்துள்ளன. 

    பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவரை இந்தியா 70-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பிராட்பேண்ட் டவுன்லோட் வேகம் சராசரியாக 46.47Mbps ஆக இருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் சர்வதேச வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனத்தின் புதிய வாட்ச் மாடல் விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது. ரியல்மி வாட்ச் எஸ் மாடல் நவம்பர் 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய வாட்ச் மாடல் வெளியீட்டை ஒட்டி ரியல்மி பகிர்ந்து இருக்கும் புதிய டீசரில் வாட்ஸ் எஸ் மாடலின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்து இருக்கிறது.

     ரியல்மி வாட்ச் எஸ்

    அதன்படி புதிய வாட்ச் எஸ் 1.3 இன்ச் ஆட்டோ பிரைட்னஸ் வசதி கொண்ட டச் ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் OLED டிஸ்ப்ளே மற்றும் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    ரயல்மி வாட்ச் எஸ் மாடலில் போன் மூலம் மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. புதிய ரியல்மி வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. 
    ×