search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் க்ளிப்ஸ்
    X
    ஆப்பிள் க்ளிப்ஸ்

    அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்

    ஆப்பிள் நிறுவனத்தின் க்ளிப்ஸ் செயலி அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் தனது க்ளிப்ஸ்  வீடியோ க்ரியேஷன் செயலியை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷன் 3.0 முன்பை விட அதிகளவு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் புதிய இன்டர்பேஸ், லேண்ட்ஸ்கேப் ஒரியன்டேஷன், அதிக ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கென ஹெச்டிஆர் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியை வழங்கி உள்ளது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதில் ரெக்கார்ட் செய்ய கோரும் பட்டன் திரையில் மிதக்கிறது.

     ஆப்பிள் க்ளிப்ஸ்

    மேலும் எட்டு புதிய ஸ்டிக்கர்கள், 25 புதிய சவுண்ட் டிராக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை கொண்டு பயனர்கள் வீடியோக்களை பலவிதங்களில் மாற்ற முடியும். க்ளிப்ஸ் 3.0 புதிய ஆஸ்பெக்ட் ரேஷியோக்கள், மேம்பட்ட பில்ட்டர்கள், லைவ் டைட்டிள்கள் என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    ஐபேட் சாதனங்களில் க்ளிப்ஸ் 3.0 செயலி லேண்ட்ஸ்கேப் மோட் வழங்குகிறது. இத்துடன் ஐஒஎஸ்14 வெர்ஷனில் ஆப்பிள் பென்சில் வழங்கும் ஸ்க்ரிபிள் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேஜிக் கீபோர்டு அல்லது ஸ்மார்ட் கீபோர்டு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இவற்றுடன் ஐபோன் 12 சீரிஸ் கொண்டிருக்கும் அம்சங்களை இயக்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் ஹெச்டிஆர் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேம்பட்ட ஆப்பிள் க்ளிப்ஸ் 3.0 ஆப் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. 
    Next Story
    ×