என் மலர்tooltip icon

    கணினி

    இந்திய சந்தையில் நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவில் நோக்கியா பிராண்டின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், டால்பி விஷன், அல்ட்ரா வைடு பிக்சர் தரம், இன்டெல் ஐ5 10 ஆம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஹெட்போன்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 10, ஹெச்டி ஐஆர் வெப்கேமரா, விண்டோஸ் ஹெலோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ், பிரெசிஷன் டச்பேட் மற்றும் பல்வேறு ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

     நோக்கியா பியூர்புக் எக்ஸ்14

    நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 சிறப்பம்சங்கள்

    - 14 இன்ச் 1920x1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, டால்பி விஷன்
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
    - 8 ஜிபி DDR4 2666MHz ரேம்
    - 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி
    - ஹெச்டி ஐஆர் வெப்கேமரா
    - பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
    - வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1
    - HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1
    - டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - 46.7Wh பேட்டரி
    - 65 வாட் சார்ஜிங் 

    நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. 

    ஆப்பிள் நிறுவனத்தின் 10.5 இன்ச் ஐபேட் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 10.5 இன்ச் ஐபேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஐபேட் தோற்றத்தில் 8 ஆம் தலைமுறை ஐபேட் போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடலில் 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் அளவில் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹோம் பட்டன், டச் ஐடி சென்சார் மற்றும் லைட்னிங் கனெக்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் 64 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என தெரிகிறது.

     ஐபேட்

    விலையை பொருத்தவரை புதிய ஐபேட் மாடல் 299 டாலர்கள் முதல் துவங்கலாம் என தெரிகிறது. இதுதவிர எம்எம்வேவ் சப்போர்ட் கொண்ட உயர் ரக ஐபேட் ப்ரோ மாடல்களை 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக எம்எம்வேவ் மாட்யூல்களை உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகி இருப்பதால், புதிய ஐபேட்களிலும் இவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூவாமி நிறுவனம் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. முன்பதிவு அமேஸ்பிட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    அமேஸ்பிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை முன்பதிவு செய்வோருக்கு கூடுதலாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஸ்டிராப் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மற்றும் அலுமினியம் அலாய் கேஸ் மற்றும் சிலிகான் ஸ்டிராப் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் சிலிகான் ஸ்டிராப் வெர்ஷன் விலை ரூ. 12,999 என்றும் கிளாசிக் எடிஷன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்ட வெர்ஷன் விலை ரூ. 13,499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     அமேஸ்பிட் ஜிடிஆர் 2

    அமேஸ்பிட் ஜிடிஆர் 2 சிறப்பம்சங்கள்

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சப்போர்ட் 
    - 12 ஸ்போர்ட் மோட்கள்
    - ஆக்டிவிட்டி டிராக்கிங்
    - பயோ டிராக்கர், 2 பிபிஜி டேட்டா சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 மீட்டர்கள்)
    - ப்ளூடூத் 5 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS
    - 3 ஜிபி மெமரி
    - மைக்ரோபோன் 
    - 471 எம்ஏஹெச் பேட்டரி
    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிதாக பேமிலி போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 948 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த பேமிலி போஸ்ட்பெயிட் சலுகையானது ஏற்கனவே அந்நிறுவனம் வழங்கி வரும் ரூ. 699 சலுகையின் வேறுப்பட்ட சலுகை ஆகும். புதிய ரூ. 948 சலுகையினை இருவர் பயன்படுத்த முடியும். 

    அதன்படி பிரைமரி பயனருக்கு அன்லிமிட்டெட் டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி சேவை வழங்கப்படுகிறது.

    மேலும் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 சேவைக்கான சந்தா பிரைமரி இணைப்புக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தற்சமயம் வி ரூ. 948 சலுகை உத்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த சலுகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக வி என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்கள் இம்மாத துவக்கத்தில் உயர்த்தப்பட்டன. அனைத்து சலுகைகளும் முந்தைய விலையில் இருந்து ரூ. 50 வரை உயர்த்தப்பட்டன. 

    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய எம்ஐ வாட்ச் லைட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடல் அந்நிறுவனத்தின் சர்வதேச வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சர்வதேச சியோமி வலைதளத்தில் எம்ஐ வாட்ச் லைட் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

     எம்ஐ வாட்ச் லைட்

    புதிய எம்ஐ வாட்ச் லைட் மாடலில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி வாட்ச் மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சதுரங்க வடிவம், 1.4 இன்ச் கலர் டிஸ்ப்ளே, வலதுபுறத்தில் பவர் பட்டன், 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் 11 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 9 நாட்கள் பேட்டரி பேக்கப், அதிகபட்சம் 120 வாட்ச் பேஸ்களுக்கான சப்போர்ட், எமோஜி சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள பிபிஜி சென்சார் பயனரின் இதய துடிப்பு விவரங்களை தொடர்ந்து டிராக் செய்யும். 

    எம்ஐ வாட்ச் லைட் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக் கண்ட்ரோல் வசதி, ஐடில் அலெர்ட்கள், கால், ஆப்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை வோடபோன் ஐடியா நவம்பர் மாதத்தில் முந்தியுள்ளது.


    வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக தரமான வாய்ஸ் கால் சேவை வழங்கி உள்ளது. இதனை அந்நிறுவன பயனர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த தகவல் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிராய் வலைதளத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து விதமாக நெட்வொர்க்குகளில் பயனர் வழங்கிய விவரங்களை கணக்கிடப்பட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. `மைகால்' டேஷ்போர்டில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகள் அடிப்படையில் வோடபோன் ஐடியா இணைந்து ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

     கோப்புப்படம்

    தரமான கால் சேவை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 5-க்கு 4.9 புள்ளிகள், வோடபோன் 5-க்கு 4.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் 5-க்கு 4.1 புள்ளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ 5-க்கு 3.8 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.

    ஒட்டுமொத்தமாக 88.4 சதவீத பயனர்கள் திருப்திகரமான சேவையை பெற்றதாகவும், 8.24 சதவீதம் பேர் மோசமான சேவையை பெற்றதாகவும், 3.62 சதவீதம் பேர் கால் டிராப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒவர்-இயர் டிசைன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இதில் ஆப்பிள் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 40எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் ஹெச்1 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிரத்யேக அகௌஸ்டிக் டிசைன் கொண்டுள்ளது. இதன் ஹெட்பேண்ட் பிரேம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     ஏர்பாட்ஸ் மேக்ஸ்

    இது வளையும் தன்மை மற்றும் தலையில் அணிந்திருக்கும் போது அதிக சவுகரியத்தை வழங்குகிறது. ஹெட்போனில் வழங்கப்பட்டு உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு வால்யூம், பிளேபேக், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

    மேலும் இதில் அடாப்டிவ் இகியூ ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆடியோ கேட்கும் போது வெவ்வேறு வசதிகளை வழங்குகிறது. 

    ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் வசதி தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இது 5.1, 7.1 மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற தரவுகளை துல்லியமாக அதிக தரத்தில் அனுபவிக்க வழி செய்கிறது. ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அதிகபட்சம் 20 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

    புதிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர் இயர் ஹெட்போன் ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 59,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர்புக் லேப்டாப் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    நோக்கியா பியூர்புக் லேப்டாப் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் லேப்டாப்பின் முன்புறம் காட்சியளிக்கிறது. இதன் மேல்புறம் வெள்ளை நிறமும், கீழ்புறத்தில் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது சற்றே வளைந்த டிசைன் கொண்டிருக்கிறது.

    டீசர்களின் படி புதிய நோக்கியா லேப்டாப் எடை குறைவாகவும் அதிக செயல்திறன் மற்றும் தலைசிறந்த அனுபவம் வழங்கும் என தெரிகிறது. புதிய லேப்டாப் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

    முன்னாதாக NKi510UL85S மற்றும் NKi310UL28S மாடல் நம்பர் கொண்ட இரு லேப்டாப் மாடல்கள் இந்தியாவின் பிஐஎஸ் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன. வலைதள விவரங்களின் படி புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய Mi QLED டிவி 4கே மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது Mi QLED டிவி 4கே மாடலைஇந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டிவி ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர எம்ஐ வலைதளம் மற்றும் எம்ஐ ஸ்டோர்களிலும் இந்த டிவி கிடைக்கும்.

    முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சியோமி நிறுவனம் பல்வேறு QLED டிவி மாடல்களை எம்ஐ டிவி 5 ப்ரோ சீரிசில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய 55 இன்ச் QLED டிவி 4கே மாடலை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிட சியோமி திட்டமிட்டுள்ளது.

    டீசர்களின் படி புதிய டிவி குவாண்டம் டாட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இது டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி மற்றும் ஹெச்டிஎம்ஐ 2.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் சார்ந்த சியோமி பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.


    இந்திய டெலிகாம் சந்தையில் செப்டம்பர் 2020 மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. எனினும், இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. 

    ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிக வாடிக்கையாளர்களை பெற்று இருப்பது இரண்டாவது முறை ஆகும். இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை இழந்து இருப்பதாக டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    டிராய் அறிக்கையின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவீதம் அதிகரித்து தற்சமயம் 32.66 கோடியாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 0.36 சதவீத வளர்ச்சி பெற்று 40.04 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. 

    இதே காலக்கட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து தற்சமயம் 29.5 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் டெலிகாம் சந்தையில் 35.19 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 28.44 சதவீத பங்குகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 27.73 சதவீதம், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 10.36 சதவீதம், எம்.டி.என்.எல். நிறுவனம் 0.29 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனம் சிலிகான் பிராசஸர் கொண்ட இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ 13 மாடலினை ஆப்பிள் சிலிகான் பிராசஸருடன் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் தோற்றத்தில் பழைய மேக்புக் ப்ரோ போன்றே காட்சியளித்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியூ வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றின் வெளிப்புற வடிவமைப்பு புதிதாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல் 2021 ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

    மேக்புக் ப்ரோ வரிசையில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட மேக்புக் ஏர் மாடல் 2022 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 2022 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 2.8 கோடி மினி எல்இடி சாதனங்களை விநியோகம் செய்யும் என கியோ கணித்து இருக்கிறார். 

    2021 ஆண்டில் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் ப்ரோ சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும் என தெரிகிறது.
    ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டின் 15 சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் ஆப் ஸ்டோர் 2020 ஆண்டிற்கான சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் வாழ்க்கை முறையை எளிமையாக்கும், ஆரோக்கிய அம்சங்கள் நிறைந்த செயலிகள், கேம்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    செயலிகள் மற்றும் கேம்கள் அதிக தரம், வித்தியாச வடிவமைப்பு, பயன்பாட்டு முறை மற்றும் புதுவித தொழில்நுட்பத்தின் பயன்பாடு என பல்வேறு அடிப்படையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக கலாச்சார நன்மை, உதவும் நிலை மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றையும் கொண்டு தேர்வு செய்யப்பட்டன.

     சிறந்த செயலிகள்

    2020 ஆண்டின் சிறந்த செயலிகள்

    - இந்த ஆண்டின் சிறந்த ஐபோன் ஆப்: வாக்அவுட் (Wakeout!)
    - இந்த ஆண்டின் சிறந்த ஐபேட் ஆப்: ஜூம் (Zoom)
    - இந்த ஆண்டின் சிறந்த மேக் ஆப்: ஃபென்டாஸ்டிக்கல் (Fantastical)
    - இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் டிவி ஆப்: டிஸ்னி பிளஸ்(Disney+)
    - இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் வாட்ச் ஆப்: என்டெல் (Endel)

    2020 ஆண்டின் சிறந்த செயலிகள்

    இந்த ஆண்டின் சிறந்த ஐபோன் கேம் : கென்ஷின் இம்பேக்ட் (Genshin Impact)
    இந்த ஆண்டின் சிறந்த ஐபேட் கேம்: லெஜண்ட்ஸ் ஆப் ரனெடெர்ரா (Legends of Runeterra)
    இந்த ஆண்டின் சிறந்த மேக் கேம்: டிஸ்கோ எலிசியம் (Disco Elysium)
    இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் டிவி கேம்: டன்டரா டிரையல்ஸ் ஆப் பியர் (Dandara Trials of Fear)
    இந்த ஆண்டின் சிறந்த ஆப்பிள் ஆர்கேட் கேம்: ஸ்னீகி சஸ்குவாட்ச் (Sneaky Sasquatch)

    ×