என் மலர்
கணினி
இந்திய சந்தையில் புதிய ரியல்மி வாட்ச் எஸ் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வாட்ச் எஸ் மாடலில் 1.3 இன்ச் அளவில் வட்ட வடிவ எல்சிடி டச் ஸ்கிரீன் ஆட்டோ பிரைட்னஸ் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் வசதி, அலுமினியம் அலாய் கேஸ், 16 ஸ்போர்ட்ஸ் மோட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், அதிகபட்சம் 15 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோ மாடலில் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், ஆட்டோ பிரைட்னஸ், ஆம்பியன்ட் லைட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 100-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் எஸ் மாடல் விலை ரூ. 4999 என்றும் வாட்ச் எஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் The First Look 2021 எனும் தலைப்பில் ஜனவரி 6 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வில் புதிய டிவி மற்றும் இதர டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
இந்த நிகழ்வில் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என சாம்சங் அறிவித்து உள்ளது. டீசர் படத்தில் மாணிட்டர்கள், தொலைகாட்சிகள் மற்றும் இதர டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

முன்னதாக இந்த ஆண்டு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் QLED 8K டிவி, புதிய 88 மற்றும் 150 இன்ச் மைக்ரோ எல்இடி மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு சாம்சங் புதிய QLED 8K டிவி, தி செரிப் QLED டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் புதிய குவாண்டம் மினி LED டிவிக்களை 55, 65, 76 மற்றும் 85 இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுதவிர டேப்லெட்கள், லேப்டாப் மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
ஹூவாமி நிறுவனம் ரூ. 12,999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்
- 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
- 3D கிளாஸ்
- ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
- 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
- ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
- அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
- ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ்
- 3 ஜிபி மெமரி
- மைக்ரோபோன்
- 246mAh பேட்டரி
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கொரோனாவைரஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு நிறுவனங்களும் வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிவித்து வருகின்றன. இதுதவிர, வீட்டில் இருந்து பணியாற்றுவோரின் டேட்டா பயன்பாடு அதிகரித்து உள்ளது. தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிவித்து உள்ளது.
பிஎஸ்என்எல் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகை ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சலுகையில் 70 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையுடன் சிங் மியூசிக் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

முன்னதாக பிஎஸ்என்எல் ரூ. 56 மற்றும் ரூ. 151 விலையில் இரண்டு சலுகைகளை வொர்க் ஃபிரம் ஹோம் பிரிவில் வழங்கி வருகிறது. இதில் ரூ. 56 பிஎஸ்என்எல் சலுகையில் 10 ஜிபி டேட்டாவும், ரூ. 151 பிஎஸ்என்எல் சலுகையில் 40 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகைகளை வழங்கி வருகின்றன. இவற்றின் விலை ரூ. 151 முதல் துவங்குகிறது.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக டீசர்கள் மூலம் அறிவித்து இருந்தது. எனினும், இதுவரை இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படவில்லை.
புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். மேலும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ புதிய தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் 2021 ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக புது ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
போக்கோ பிராண்டிங் லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இந்தியாவின் பிஐஎஸ் சான்று அளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது.
இரண்டு புது லேப்டாப் மாடல்களின் பேட்டரி முறையே R15B02W மற்றும் R14B02W எனும் மாடல் நம்பர்களுடன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கின்றன. இவை போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவை எம்ஐ லேப்டாப்களின் ரி-பிராண்ட் செய்யப்பட்டு போக்கோ லேப்டாப் மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

போக்கோ பிராண்டு இதுவரை ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் 2021 ஆண்டில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ லேப்டாப் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது.
இதுதவிர ஏற்கனவே வெளியான தகவல்களில் போக்கோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் மற்றும் எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. போக்கோ லேப்டாப் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் சவுண்ட் பாம்ப் கியூ ப்ரோ ட்ரூ வயர்லெஸ் பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங், அதிகபட்சம் 35 மணி நேர பிளே பேக் வழங்குகிறது.
புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் கியூ ப்ரோ மாடல் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன் கொண்டிருப்பதோடு குவால்காம் ஆப்ட் எக்ஸ் சிப்செட் மற்றும் டைப் சி ரக சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 முதல் 8 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஒற்றை டச் மூலம் பல்வேறு அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய ஜெப் சவுண்ட் பாம்ப் கியூ ப்ரோ மாடல் விலை ரூ. 2799 எனும் சிறப்பு விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 3799 ஆகும்.
சோனி நிறுவனத்தின் புதிய பிளே ஸ்டேஷன் 5 இந்திய விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சோனி நிறுவனத்தின் புதிய தலைமுறை கேமிங் கன்சோல் பிஎஸ்5 உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விற்பனை துவங்கிய பல நாடுகளில் புதிய பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனிடையே இதன் இந்திய விற்பனை விவரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி நிறுவனம் பிஎஸ்5 கன்சோலை ஜனவரி மாத மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரும் என கூறப்படுகிறது. புதிய பிஎஸ்5 கன்சோலுக்கான முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் புதிய பிஎஸ்5 கன்சோல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் சோனி சென்ட்டர்களும், பிஎஸ்5 முன்பதிவு இம்மாத இறுதியில் துவங்கலாம் என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக பிஎஸ்5 கன்சோல் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை துவங்க மேலும் சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. பிஎஸ்5 விற்பனை ஏற்கனவே துவங்கிய இருக்கும் பல்வேறு சந்தைகளிலும் கன்சோலுக்கு பெரும் தட்டுப்பாடு சூழலே நிலவுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது. கடந்த மாதம் மேக்ஒஎஸ் பிக் சர் ஒஎஸ் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புது அப்டேட் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர்-இயர் ஹெட்போனிற்கான சப்போர்ட் வழங்குகிறது.
மேலும் ஆப் ஸ்டோர் பிரைவசி லேபில், ஆப்பிள் நியூஸ் விட்ஜெட்கள், மேம்பட்ட போட்டோஸ் ஆப் மற்றும் ஆப்பிள் ப்ரோரா புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. இத்துடன் காற்றின் தரம் சார்ந்த ஆரோக்கிய விவரங்கள் வெதர் மற்றும் சிரி சேவையில் வழங்கப்படுகிறது.

மேக்ஒஎஸ் 11 பிக் சர் வெளியானது முதல் ஆப்பிள் வெளியிட்ட பெரும் அப்டேட் இது ஆகும். இதில் மேம்பட்ட இன்டர்பேஸ், மெனு பார், சைடு பார், மேம்பட்ட டாக், ஆப் ஐகான் மற்றும் கண்ட்ரோல் சென்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சங்கள் தவிர மேக் தளத்தின் பக் சரி செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் சிஸ்டம் பிரிபெரன்ஸ் செயலியில் சாப்ட்வேர் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் அப்டேட்களை தானாக அனுப்பிவிடும். ஒருவேளை அப்டேட் கிடைக்காத பட்சத்தில் இவ்வாறு செய்யலாம்.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 55 இன்ச் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக துல்லியமான நிறங்களை பிரதிபலிக்கிறது. இதனால் அதிக திறன் கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், கேமிங் மற்றும் இதர தரவுகளை சீராக ரென்டர் செய்ய முடியும். இதற்கென இந்த டிவியில் MEMC சிப் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய சியோமி டிவி மிக மெல்லிய பெசல்கள், 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் பிரேம், சேண்ட் பிளாஸ்ட் கோட்டிங் மற்றும் கார்பன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 10, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதில் HDMI 2.1 மற்றும் eARC வழங்கப்பட்டு உள்ளது. இது அதிக பேண்ட்வித் ஆடியோ, ஆட்டோமேடிக் லோ லேடென்சி மற்றும் 5ms இன்புட் லேக் கொண்டிருக்கிறது. இதனால் கேமிங் அனுபவம் தலைசிறந்ததாக இருக்கும். இந்த டிவியில் 30 வாட் திறன் கொண்ட 6 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் சியோமி Mi QLED TV 4K 55 இன்ச் மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ரீசார்ஜ் சலுகை கட்டணத்தை உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களை மீண்டும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், இழப்பை ஈடு செய்ய விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய டெலிகாம் சந்தையில் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக வோடபோன் ஐடியா தனது விலையை உயர்த்தலாம் என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களின் பிரீபெயிட் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஆண்டு 20 சதவீதம் வரை அதிகரித்தன.
இம்முறை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிதி நிலைமையை சரி செய்யும் நோக்கில் விலை உயர்வை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகை கட்டணத்தை உயர்த்தியது. இவை ஏர்டெல் நிறுவன சலுகைகளை விட 7 சதவீதம் அதிகம் ஆகும்.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன.
புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெசல்கள், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு கொண்டுள்ளன. இரு தொழில்நுட்பங்களும் டிவி பார்க்கும் போது தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் ஹெச்டிஆர் 10 வசதி, அதிகளவு நிறங்கள், 400 நிட்ஸ் பிரைட்னஸ், காட்சிகளை அதிக துல்லியமாக காண்பிக்கும் திறன் கொண்டிருக்கின்றன.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் எல்இடி பேனல் ஹார்டுவேரில் புளு லைட் ரிடக்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இன்பின்க்ஸ் நிறுவனத்தின் ஐ-கேர் தொழில்நுட்பத்தை டியுவி ரெயின்லாந்து சோதனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

இத்துடன் குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர், மாலி 470 MP3 GPU, 1 ஜிபி DDR4 ரேம், 8 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0
ஒஎஸ், பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 43 இன்ச் மாடலில் 3 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி, ஏவி, 32 இன்ச் மாடலில் 2 x ஹெச்டிஎம்ஐ, ஏவி, யுஎஸ்பி 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி ஏவி வழங்கப்பட்டு இருக்கின்றன.
இன்பினிக்ஸ் 32எக்ஸ்1 32 இன்ச் ஹெச்டி டிவி விலை ரூ. 11,999 என்றும் இன்பின்க்ஸ் 43எக்ஸ்1 43 இன்ச் புல் ஹெச்டி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகிறது.






