என் மலர்
கணினி
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அல்ட்ரா-லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவையை ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அம்சங்கள்
- ப்ளூடூத் 5
- 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர்
- MEMS மைக்
- ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்
- லோ லேடென்சி கேமிங் மோட்
- வாட்டர் ரெசிஸண்ட் வசதி
- பின்டிப் மற்றும் சிலிகான்
- கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
- 5 மணி நேர பிளேபேக்
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப்கள் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இதன் வருகையை ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் அறிவித்து இருந்தது.
அந்த வகையில் தற்சமயம் வயோ பிராண்டு தனது புதிய லேப்டாப் இந்தியாவில் ஜனவரி 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக வயோ லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

`வயோ பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்ய முன்னணி ஆன்லைன் தளத்துடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம். எதிர்கால லேப்டாப் மாடல்களை அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவை நாட்டின் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.'
`தலைசிறந்த லேப்டாப்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் தனது இடத்தை பிடிப்பதில் கவனமாக இருக்கிறோம். நாட்டில் லேப்டாப் வாங்குவோரின் முக்கிய தேர்வாக உருமாறும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.' என வயோ பிராண்டு வியாபார பிரிவு இயக்குனர் சீமா பட்நகர் தெரிவித்தார்.
5ஜி வசதி கொண்ட முதல் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 5ஜி வசதி கொண்ட முதல் 4 சீரிஸ் பிராசஸர் ஆகும். இது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பிராசஸர் உருவாக்கப்பட்டு வருவதாக குவால்காம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 460 பிராசஸரின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.

புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்51 5ஜி மோடெம் வழங்கப்படுகிறது. இந்த பிராசஸர் மில்லிமீட்டர் வேவ் மற்றும் சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வொர்க்குகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது.
ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர் கொண்ட முதற்கட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸரை சந்தையில் கொண்டுவர ஹெசஎம்டி குளோபல், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களுடன் குவால்காம் இணைந்து பணியாற்றி வருகிறது.
சமீபத்தில் அறிமுகமான ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் போன்று இல்லாமல் புதிய ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் 8 நானோமீட்டர் வழிமுறையில் உருவாகி இருக்கிறது.
இந்தியாவில் பப்ஜி மொபைலுக்கு மாற்றாக உருவாகி வரும் பாஜி கேம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த என்கோர் கேம்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் பாஜி கேம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியாவில் இந்த கேம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கேம் இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் பாஜி கேம் டிரெயிலரில் கேம்பிளே காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

பிளே ஸ்டோரில் இந்த கேம் விவரங்கள் மற்றும் டிரெயிலர் காட்சிகளை பார்க்கும் போது, இது இந்திய எல்லையின் வடக்கு பகுதியில் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது போன்ற கதையம்சம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
மேலும் இது மற்ற கேம்களை போன்று இன்-ஆப் பர்சேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் கேம் வெளியானதும் அறிவிக்கப்படலாம். இந்த கேமிற்கான முன்பதிவு தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.
அமேசான்பேசிக்ஸ் பயர்டிவி எடிஷன் 4K ஸ்மார்ட் எல்இடி டிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது.
இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், அலெக்சா வாய்ஸ் வசதி கொண்ட ரிமோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. வாய்ஸ் ரிமோட் கொண்டு அலெக்சா மூலம் நிகழ்ச்சிகளை கேட்டு ஸ்டிரீம் செய்ய முடியும்.

மேலும் பயர் ஒஎஸ் கொண்டு பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், சோனிலிவ், வூட், டிஸ்கவரி பிளஸ் மற்றும் பல்வேறு சேவைகளை இயக்கலாம்.
அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் 50-இன்ச் மாடல் விலை ரூ. 29,999 என்றும் 55-இன்ச் மாடல் விலை ரூ. 34,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை ஏற்கனவே அமேசான் தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் 43-இன்ச் 4K, 43-இன்ச் புல் ஹெச்டி, 32-இன்ச் ஹெச்டி ரெடி மாடல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது இலவச சிம் கார்டு சலுகையை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம் கார்டு சலுகையை ஜனவரி 31, 2021 வரை நீட்டித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு பிஎஸ்என்எல் தமிழ் நாடு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த சலுகை நவம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்து நவம்பர 28 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் இந்த சலுகை ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் இந்த சலுகை மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

சலுகை நீட்டிப்பு மட்டுமின்றி பிஎஸ்என்எல் ரூ. 186 மற்றும் ரூ. 199 சலுகை விலையை மாற்றி இருக்கிறது. பிஎஸ்என்எல் வலைதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது. எனினும், பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ. 100 சலுகையை பெற வேண்டும்.
இதுதவிர பிஎஸ்என்எல் ரூ. 186 சலுகை மற்றும் ரூ. 199 சலுகை விலை மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 186 சலுகை விலை தற்சமயம் ரூ. 199 என மாறி இருக்கிறது. மேலும் இதன் வேலிடிட்டி 30 நாட்களில் இருந்து 28 நாட்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த சலுகையில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேபோன்று பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை ரூ. 201 என மாறி இருக்கிறது. இந்த சலுகை பலன்களின் வேலிடிட்டி, அம்சங்கள் மற்றும் பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக பிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் பேண்ட் சியோமி எம்ஐ பேண்ட் 5 சாதனத்திற்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் இந்த பேண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பேண்ட் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே, பல நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் வாட்ச் மாடலிலும் கூகுள் பிளாட்பார்ம் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1999 பிரீபெயிட் சலுகையில் மாற்றம் செய்வதாக திடீரென அறிவித்து உள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ. 1999 விலை பிரீபெயிட் சலுகை பலன்களில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாற்றப்பட்ட ரூ. 1999 சலுகையில் லாக்துன் சந்தா, இரோஸ் நௌ சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த சலுகை பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 1999 சலுகை 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஒடிடி பலன்கள் சேர்த்து வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகையில் 60 நாட்களுக்கான லாக்துன் சந்தா வழங்கப்படுகிறது.

இத்துடன் இரோஸ் நௌ சேவைக்கான சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் ஒரு வருடத்திற்கான லாக்துன் சந்தா, 60 நாட்களுக்கு இரோஸ் நௌ சந்தா வழங்கப்பட்டு வந்தது. இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ. 1999 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
வி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி டேட்டா வழங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த டேட்டா ரூ. 1499 பிரீபெயிட் சலுகையுடன் வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா சேர்க்கும் பட்சத்தில் வி ரூ. 1499 பிரீபெயிட் சலுகையில் மொத்தம் 74 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 365 நாட்களுக்கு 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
முன்னதாக வி ரூ. 1499 சலுகையில் மொத்தம் 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் வி ரூ. 1499 பிரீபெயிட் சலுகையில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வி செயலி மூலம் வழங்கப்படுகிறது. சிலருக்கு கூடுதல் டேட்டா எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2021 முதல் சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது. அதாவது பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.
ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்கள் புதிய ஒஎஸ் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் இது பலருக்கு கவலை தரும் செய்தியாக இருக்காது. எனினும், பழைய ஒஎஸ் கொண்ட சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய ஒஎஸ் கொண்ட சாதனங்களுக்கு அப்டேட் செய்வது நல்லது.
இதன்படி ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6எஸ் உள்ளிட்ட மாடல்களில் இன்னும் சில தினங்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது. இந்த மொபைல்களை பயன்படுத்துவோர் தங்களின் மொபைல் சாதனத்தை அப்டேட் செய்வது நல்லது.
ஹூவாமி நிறுவனத்தின் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் மசெய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.55 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள், 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அணிந்திருப்பவரின் உடல்நலம் மற்றும் இதய ஆரோக்கம் பற்றிய விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்கும் வசதி கொண்டிருக்கிறது. அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் 70-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ப்ளூடூத் 5.0, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இணைந்து இயங்கும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஹூவாமியின் பயோ டிராக்கர், 2 பிபிஜி சென்சார்கள், கைரோஸ்கோப் சென்சார், GPS+GLONASS, 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல் போன்ற வசதிகளும், 220 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் நார்மல் மோட் பயன்பாட்டில் அதிகபட்சம் 21 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்பிட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
டைவா நிறுவனத்தின் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவை சேர்ந்த மின்சாதன உற்பத்தியாளரான டைவா 43 இன்ச் அளவில் D43QFS ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவியில் புல் ஹெச்டி ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் பில்ட் இன், தி பிக் வால் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள பில்ட் இன் அலெக்சா மூலம் பயனர்கள் புதிய திரைப்படங்கள் அல்லது நினைவூட்டல் போன்ற அம்சங்களை குரல் வழியே இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டு அலெக்சா சார்ந்த ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்கலாம்.

புதிய டைவா ஸ்மார்ட் டிவி ஏ53 குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 8 இயங்குதளம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் தி பிக் வால் மென்பொருள் வழங்கப்பட்டு உள்ளது. இது டைவா நிறுவனத்தின் சொந்த யுஐ ஆகும்.
இந்த யுஐ 25000000+க்கும் அதிக மணி நேரங்களுக்கான தரவுகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இரோஸ் நௌ, வூட், அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இருந்து வழங்குகிறது. 43 இன்ச் புல் ஹெச்டி பேனல் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் டைவா D43QFS ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 24,490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை அனைத்து சில்லறை விற்பனை மையங்களிலும் நடைபெறுகிறது.






