என் மலர்tooltip icon

    கணினி

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் பைபர் சலுகை கட்டண முறையில் புது வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பாரத் பைபர் சலுகைகளின் கட்டணத்தை வருடாந்திர அடிப்படையில் செலுத்தும் வசதியை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வசதி தற்சமயம் ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 போன்ற மாதாந்திர சலுகைகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத் பைபர் ரூ. 449 சலுகையில் வருடாந்திர கட்டண முறை வழங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய கட்டண முறை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    முன்னதாக இவை மாதாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. தற்சமயம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது 12 மாதங்களுக்கு சேர்த்தும் கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு ஒரே தவணையில் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது.

    தற்சமயம் இந்த கட்டண முறை பற்றிய விவரங்கள் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெறவில்லை. முன்னதாக பாரத் பைபர் சலுகைகள் விளம்பர நோக்கில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. தற்சமயம் இவற்றின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
    வு நிறுவனத்தின் புதிய சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    வு நிறுவனம் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களை சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவி மாடல்களில் 4K UHD டிஸ்ப்ளே மற்றும் ஹெச்டிஆர்10, டால்பி விஷன் மற்றும் MEMC வசதி வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐஆர் பிளஸ் ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இந்த ரிமோட் யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் பிளே சேவைகளுக்கான ஹாட்கீ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஸ்போர்ட்ஸ் சவுண்ட் மோட் வசதிகளை கொண்டுள்ளது.

     வு சினிமா டிவி ஆக்ஷன்

    இரண்டு வு டிவி மாடல்களிலும் 100 வாட் சவுண்ட்பார் மற்றும் 6 ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை டைட்டானியம் கிரே டோன் மற்றும் பெசல்-லெஸ் ஸ்கிரீன், பேப்ரிக் பினிஷ் கொண்டிருக்கிறது. 

    வு சினிமா டிவி ஆக்ஷன் 55 இன்ச் மாடல் விலை ரூ. 49,999 என்றும் 65 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவி மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் 22 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் புதிய இயர்பட்ஸ் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் கொண்டிருப்பதால் மேம்பட்ட வாய்ஸ் காலிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் வயர்லெஸ் மியூசிக் தரத்தையும் சிறப்பாக வழங்குகிறது. இரு இயர்பட்களை ஒன்றாகவும், ஒரு இயர்பட் மட்டும் என இருவிதங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

     ஸ்கல்கேண்டி ஜிப்

    ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் 40 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கிறது. வால்யூம், அழைப்புகள், வாய்ஸ் அசிஸ்டண்ட், பாடல்களை மாற்றுவதற்கு என அனைத்து கண்ட்ரோல்களும் போனினை கையில் எடுக்காமலேயே இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டு இருப்பதால் இந்த இயர்பட்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் பயன்படுத்த முடியும். ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 16 மணி நேர பேக்கப் கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பட்ஸ் இசட், ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மற்றும் ரியல்மி பட்ஸ் கியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது புளூ மற்றும் ட்ரூ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் கஸ்டம் அகௌஸ்டிக் டிசைன், மேம்பட்ட மென்பொருள் கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டிருக்கிறது. இது நாய்ஸ் கேன்சலிங் வசதியை நான்குவித மோட்களில் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாரு இசையின் ஒலியை செட் செய்து கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் அனைத்து சூழல்களிலும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     ஒப்போ என்கோ எக்ஸ்

    மேலும் இந்த இயர்பட்களில் ஒப்போ DBEE 3.0 சவுண்ட் சிஸ்டம் மற்றும் LHDC போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சீரான ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. 

    இவைதவிர ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் வசதி, டூயல் மைக்ரோபோன்,  47m ப்ளூடூத் லோ-லேடென்சி டூயல் டிரான்ஸ்மிஷன், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும்,  4 மணி நேர பேக்கப் வழங்கும் 44 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 மணி நேர பேக்கப் வழங்கும் வகையில் சார்ஜிங் கேசில் 535 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ என்கோ எக்ஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    அதிக பயனர்களால் நீண்ட நேரம் முடங்கியிருந்த சிக்னல் ஆப் பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.


    சிக்னல் செயலி பல மணி இடையூறுக்கு பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் புது அறிவிப்பு காரணமாக பல லட்சம் பயனர்கள் திடீரென சிக்னல் செயலிக்கு மாறியதால் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதாக சிக்னல் தெரிவித்தது.

    வாட்ஸ்அப் தனது பயனர் விவரங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து சிக்னல் செயலி அதிக டவுன்லோட்களை பெற்றது. 

    தற்சமயம் இடையூறுக்கு பின் செயலி மீண்டும் செயல்பட துவங்கி இருந்தாலும், பலர் சேவை சீராக இயங்கவில்லை என தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த சிக்னல், அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் 2021 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து தற்சமயம் இந்த வயர்லெஸ் இயர்போனிற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. 

    இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 15,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்போனுக்கான முன்பதிவு சாம்சங் பிரத்யேக ஸ்டோர்கள், சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது. இதன் விற்பனை ஜனவரி 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

     கேலக்ஸி பட்ஸ் ப்ரோ

    புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 3699 விலையுள்ள வயர்லெஸ் பவர்பேங்க் யு1200 மாடலை ரூ. 499 விலைக்கு பெற முடியும். புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இயர்போன் பிளாக், சில்வர் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் டைனமிக், பேலன்ஸ்டு சவுண்ட் வழங்க ஏதுவாக இருவழி ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி சிறப்பாக செயல்பட இது உதவுகிறது. இந்த இயர்பட்ஸ் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட்திங்ஸ் சேவை மூலம் எளிதில் இயர்பட்களை கண்டுபிடிக்கும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. 
    ஒரே சமயத்தில் அதிகளவு பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கிய மெசேஜிங் ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக திடீரென பிரபலமான சிக்னல் ஆப் உலகளவில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கி உள்ளது. நேற்று (ஜனவரி 15) முதல் முடங்கி இருக்கும் சிக்னல் செயலியை சரிசெய்யும் பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    விரைவில் சிக்னல் செயலி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறது. ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் திடீரென சிக்னல் செயலியை பயன்படுத்த துவங்கியதே சேவை முடங்க காரணம் ஆகும்.

    தற்சமயம் இந்த குறைபாட்டை சரி செய்து சேவை மீண்டும் சீராக இயங்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்னல் செயலி சிக்னல் பவுன்டேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். கூகுள் பிளே ஸ்டோரில் சிக்னல் செயலியை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 
    அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவையை ரூ. 89 மாதாந்திர கட்டணத்தில் வழங்குகிறது.


    அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவையின் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சேவை ஒருவர் பயன்படுத்தும் வகையிலான மொபைல்-ஒன்லி சலுகை ஆகும். இந்த சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 89 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    புதிய அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவை எஸ்டி தர வீடியோ ஸ்டிரீமிங் வசதியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. புதிய சேவை ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் நிறைந்த இந்திய சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்

    அமேசானின் புதிய சலுகை நெட்ப்ளிக்ஸ் மொபைல் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் மொபைல் சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 199 ஆகும். அமேசான் புது சலுகை குறைந்த விலையில் கிடைப்பதோடு, இதனை செயல்படுத்த அமேசான் நிறுவனம் ஏர்டெலுடன் இணைந்துள்ளது.

    அதன்படி ஏர்டெல் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் மூலம் ஏர்டெல் தேங்ஸ் செயலி வாயிலாக அமேசானில் சைன்-இன் செய்தால் 30 நாட்களுக்கு இலவசமாக பிரைம் வீடியோ மொபைல் சேவையை பெற முடியும்.

    இலவச சந்தா நிறைவுற்றதும் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனிற்கு ரூ. 89 செலித்த வேண்டும். பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ரூ. 89 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்குகிறது.  

    கூல்பேட் நிறுவனத்தின் புதிய கூல் பேஸ் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    கூல்பேட் நிறுவனம் இந்திய சந்தையின் ஆடியோ அக்சஸரி பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கூல் பேஸ் பட்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

    இந்த இயர்பட்சில் டீப் பேஸ் டிரைவர்கள், ப்ளூடூத் 5, டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூல் பேஸ் பட்ஸ் மாடலில் 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை சிறப்பான பேஸ் மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. 

     கூல் பேஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

    மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது சீரான மற்றும் வேகமான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. எடை குறைந்த டால்பின் டிசைன் 2.0 கொண்டிருக்கும் கூல் பேஸ் பட்ஸ் 49 கிராம் எடை கொண்டிருக்கிறது. 

    இதன் சார்ஜிங் கேஸ் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பேட்டரி அளவை காண்பிக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன.

    இவை 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்ஸ் 20 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த இயர்பட்ஸ் குவிக் சார்ஜ் வசதி கொண்டிருக்கிறது. இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

    புதிய கூல்பேட் கூல் பேஸ் பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது.


    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதோடு, பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது. 

     வாட்ஸ்அப்

    - வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.

    - குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.

    - வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.

    - வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.

    - வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.

    - குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    - பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.

    இவ்வாறு வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

    தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெக்டரத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் மும்பை உள்பட 20 வட்டாரங்களில் பயன்படுத்தி வருகிறது. எனினும், இந்த சேவை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் வழங்கப்படவில்லை.

     கோப்புப்படம்

    முன்னதாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் வட்டாரங்களில் 850 MHz-இல் 5 MHz மற்றும் 1800 MHz-இல் 10 MHz ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்பெக்ட்ரம் 2040 வரை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 900 MHz மற்றும் 1800 MHz பயன்படுத்தி 2ஜி சேவைகளை வழங்கி வருகிறது.

    தற்போதைய  தகவல்களின் படி நோக்கியா, எரிக்சன், தேஜஸ் நெட்வொர்க், டிசிஎஸ், டெக் மஹிந்திரா என பல்வேறு நிறுவனங்கள் 4ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றிய கேள்விக்கு மத்திய அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது.


    பப்ஜி மொபைல் மீண்டும் வெளியாகும் என அந்நிறுவனம் வெளியிட்ட டீசர், இந்திய பயனர்களிடையே கேமின் மறு வெளியீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இது எப்போது வெளியாகும் என்ற தகவல் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. 

    இந்நிலையில், இந்த கேமின் இந்திய வெளியீடு பற்றி பப்ஜி மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

     பப்ஜி மொபைல்

    இதுகுறித்து தனியார் நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு,` மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பப்ஜி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை' என பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு பப்ஜி மொபைல் உள்பட 117 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்ததோடு அவற்றை முடக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பப்ஜி மொபைல் இந்திய வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பப்ஜி நிறுவனம் மீண்டும் இந்தியாவில் இந்த கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எனினும், தற்போதைய மத்திய அமைச்சகத்தின் பதில் மற்றும் முந்தைய பதில்களில் இதன் வெளியீடை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இடம்பெறவில்லை. 

    ×