என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் உடன் வரலாம்.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஒப்போ K13 Turbo சீரிஸ் வருகிற 21-ந்தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சமூக வலைதள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புடன், புதிய ஸ்மார்ட்போன்களின் வெப்பத்தை கட்டுப்படுத்த பிரைமரி கேமராவின் கீழ் கூலிங் ஃபேன் வழங்கப்படலாம் என்பதைக் காட்டும் விளம்பர வீடியோவையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன் PLE110 என்ற மாடல் எண்ணுடன் கீக்பென்ச் வலைத்தளத்திலும் ஸ்மார்ட்போன் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் Pro அல்லாத வேரியண்ட் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 பிராசஸர் கொண்டிருக்கும் என்று முன்பு கூறப்பட்டது. அதே நேரத்தில் ப்ரோ வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட் உடன் வரலாம்.

    ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒப்போ, சீன சமூக வலைதளமான வெய்போவில், வருகிற 21 ஆம் தேதி ஒப்போ K13 Turbo சீரிசை வெளியிடுவதாகப் பதிவிட்டுள்ளது. இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அதன் உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

    வீடியோவின் படி, ஒப்போ K13 Turbo சீரிசில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த பிரைமரி கேமராவின் கீழ் RGB விளக்குகள் பொருத்தப்பட்ட டர்போ விசிறி இருக்கும்.

    ஒப்போK13 Tubro சீரிஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    PLE110 என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் சமீபத்தில் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டது . இது குறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ K13 Turbo சீரிசில் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் சிங்கில்-கோர் செயல்திறனில் 2176 மதிப்பெண்களையும் மல்டி-கோர் செயல்திறனில் 6618 மதிப்பெண்களையும் பெற்றது.

    மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 16GB RAM உடன் இணைக்கப்பட்ட ARM ARMv8 ஆக்டா-கோர் SoC உடன் சோதிக்கப்பட்டது. சமீபத்தில், ஒப்போ K13 Turbo சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்தன.

    ஒப்போ K13 Turbo ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 பிராசஸரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒப்போK13 Turbo Pro ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s Gen 4 சிப்செட்டுடன் வரும் என்று தெரிகிறது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களும் 50MP பிரைமரி கேமரா, 2MP சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களும் 16MP செல்ஃபி கேமராவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல.
    • கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 மாடல் ஜூலை 15 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவனம் இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனின் அனுபவத்தை முன்கூட்டியே வழங்கும்.

    இதுதவிர அதன் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முன்னதாக ஸ்மார்ட்போனை வாங்கவும் வாய்ப்பளிக்கும். பெங்களூருவில் நடைபெற உள்ள நிகழ்வில் நத்திங் போன் 3 மாடலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெட்ஃபோன் 1 மாடலை இலவசமாக பெற முடியும்.

    சலுகை விவரங்கள்:

    ஜூலை 12-ம் தேதி (நாளை) மாலை 7 மணிக்கு பெங்களூருவின் யுபி சிட்டியில் நத்திங் போன் 3 மாடலுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக டிராப் நிகழ்வு நடைபெற இருக்கிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நுழைவு வழங்கப்படும்.

    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு, அதன் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கவும், அதை நேரடியாகப் பயன்படுத்தவும் விருந்தினர்களுக்கு நத்திங் போன் 3 இந்தியா டிராப் நிகழ்வு வாய்ப்பளிக்கும். இதுமட்டுமின்றி அவர்கள் ஒரு போட்டியிலும் பங்கேற்கலாம்.

    அதைத் தொடர்ந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் ரூ. 21,999 மதிப்புள்ள நத்திங் ஹெட்ஃபோன் 1 ஐ வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நிகழ்வின் மிகப்பெரிய சிறப்பம்சம் நத்திங் போன் 3 கிடைப்பதுதான்.

    இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விற்பனைக்கு வருவதற்கு முன்பு விருந்தினர்கள் இந்த போனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இது காத்திருப்புப் பட்டியல்களுக்குப் பதிவு செய்வதையோ அல்லது கைபேசியை முன்கூட்டியே ஆர்டர் செய்வதையோ நீக்குகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுக்கான டிராப் நிகழ்வை நடத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நத்திங் போன் 2a மாடலுக்கும் டிராப் சலுகையை நத்திங் அறிவித்தது.

    கடந்த மார்ச் மாதத்தில் நத்திங் போன் 3a சீரிசுக்கான வெளியீட்டு நிகழ்வையும் நத்திங் நடத்தியது. உலகில் உள்ள வேறு எவருக்கும் முன்பே நத்திங் கம்யூனிட்டியை சேர்ந்தவர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க இந்த டிராப் நிகழ்வு அழைப்பு விடுத்தது.

    • இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்தியாவின் விண்வெளித் துறையைத் தாராளமயமாக்குவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும் உதவும்

    எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென்1 (Gen1) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.

    ஜூலை 8 முதல் தொடங்கும் இந்த 5 ஆண்டு கால அனுமதி, இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை கொண்டு செல்லும் ஒரு முக்கிய படியாகும். இருப்பினும், அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளையும் பெற்ற பின்னரே ஸ்டார்லிங்க் சேவைகள் தொடங்கும்.

    இது, இந்தியாவின் விண்வெளித் துறையைத் தாராளமயமாக்குவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
    • வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    விவோ V60 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவின் SIRIM சான்றிதழ் வலைத்தளத்திலும் TUV SUD தளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன.

    இவை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ V50 மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30 போன்ற வன்பொருள் அம்சங்களுடன் இது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

    இதுவரை அறிவிக்கப்படாத விவோ V60, SIRIM மற்றும் TUV வலைத்தளங்களில் V2511 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக Xpertpick தெரிவித்துள்ளது . SIRIM சான்றிதழ் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் TUV பட்டியல் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது.

    இந்த சான்றிதழ் வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் தோற்றம், விவோ V60 விரைவில் ஆசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதன் வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    கடந்த டிசம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகமான விவோ S20-இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ V50 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையை பின்பற்றி, வரவிருக்கும் விவோ V60 ஸ்மார்ட்போன் மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ S30 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5K (1,260×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸரில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.

    • பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் புதிய செயலி தகவல் தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்.

    எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் ஜாக் டோர்சி. இவர் 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    பிட்சாட் செயலி இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

    பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகள், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

    இதுதொடர்பாக ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    • டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.
    • டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் டெக்னோ போவா 7 5ஜி மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி மாடல்கள் அடங்கும். இவை மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஜிபி ரேம், 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளன.

    இரு ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இவற்ரின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-பங்ஷனல் டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆகும். இவை பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் "Ella AI" உடன் வருகிறது. புதிய போவா 7 5ஜி சீரிஸ் 4x4 MIMO மற்றும் VOWiFi டூயல் பாஸ் போன்ற கனெக்டிவிட்டி மேம்பாடுகளை ஆதரிக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி அம்சங்கள்:-

    டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K (1,224×2,720) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. புதிய டெக்னோ போவா 7 5ஜி மாடலில் 6.78-இன்ச் Full-HD+ (1,080×2,460 பிக்சல்கள்) LTPS IPS பேனல் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி மாடல்களில் 4nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இத்துடன் 256 ஜிபி UFS 2.2 ரக ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. இதன் ப்ரோ வேரியண்ட் 8 ஜிபி LPDDR5 கொண்டுள்ளது. அதே வேளையில், பேஸ் மாடலில் 8 ஜிபி LPDDR4 RAM உடன் வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைஓஎஸ் 15 உடன் வருகின்றன. மேலும் இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் Ella AI சாட்போட்டை வழங்குகின்றன.

    புகைப்படங்கள் எடுக்க டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு லைட் சென்சார் கொண்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் 64MP சோனி IMX682 பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 8MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. இதன் ப்ரோ மாடல் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் வழங்குகிறது.

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி விலை, கிடைக்கும் தன்மை

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி விலை 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் விலை ரூ. 12,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கீக் பிளாக், மேஜிக் சில்வர் மற்றும் ஓயாசிஸ் கிரீன் வண்ணங்களில் வருகிறது.

    இதற்கிடையில், டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு உள்ளமைவுகளுக்கு முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. இது டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூலை 10 முதல் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியது.

    • ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும்.
    • ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போன் முதன்முதலில் இந்தியாவில் டிசம்பர் 2024 இல் லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, மூன்றாவதாக மற்றொரு புதிய நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிறத்தைத் தவிர, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸருடன் பிரத்யேக கேமிங் சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    இதுதவிர ஐக 13 ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 2K LTPO AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் அடங்கிய ரியர் கேமரா யூனிட் உள்ளது. புதிய வண்ண மாறுபாடு இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் iQOO 13 விலை, வண்ண விருப்பங்கள்

    ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும். புதிய ஏஸ் கிரீன் நிற ஐகூ 13 ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 54,999 மற்றும் ரூ. 59,999 ஆகும். இது ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வேரியண்ட்களுக்கானது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ண விருப்பங்கள் உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய கிரீன் நிற வேரியண்ட் ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு அமேசான் மற்றும் ஐகூ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐகூ 13 அம்சங்கள்

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் 2K (1,440x3,186 பிக்சல்கள்) LTPO AMOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,800nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் பிரத்யேக இன்-ஹவுஸ் கேமிங் Q2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 உடன் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க ஐகூ 13 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் பின்புறத்தில் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32-மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரி உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குவதற்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இது 8.13 மிமீ தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொண்டது.

    • புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன் ஃபுளோயிங் சில்வர், சில்க் புளூ மற்றும் சூட் டைட்டானியம் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

    ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது ரியல்மி 15 சீரிசை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது. இந்த சீரிசில் ரியல்மி 15 மற்றும் ரியல்மி 15 ப்ரோ ஆகியவை அடங்கும். அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் ரியல்மி 15T ஸ்மார்ட்போனையும் ரியல்மி நிறுவனம் நாட்டில் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு, அதன் வண்ண விருப்பங்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் குறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில், ரியல்மி 15T ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் RMX5111 IN என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது .

    குறிப்பாக, ரியல்மி 15 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.



    புதிய ரியல்மி15T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஃபுளோயிங் சில்வர், சில்க் புளூ மற்றும் சூட் டைட்டானியம் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    குறிப்பிடத்தக்க வகையில், ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 17,999 மற்றும் ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது. இது லைட்னிங் பர்பிள், அப்சிடியன் பிளாக் மற்றும் சர்ஃப் கிரீன் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 45 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6,000mAh பேட்டரி, 6.67-இன்ச் 120Hz Full-HD+ AMOLED ஸ்கிரீன் மற்றும் IP69 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP டூயல் கேமரா சிஸ்டம், 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருத்கிறது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    • கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.

    கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    • ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.
    • ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும்.

    ஹானர் மேஜிக் V5 ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறது. சமீபத்திய சமூக வலைதள பதிவில், ஹானர் பிரான்டு வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 6,100mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெய்போவில் வெளியாகி இருக்கும் புதிய டீசரில், ஹானர் மேஜிக் V5 மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் மாடல் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியது. கடந்த ஆண்டு ஹானர் மேஜிக் V3 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருந்தது.

    பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் தவிர, ஹானர் மேஜிக் V5 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது. இதில் 6,100mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்- டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும். இது 12GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும்.

    ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும். இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது. மேலும், இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
    • மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

    மைக்ரோசாப்ட்டின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 69 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

    ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.

    டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.

    இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.

    முன்னதாக மே மாதம், மைக்ரோசாப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த மாத தொடக்கத்திலும் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    • ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
    • ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 உடனடி கேஷ்பேக் பெறலாம். அதே நேரத்தில் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம்.

    தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறும் அமேசான் பிரைம் டே 2025 சேலில், ஐபோன் 16 விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலுக்கு இதேபோன்ற தள்ளுபடி அறிவிக்கப்படலாம்.

    ஐபோன் 16 புதிய விலை:

    இந்தியாவில் ஐபோன் 16 தற்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் ரூ.72,400க்கு கிடைக்கிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.79,900ஐ விடக் குறைவு தான். இருப்பினும், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.68,400 ஆகக் குறைகிறது.

    உங்களிடம் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்து அதனை எக்சேஞ்ச் செய்ய விரும்பினால், ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம். இந்தியாவில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

    ஐபோன் 16 அம்சங்கள்:

    செப்டம்பர் 2024 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A18 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இரட்டை பின்புற கேமராக்கள், 48MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா உள்ளன.

    ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ஐபோன் 15 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. இந்த ஐபோன் ஐஓஎஸ் 18 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இது 3,561mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் யுஎஸ்பி டைப்-சி கேபிள் அல்லது மேக்சேஃப் வழியாக சார்ஜ் செய்யலாம்.

    ×