என் மலர்
மொபைல்ஸ்

ஐபோனுக்கு வேற லெவல் விலை குறைப்பு மற்றும் ஆஃபர்கள் அறிவிப்பு
- ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
- ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 16 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 உடனடி கேஷ்பேக் பெறலாம். அதே நேரத்தில் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம்.
தற்போதைய விலை குறைப்பு மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறும் அமேசான் பிரைம் டே 2025 சேலில், ஐபோன் 16 விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலுக்கு இதேபோன்ற தள்ளுபடி அறிவிக்கப்படலாம்.
ஐபோன் 16 புதிய விலை:
இந்தியாவில் ஐபோன் 16 தற்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் ரூ.72,400க்கு கிடைக்கிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.79,900ஐ விடக் குறைவு தான். இருப்பினும், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.4,000 கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.68,400 ஆகக் குறைகிறது.
உங்களிடம் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்து அதனை எக்சேஞ்ச் செய்ய விரும்பினால், ஐபோனின் விலையை மேலும் குறைக்கலாம். இந்தியாவில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பிளாக், பின்க், டீல், அல்ட்ராமரைன் மற்றும் வைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஐபோன் 16 அம்சங்கள்:
செப்டம்பர் 2024 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A18 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் இரட்டை பின்புற கேமராக்கள், 48MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா உள்ளன.
ஐபோன் 16 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR (OLED) டிஸ்ப்ளே 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் ஐபோன் 15 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. இந்த ஐபோன் ஐஓஎஸ் 18 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இது 3,561mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் யுஎஸ்பி டைப்-சி கேபிள் அல்லது மேக்சேஃப் வழியாக சார்ஜ் செய்யலாம்.






