என் மலர்
மொபைல்ஸ்

12 ஜிபி ரேம், அதிவேக பாஸ்ட் சார்ஜிங் வசதி.. பட்ஜெட் பிரிவில் வெளியாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்
- புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஸ்மார்ட்போன் ஃபுளோயிங் சில்வர், சில்க் புளூ மற்றும் சூட் டைட்டானியம் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது ரியல்மி 15 சீரிசை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது. இந்த சீரிசில் ரியல்மி 15 மற்றும் ரியல்மி 15 ப்ரோ ஆகியவை அடங்கும். அறிமுகத்திற்கு முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் ரியல்மி 15T ஸ்மார்ட்போனையும் ரியல்மி நிறுவனம் நாட்டில் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு, அதன் வண்ண விருப்பங்கள் போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் குறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில், ரியல்மி 15T ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் RMX5111 IN என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது .
குறிப்பாக, ரியல்மி 15 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
புதிய ரியல்மி15T ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஃபுளோயிங் சில்வர், சில்க் புளூ மற்றும் சூட் டைட்டானியம் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 17,999 மற்றும் ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது. இது லைட்னிங் பர்பிள், அப்சிடியன் பிளாக் மற்றும் சர்ஃப் கிரீன் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி 14T 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 45 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6,000mAh பேட்டரி, 6.67-இன்ச் 120Hz Full-HD+ AMOLED ஸ்கிரீன் மற்றும் IP69 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
புகைப்படங்கள் எடுக்க 50MP டூயல் கேமரா சிஸ்டம், 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருத்கிறது. பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.