search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வாடகை"

    • ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது.
    • முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது.

    பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.

    புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    "ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார்.

    சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது.

    வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
    • குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் ஜி.எஸ்.டி. கிடையாது.

    புதுடெல்லி :

    கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையே, வீட்டு வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதாக நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பதிவில், ''அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே, ''இனிமேல் வீட்டு வாடகை 18 சதவீதம் உயரும். ஏனென்றால், மோடி அரசு வீட்டு வாடகை மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது.

    விலைவாசி உயர்வுக்கிடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.

    இந்தநிலையில், இக்குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி. கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.

    மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால்கூட ஜி.எஸ்.டி. கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×