search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத் திறனாளி"

    • மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.
    • முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.

    முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், வாலாஜாபாத் மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நந்தாபாய், அசோக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி நடைபெறுகிறது.
    • 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி திருக்கோவிலூர் வட்டார வள மையத்திலும், 25- ந்தேதி ரிஷிவந்தியம் வட்டார வள மையத்திலும், 29- ந்தேதி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30- ந்தேதி திருநாவலூர் வட்டார வள மையத்திலும், 31- ந்தேதி உளுந்தூர் பேட்டை வட்டார வள மையத்திலும், செப்டம்பர் 1- ந் தேதி சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் 5- ந் தேதி கல்வராயன் மலை கரியலூர் டேனிஸ் மிஷன் ஆரம்பபள்ளியிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

    இவ்வாறு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதால் வியாழக்கிழமை தோறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் நடைபெறும். முகாம் இன்று மற்றும் 31-ந்தேதி 2 நாட்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் செப்டம்பர் மாதம் 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் இந்த சிறப்பு முகாமில் இது நாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    • வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இன்று 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த முகாமில் ஏற்க னவே போலீஸ் நிலை யத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது மக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

    மேலும் மனு அளிப்ப தற்காக மாற்றுத்திறனாளி களும் வந்திருந்தனர். அவர்களை போலீசார் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்று லிப்ட் மூலமாக கூட்ட ரங்கிற்கு கொண்டு சென்ற னர். அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கினார். அதோடு அவர்கள் அருகில் அமர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    • மக்கள் சேவையாற்றி மாற்றுத்திறனாளி ஒருவர் முத்திரை பதித்து வருகிறார்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு ‘சல்யூட்’ செய்வோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகராஜன் - அழகம்மாள் மூத்த மகன் ஹரிகரசுதன். இவர் பிறந்து 18 மாதங்களில் இளம் பிள்ளைவாதம் பாதிப்பு ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முழுமையாக செயலிழந்து விட்டது. இதன் பின் அவரது தாய், ஹரிகரசுதனை மருத்துவமனைக்கு நடையாய் நடந்து அழைத்து சென்றும் குணப்படுத்த முடியவில்லை. 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டது. மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வேதனையுற்றனர். ஆனால் மனம் தளரவில்லை. மகன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

    இது குறித்து ஹரிகரசுதன் கூறியதாவது:-

    உன்னால் எல்லோரையும் போல வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனது தாய் ஏற்படுத்தி வளர்த்தார். கிராம மக்களின் ஆதரவினால் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

    மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத நான் உள்ளாட்சி பிரதிநிதியாக வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொடுத்துள்ளேன். என்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து, என்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சிறு தொழில் தொடங்க ஊக்கமளித்தார். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் முதலீட்டில் காரசேவு, மிக்சர் பாக்கெட் போன்ற நொறுக்கு தீனிகளை எடுத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் நீண்ட தூரம் வரை சென்று விற்பனை செய்து வருகிறேன். உழைப்பே நம்பிக்கை என்று தாரக மந்திரத்தில் வாழ்ந்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கத்தில் மாவட்ட பொரு ளாளராக இருந்து வருவதுடன் மாற்றுத் திறனாளிகள் அடிப்படை உரிமைகளுக்காக டெல்லி, சென்னை என 70க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். பாடல் பாட தெரியும் என்பதால் தனியார் தொலைக் காட்சியில் நடைபெற்ற போட்டி யிலும் பங்கேற்றுள்ளேன்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊனம் என்று நினைத்து ஒதுங்கி முடங்கி விடாமல், தன்னம்பிக்கையை தளர விடாமல் மக்கள் சேவையாற்றி பல்வேறு முத்திரைகளை பதித்து வரும் இவரை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு 'சல்யூட்' செய்வோம்.

    • கலெக்டர் அரவிந்த் தகவல்
    • மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக பல் வேறு நலத்திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வரு கிறது. குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட் டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் மற்றும் தண்டு வட மரபு நோய் உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட் டோர் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கடந்த அக்டோபர் மாதம் வரை ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 48 வழங்கப்பட்டுள்ளது. அதிக உதவி தேவைப் படும் மாற்றுத்திறனாளிகள் தங்களை பராமரித்து கொள்ள ஏதுவாக ரூ.1,000-ம் வீதம் 54 பயனாளி களுக்கு ரூ.54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான திருமண நிதியுதவி திட் டத்தின் கீழ் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயி ரம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 25 பய னாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 75 மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்கா லிகள் 13 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 87 ஆயி ரம் மதிப்பிலும், வாய்பேச இயலாதசெவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பார்வையற் றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசிகள் 97 பயனா ளிகளுக்கு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விலையில்லா இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 450 மதிப்பிலும், சக்கர நாற்காலி 8 பயனாளிகளுக்கும், சி.பி.சக்கர நாற்காலி 12 பயனாளிகளுக்கும், ஊன்றுகோல் 20 பயனாளிகளுக்கும், பிரைலி கைகெடிகாரம் 8 பயனாளிகளுக்கும், மடக்கு குச்சி 'மற்றும் கண் கண்ணாடி 30 பயனாளிகளுக்கும், காலிபர் 11 பயனாளிகளுக்கும், காதொலி கருவி 40 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இலவச பஸ் பயண அட்டை 2029 மாற்றுத் திறனாளிகளுக்கும், ஏப்ரல் 2022 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 1337 நபர்களுக்கும், மத்திய அரசின் யு.டி.ஐ.டி. அட்டை 10 ஆயிரத்து 53 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×