search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர் தாக்குதல்"

    • வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.
    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முக பிரியன் (வயது 28).

    இவர் நேற்று பகல் முழுவதும் சேலாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மாலையில் பணியை முடித்து விட்டு, அங்கிருந்து குன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. இதனை பார்த்த சண்முகபிரியன், தனது மோட்டார் சைக்கிளை திருப்பி, வேகமாக சென்ற காரினை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    காரில் இருந்தவரிடம் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை வேகமாக இயக்கி செல்கிறீர்கள் என கேட்டார்.

    ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சண்முகபிரியன் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலாஸ் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(38) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூ மற்றும் பழக்கடை நடத்தி வந்துள்ளார்.

    மேலும் இவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்துல் காதர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார்.
    • மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

    தருமபுரி:

    தருமபுரி போக்குவரத்து காவல் பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தங்கமணி. இவர் சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி ரெயில்வே நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி, பார்த்து செல்லுமாறு தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளில் திட்டி போலீஸ்காரரை தாக்கியுள்ளார். இதில் தங்கமணிக்கு லேசான காயம் ஏற்பட்டு சீருடை கிழிந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அருகேயுள்ள எ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த பழனியப்பன் மகன் முனியப்பன் (வயது40) என்பதும், இவர் சென்டரிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை கைது செய்து முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சில வடமாநில தொழிலாளர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இங்கு நேற்று இரவு ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸ்காரர் ரகுபதி சென்று அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.

    மேலும் இதுபற்றி விசாரிக்க வந்த மேலும் 5 போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் போலீஸ்காரரின் பைக் மீது மோதுவது போன்று மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.
    • 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    சேலம்:

    அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அசோக் (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்து கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக வந்தவர்கள் போலீஸ்காரரின் பைக் மீது மோதுவது போன்று மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.

    இதையடுத்து போலீஸ்காரர் அவர்களை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ்காரர் அசோக்கை தாக்கியதில் அவரது கை எலும்பு விரிசல் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் போலீஸ்காரரை தாக்கியது லைன்மேடு பகுதியை சேர்ந்த சையது முஸ்தபா மகன் அப்துல் ரகுமான் (20), ஷான்பாஷா மகன் ரியாசத் பாஷா (20), அஸ்ரப் அலி மகன் அஸ்லாம் அலி (20), ஷான் பாஷா மகன் ரிஹான் பாஷா (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×