search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஸ்ஸி ஆனந்த்"

    • விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்
    • நேற்று முன்தினம் விஜய் கலந்து கொண்ட லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது

    விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று, புஸ்ஸி ஆனந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

    விஜய் சினிமாவை கடந்து விரைவில் அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட, அனைத்து நிகழ்ச்சிகளையும் புஸ்ஸி ஆனந்த் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்றுமுன்தினம் நடந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சியைத்தொடர்ந்து, ஏற்பட்ட அதிக சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நேற்றுமுன்தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜயுடன் நடிகர்கள் அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.



    விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

    விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.



    மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


    கோப்பு படம்
    கோப்பு படம்

    வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×