search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேம் குமார்"

    • இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார்.

    'கார்த்தியின் 27'வது படமான இந்த படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    கார்த்தி 27 படத்தின் பூஜை வீடியோவை பட நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், பூஜை வீடியோவை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    • நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.



    • இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர்.
    • ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் பிரேம்குமார். பேட்மிண்டன் வீரரான இவர், கடந்த 2-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை பாரா ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் பங்கேற்றார்.

    இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர். இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் இரட்டையர் ஆண்கள் பிரிவில் தினேஷ்ராஜய்யாவுடன் இணைந்து, மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

    ×