search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கங்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • நாகை மாவட்டத்தில் பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நிறுவனர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.

    இதில், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் அருள்ராஜ், பொதுச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

    திருவாரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர்கள் கார்த்தி மற்றும் வெற்றிவேல், நாகை மாவட்ட வில்வித்தை சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், பொரு ளாளர் ஸ்ரீராம், பயிற்சியாளர்கள் வீர ராகுல், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை தென்காசி மெயின்ரோட்டில் மேலமெஞ்ஞானபுரம் அருகே அமைந்துள்ள தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் நடந்த விழாவில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்களையும், பதக்கங்களையும் செயலாளர் ஜே எம். ரஷீத் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். மேலும் கிளப்பின் சார்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    செயலாளர் ஜே.எம்.ரஷீத் கூறுகையில் 9 வயது முதல் 90 வயது வரை இங்கு பயிற்சி எடுக்கலாம். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்களை உருவாக்கி வருகிறோம் என்று கூறினார். தற்பொழுது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருப்பதால் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளும், பெரியோர்களும் சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறினார்.

    விழாவில் கிளப்பின் இலஞ்சி டி.ஆர். ராஜேந்திரன், உறுப்பினர்கள் பொதிகை சில்க்ஸ் மகுது மீரான், இலஞ்சி பிச்சையா, டேலிஸ் வாட்டர் முகைதீன், மணிகண்டன், ஜேசு ரூபன், சசிகுமார், வனத்துறை மாரியப்பன், இந்தியன் ரெயில்வே தங்க மாரியப்பன், வழக்கறிஞர்கள் சிவா மற்றும் மூர்த்தி, டாக்டர் ஹாஜா, ஜெயராஜ், செல்சிட்டி பாலு மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயலாளர் ஜே.எம். ரஷீத் செய்திருந்தார்.

    • இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
    • இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.

    இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

    ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    • 29 பதக்கங்களை வென்று மேலூர் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஜூடோ சங்கம் சார்பில் காரியாபட்டி தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மினி சப் ஜூனியர் சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் மினி ஜூனியர் பிரிவில் மேலூர் ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ருகினா, லத்யஸ்ரீ, சந்தோஷ், ரஞ்சன், தயாநிதி ஆகியோர் தங்கப்பதக்கமும், ரோஹித், நிஷா, சோபியா ஆகியோர் வெள்ளி பதக்கமும் பெற்றனர். யோசினி ஸ்ரீ, கிருத்திகா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    சப் ஜூனியர் பிரிவில் கோபிகாஸ்ரீ, ஜனனி, நிஷா, நகுல், கஜேஸ்வரன், ஹரிஷ், மதுரேஸ், நிதிஷ்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர். கேடட் பிரிவில் அர்ச்சனாதேவி, பவித்ரன் ஆகியோர் தங்கம் வென்றனர்.

    ஜூனியர் பிரிவில் முரளி கிருஷ்ணன் தங்கப் பதக்கமும், சந்துரு வெள்ளி பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.சீனியர் பிரிவில் தமிழ் தேவா தங்கப்பதக்கமும்,

    மினி சப் ஜூனியர் பிரிவில் மேலூர் சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவர் போதிஸ்வரன் தங்கம் பெற்றார். கேடட் பிரிவில் மதுரை சேதுபதி பள்ளி மாணவன் சுதேசன் தங்கம் வென்றான். கேடட் பிரிவில் தனியாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் வெண்கல பதக்கமும், கேடட் பிரிவில் மேலூர் சி.இ.ஒ.ஏ.பள்ளி மாணவன் அகிலா வெள்ளி பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட ஜூடோ சங்கத் தலைவர் சாலுமான், செயலாளர் புஷ்பநாதன், பயிற்சியாளர் பிரசன்னா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருமங்கலம் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    திருமங்கலம்

    கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் திருமங்கலம் உலக ஷோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் 22 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கட்டா மற்றும் குமிட்டே பிரிவுகளில் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நந்தினி, டயானா, மனீஷா, கிருஷ்ணகிஷோர், கோகுல்பதி, கருத்திக் ஆகியோர் தங்கப்பதக்கமும், தாரணி, சஞ்சுஷிரி, தரண்கார்த்திக், பாலபிரணவ், தங்கேஸ்வரன், சூரியபிரகாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கராத்தே சம்மேளத்தின் தமிழ்நாடு பிரிவு மாநில பிரதிநிதி பால்பாண்டி, கராத்தே மாஸ்டர்கள் நவாஷ், சுபாஷ், விக்னேஷன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டினர்.

    ×