search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுஜன் சமாஜ் கட்சி"

    • சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது
    • இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்

    குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 8 வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டில், தனது எக்ஸ் பக்கத்தில் முகேஷ் தலாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வெற்றியை சூரத் தொகுதி பெற்று கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், "பாஜகவின் விருப்பத்தின் பேரில் காங்கிரஸ் வேட்பளாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஜனநாயக படுகொலை சம்பவத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்" என்று அவர் தெரிவித்தார். 

     

    • சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.
    • நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, சில மாவட்டங்களில் கட்சிப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவில் வேட்பாளர்களை அறிவித்தனர்.

    அதன்படி, சஹாரன்பூரில் மஜித் அலி, கைரானாவில் ஸ்ரீபால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி, பிஜ்னூரில் விஜயேந்திர சிங், நாகினாவில் சுரேந்திர பால் சிங், மொராதாபாத்தில் முகமது இர்பான் சைஃபி ஆகியோர் மாயாவதி தலைமையிலான கட்சி களமிறக்கியுள்ளது.

    ராம்பூரில் இருந்து ஜிஷான் கான், சம்பாலில் இருந்து ஷவுலத் அலி, அம்ரோஹாவில் இருந்து மொஸாஹித் ஹுசைன், மீரட்டில் இருந்து தேவ்ரத் தியாகி மற்றும் பாக்பத்தில் இருந்து பிரவீன் பன்சால் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    கட்சி வேட்பாளராக கவுதம் புத்த நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கியும், புலந்த்ஷாஹர் (எஸ்சி) தொகுதியில் கிரீஷ் சந்திர ஜாதவ், அயோன்லா தொகுதியில் அபித் அலி, பிலிபிட்டில் அனிஸ் அகமது கான் என்ற பூல் பாபு, ஷாஜஹான்பூரில் தோதாரம் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு வாய்ப்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், "நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது.
    • கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம்.

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அழைப்பு விடுத்த நிலையில் மாயாவதி அதை அதிரடியாக நிராகரித்தார்.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் மாயாவதி கூறுகையில், "கூட்டணி குறித்த தேவையற்ற வதந்திகளை கட்சித் தொண்டர்கள் நம்ப வேண்டாம். இதில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி இல்லாமல் சில கட்சிகளால் பலன் பெற முடியாது என்பது தெரிய வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக உள்ளது." என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
    • "வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்"

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கின. இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று(ஜன.15) அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம், அதனால்தான் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை. கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன. தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிகமாக நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில், டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நியாயம் கேட்டு டேனிஷ் அலி புகாரளித்தார். ரமேஷ் பிதுரியும் டேனிஷ் அலிக்கு எதிராக புகார் அளித்தார். தனக்கு நியாயம் கேட்டும் பாராளுன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னைப் போலவே அவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், டேனிஷ் அலியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டீர்கள். ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

    இருப்பினும், தனது கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, "எந்தவிதமான கட்சி விரோதப் பணிகளையும் செய்யவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்த நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். கட்சிக்கு எதிரான எந்த வேலையும் செய்யவில்லை. இதற்கு எனது அம்ரோஹா பகுதி மக்களே சாட்சி.

    பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நான் கண்டிப்பாக எதிர்த்துள்ளேன், அதைத் தொடருவேன். இதைச் செய்வது ஒரு குற்றம் என்றால், அதற்காக எந்த தண்டனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

    தனக்கு எதிரான கட்சியின் முடிவு "துரதிர்ஷ்டவசமானது". அதே நேரத்தில், தனக்கு மக்களவைச் சீட்டு வழங்கியதற்காக மாயாவதிக்கு நன்றி" என்று கூறினார்.

    • திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பட்டியலின மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது.
    • இந்திய திருநாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. குடிமக்களின் தனிமனித சுதந்திரம், குடியுரிமை சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் போக்கை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு பேசினார்.

    பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக ஏப்ரல் 14 முதல் டிசம்பர் 6 - ந்தேதி வரை சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலையை உருவாக்க பகுஜன் யாத்திரை என்ற தலைப்பில் சென்னை மண்டலம் தழுவிய நடைப்பயணம் திட்ட மிடப்பட்டு அந்த நடைப்பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல், போக்குவரத்து வழித்தடம், நிகழ்வுகள் நடை பெறும் இடங்கள், உள்ளிட்ட எல்லாம் விவரங்களும் அடங்கிய விவர குறிப்புகளுடன் முன்ன தாகவே காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி நடைபயணத்திற்கான அனுமதியை காவல்துறை மறுத்தது. தற்போது அதே காவல்துறை பாரதிய ஜனதா கட்சி அனுமதி கேட்டவுடன் எவ்வித மறுப்பு மின்றி அனுமதி வழங்கியுள்ளது. சனாதான எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பேசுகின்ற தி.மு.க. அரசின் இச்செயல் பா.ஜனதாவுடன் அதன் இணக்கமான போக்கை அப்பட்டமாக அம்ப லப்படுத்துகிறது. அதேபோல் பட்டியலின மக்கள் துணை திட்டத்தின் மூலம் ஒதுக்கிய நிதியானது அவர்களின் தனி நபர் வருமான உயர்வு திறன், மேம்பாடு வசதிகள் ஆகியவற்றிற்காக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டி உள்ளது.

    ஆனால் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியி லிருந்து ரூபாய் 1540 கோடியை எடுத்து தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பட்டிய லின மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது. இந்திய திருநாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. குடிமக்களின் தனிமனித சுதந்திரம், குடியுரிமை சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்ப ட்டுள்ளது. உச்ச நீதிமன்றங்கள் காவல் துறை யினருக்கு வழி காட்டுதல்களை வழங்கியுள்ளது.

    அவற்றையெல்லாமல் பொருட் படுத்தாமல் திரு வள்ளூர் மாவட்ட காவல்துறை சாதிய வன்மத்தோடு நடந்து கீழானூர் கிராமத்தில் 21 வயது நிரம்பிய பெண் மீதும் 64 வயது நிரம்பிய மூதாட்டி மீதும் கருணையற்ற முறையில் பிணையில் வர முடியாத கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளை ஜாதிய வன்மத்தோடு திரு வள்ளூர் மாவட்ட காவல் துறை அதிகாரி பதிவு செய்துள்ளார். மக்கள் மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது ஜாதிய வன்மத்தோடு பொய் வழக்குகள் பதிவு செய்யப்படு கிறது எஸ்.சி. எஸ்.டி. சமுதாய மக்களின் மீதும் படித்த இளைஞர்களின் மீதும் அவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் விதமாக காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக 110 என்ற விதியை தவறாக பயன்படுத்து கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி யின் மேற்கு மாவட்ட தலைவர் பகுஜன் பிரேமை கைது செய்து அடுக்காக வழக்கு களை பதிவு செய்து அவரை மக்கள் பணி செய்ய விடாமல் மணல் சவுடு திருடும் மாபியா விடம் பணம் பெற்றுக் கொண்டு நிரந்தரமாக சிறையில் அடைக்க காவல்துறை முயற்சி செய்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டித்து கீழானூர் பொதுமக்கள் வருகின்ற 15 - ந்தேதி 76- வது சுதந்திரதின நாள் அன்று குடியுரிமை ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    மேலும் மக்களாட்சி தத்து வத்தின் அடிப்படையில் தேர்த லில் வெற்றி பெற்ற மாபெரும் அங்கீகாரங்களான ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலை வர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பதவி களையும் ராஜினாமா செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பொன் கிருஷ்ணன், பெரியன்பன், சத்தியமூர்த்தி, முகமது அப்பாஸ், அம்பேத ஆனந்தன், தேவா, முற்போக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் மார்க்ஸ், மற்றும் கட்சி தொண்டர்கள் 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
    • கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வேம்பேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதனை எர்ணாகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கோதண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மண் குவாரிக்கு கீழானூரை சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் பிரேம்குமார் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோதண்டன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இன்று அதிகாலை பகுஜன் சமாஜ்கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இவரது மனைவி கீழானூர் ஊராட்சி தலைவியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பகுஜன்சமாஜ் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
    • மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூர் அரண்மனை மைதானத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்-அமைச்சருமான மாயாவதி கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அதன்பின்பு பெங்களூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த மாயாவதியை புத்த பூர்ணிமா தினத்தன்று பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவருடைய மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

    அப்பொழுது ஆம்ஸ்ட்ராங் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு இந்திய முதல் பெண் ஆசிரியரான சாவித்திரி பாய் பெயரை மாயாவதி சூட்டி, குழந்தையை முத்தமிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டில் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு தெலுங்கானா மாநிலத் தலைவரும் முன்னாள் டிஜிபி ஆர். எஸ். பிரவீன் குமார், (ஐபிஎஸ்) தலைமை தாங்கினார். இந்த மாநாட் டில் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சமமான இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த தெலுங்கானா நம்பிக்கை மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரும் நம்பிக்கையோடு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

    எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் உங்கள் நம்பிக்கையின் நட்சத்திரமான பிரவீன்குமாரை நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமர்த்தினால் தெலுங்கானா ஒரு மின் மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் சித்தார்த்த மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • தாட்கோ மூலம் கடன் வழங்க மறுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளனர்.
    • இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தனி தொகுதி அமைப்பு செயலாளராக பாலு இருந்து வருகிறார். இவர் 2021-2022- க்கான ஆடு வளர்ப்பு சிறு தொழில் கடனை கடந்த 24.11.2020 அன்று தாட்கோ மூலம் 8 பேருக்கு கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். அப்பொழுது கடந்தாரர்களுக்கு விண்ணப்பம் தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளனர். இது சம்பந்தமாக கடந்த 24.11. 2020 ஒவ்வொரு கடன் விண்ணப்பத்தாரர்களுக்கும் கடந்த 31/7/2021 அன்று நேர்காணல் நடை பெற்றுது. கடன் தாரர்களுக்கு 15 தினத்திற்குள் குமராட்சி தனியார் வங்கி மேலாளர் கடன் வழங்குமாறு உத்தரவு விண்ணப்பம் வந்துள்ளது. ஆனால் வங்கி மேலாளர் இந்த 8 பேரையும் அழைத்து நேர்காணல் வைத்து க தாட்கோ மாணியத்துடன் கடன் தருகிறேன் என்று ஒப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் இதனால் வரை அதற்கு தாட்கோ மூலம் வங்கி கடன் வழங்கவில்லை. மீண்டும் வங்கிக்கு சென்று கடந்த 18.02.2022 அன்று வங்கி மேலாளிடம் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். ஆனால் வங்கி மேலாளர் அலட்சியமாக இருந்து உள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாட்கோ அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கிக்கு முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பு செயலாளர் பாலு தெரிவித்து உள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவி வித்யா ராஜசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×